ஏற்கனவே ‘ரோவர்’ எனப்படும் ஒரு கருவியை நாசா செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ள போதும், அது ஆராய்ச்சிகள் செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பி வைப்பதில் தாமதமாக இருக்கிறது. சில நேரங்களில் வந்து சேர்ந்த தகவல்கள் சரியாக இருப்பதில்லை என்பதால் அந்த திட்டத்தைக் கைவிட்டு ரோபோ தேனீகளை அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். இவை நிஜ தேனிக்களை போல வேகத்தில் படு சுட்டியாக இருக்க போகின்றனவாம்.
இதற்கு ‘மார்ஸ் பீஸ்’ எனப் பெயரிட்டுள்ளனர். கடந்த ஒன்பது மாதங்களாக இதற்கான ஆராயச்சிகளை புயல் வேகத்தில் முடிக்கி விட்டுள்ளது நாசா. இவை 3 முதல் 4 சென்டி மீட்டர் வரை அளவு கொண்டது. மார்ஸ் கிரகத்தின் கிராவிட்டியை எளிதாக எதிர் கொள்ளும் வகையில் இந்த தேனீக்கள் உருவாக்க படுவதால், இவற்றால் சுலபமாக பறந்து கொண்டே தகவலை சேமிக்க முடியும். அது மட்டுமின்றி செவ்வாய் கிரகத்தில் இருக்கும் காற்றின் அளுத்த அளவினையும், மீத்தேன் வாயு பற்றிய தகவலையும் நாம் தெரிந்து கொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இந்தத் தேனீ ரோபோவில் சிறிய கேமரா, சிறிய சென்சார் என்று நிறைய வசதிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு தேனீயிலும் ஒவ்வொரு வசதியை ஏற்படுத்தி அங்குப் பறக்க வைக்கலாம் என்ற ரீதியில் ஆராய்ச்சி நடக்கிறது. ஒன்று காற்றிற்கு, ஒன்று மண்ணிற்கு, ஒன்று நீருக்கு அடியில் செல்வதற்கு என ஒவ்வொரு ரோபோவிற்கும் தனி தனி வேலைகளாம்.
இவற்றில் சிறிது நேரம் தான் சார்ஜ் இருக்கும என்பதனால் அங்கு இதனுடன் ஒரு ரோவர் அனுப்பப்பட உள்ளது. இதை வைத்து அனைத்து ரோபோக்களுக்கும் ‘சார்ஜ்’ செய்ய முடியும், அதே நேரம் சேகரித்த தகவல்களை உடனுக்குடன் பூமிக்க அனுப்பவும் முடியும், மற்றதை விட மிக முக்கியமாக எரி பொருள் செலவும் மிகக் குறைவாகும்.
எனவே இந்த ‘ரோபோ தேனீக்கள்’ இன்னும் இரண்டு வருடங்களில் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபடவுள்ளது.
No comments:
Post a Comment