Raagaa's recipes
தேவையானவை:
மிகவும் பொடியாக நறுக்கிய பழங்கள் (மாம்பழம், ஆப்பிள், பைனாப்பிள், வாழைப்பழம், தர்பூஸ்) எல்லாம் சேர்ந்து - அரை கப்,
வேகவைத்த சேமியா - 2 டேபிள்ஸ்பூன்,
ஏதேனும் ஃபுட் கலர் சேர்த்து வேகவிட்ட ஜவ்வரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
சப்ஜா விதை (நாட்டு மருந்துக் கடை, டிபார்ட்மென்ட் கடையில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன் (ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்),
ஐஸ்க்ரீம் - 50 கிராம்,
டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்.
செய்முறை:
உயரமான கண்ணாடி டம்ளரில் சிறிது பழக்கலவையை போடவும். பின்னர் சப்ஜா விதையை சேர்க்கவும்.
பிறகு சேமியா, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை, பின்னர் ஜவ்வரிசி, அதன் மேல் சிறிதளவு பழக்கலவை என்று நிரப்பி... இறுதியில் ஐஸ்க்ரீம் முழுவதையும் போட்டு, மேலே டூட்டி ஃப்ரூட்டியை தூவிப் பரிமாறவும்.
No comments:
Post a Comment