👉 அன்னாசி பழத்தில் புரதமும், மாவுச்சத்தும், கொழுப்புச்சத்தும் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் நிறைந்துள்ளது.
👉 உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் அன்னாச்சி பழத்தில் நிறைந்துள்ளது.
👉 நார்ச் சத்து, புரதச்சத்து, இரும்பு சத்துகளை கொண்ட அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.
👉 அன்னாசி பழம் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் செய்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் தலைவலி, கண் நோய், காது நோய், வாய்ப்புண், பல் நோய், மூளைக்கோளாறு, தொண்டை சமந்தமான நோய்கள், ஞாபக சக்தி குறைவு போன்றவை குணமடையும்.
👉 உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணிக்கு அன்னாசிப் பழம் சிறந்த மருந்தாகும்.
👉 அன்னாசி பழச்சாற்றை மஞ்சள் காமாலை உள்ளவர்கள் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி பழச்சாறு சிறந்த ஒரு டானிக்.
👉 இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க அன்னாசி பழம் உதவுகிறது.
👉 அன்னாசி ஜுஸ் உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதோடு உடலுக்கு பலத்தை தரும்.
👉 அன்னாசி பழச்சாறு சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும்.
👉 அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசி உடனே அடங்கும்.
👉 வயிற்றுப்புண் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜுஸைக் குடிக்கக்கூடாது.
No comments:
Post a Comment