This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 11 December 2018

Vadacurry | saidapettai special

VICKEY'S RECIPES :)
தோசை , இட்லிக்கு எப்போவும் சட்னி , சாம்பார் தான் சைட்டிஷ் வைப்போம் . ஒரு சேஞ்சுக்கு நம்ம சைதாப்பேட்டை செட் தோசை வடகறி காம்பினேஷன் ட்ரை பண்ணலாம் . என்னை விட என் husband தான் வடகறி ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க . அதுலயும் ஒரு வித்யாசமான காம்பினேஷன் வச்சுருப்பாரு அது என்னனா பொங்கல் + வடகறி .சென்னை சைதாப்பேட்டை மாரி ஹோட்டல் தான் செட் தோசை  , வடகறி ரொம்ப பேமஸ்னு கேள்விபட்ருக்கேன். எல்லாரும் இந்த ரெசிபி ட்ரை பண்ணி பாத்துட்டு சொல்லுங்கோ :)

தேவையான பொருட்கள்
For vadai :
கடலை பருப்பு - 1 கப்
சோம்பு - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
உப்பு தேவையான அளவு
எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
For gravy :
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பிரியாணி இலை-1
பட்டை -1
கிராம்பு -2
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது )
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - 1 /2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 / 2 ஸ்பூன்
கறிவேப்பில்லை , கொத்தமல்லித்தழை
உப்பு

செய்முறை :
for vadai

  • முதலில் பருப்பை ஒரு 2 முதல் 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும் . நன்றாக ஊறிய பின்னர் மிக்ஸியில் ஊற வாய்த்த பருப்பு, காய்ந்த மிளகாய் , சோம்பு , உப்பு சேர்த்து வடை பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.



  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு வடைகளாக பொரித்து எடுத்து வையுங்கள்.



  • For Gravy :

    • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , அதில் பட்டை , கிராம்பு , பிரியாணி இலை சேர்த்து பின்னர் வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
    • வெங்காயம் வதங்கிய பின்னர் அதில் கறிவேப்பில்லை,இஞ்சி பூண்டு விழுது , மசாலா தூள்கள் எல்லாம் சேர்க்கவும்.



    • 1 நிமிடம் வதக்கிய பின்பு  தக்காளி விழுது ( 2 தக்காளி மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்) , 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போடு வையுங்கள் . தக்காளி பச்சை வாசனை போன பின்பு மேல எண்ணெய் மிதந்து வரும்.

    • எண்ணெய் மிதந்து வந்த பின்னர் பொரித்து வைத்துள்ள வடைகளை உதிர்த்து சேர்க்கவும் . இறுதியாக உப்பு , கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

    • அவ்ளோ தாங்க சூடான சுவையான சைதாப்பேட்டை வடகறி தயார்.





    No comments:

    Post a Comment

    எழுத்தாளர்கள் கவனத்திற்கு

    இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.