எனை நீ கடந்து செல்லும் நேரத்தில்
கண் வழியே கணநேரம் வீசும் புன்னகை
என்னுள் இறங்குதடி இனிக்கின்ற விஷமாய்
சுடுகின்ற நிலவொளியாய் குளிர்கின்ற சூரியனாய்
நல்ல யோசனை மா கண்டிப்பா செய்யலாம் என்று மருமகளை மனது விட்டு பாராட்டினார் ஜானகி
லக்ஷ்மியின் யோசனைப்படி திட்டமிடப்பட்டு கல்யாண ஏற்பாடுகள் நடந்தேறின ஆனந்தின் பெற்றோரின் பேராசையால் திருமண செலவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டபோது தன் தாய் வீட்டு சீதனத்தையும் தந்தாள் லக்ஷ்மி.
இது குறித்து ஷேஷகிரியும் ஜானகியும் வருத்தப்பட்ட போதோ, "அத்தை நான் இந்த வீட்டு பொண்ணு எனக்கு என் பிறந்த வீட்டுல குடுத்தது என் பொருள். அதை நான் என்ன செஞ்சாலும் யாரும் ஒண்ணும் கேட்க மாட்டங்க, தவிர இப்போ நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும். அதனால இத நினைச்சு வருத்தபடாம கல்யாண வேலைய மட்டும் பாப்போம் வாங்க" என்று சமாதானபடுத்தி அழைத்து சென்றாள்.
ஒரே முகூர்த்ததில் ஆனந்த் -ராதா திருமணமும் சகுந்தலா -விஸ்வநாதன் திருமணமும் நடந்தேறியது.
அடுத்த ஆறு மாதங்களுக்குக்குள் ரங்கனாதன் கௌசல்யா திருமணம் நடக்க நாள் குறித்து நிச்சயம் செய்தனர். திருமணம் முடிந்து புகுந்த வீடு சென்றாள் ராதா.
இங்கே சகுந்தலாவின் வரவும் நடந்தேறியது . மேலும் ஒரு மாதம் ஓடி இருந்த நிலையில் ஆனந்த்துக்கு அருகில் இருந்த ஊருக்கு பணி மாறுதல் கிடைத்தது சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த ஆனந்தின் தாய் மகன் ஊருக்கு சென்ற உடன் ராதாவை படுத்த துவங்கினார்.
சாதாரணமாக செய்த செயல்களுக்கு எல்லாம் சண்டை போட்டார்...
தனக்கு பிடிக்காது என்பதால் ராதாவிற்க்கு அவர் செய்யும் கொடுமைகளை மாமனாரும் தட்டிகேட்கவில்லை... வாரம் ஒருமுறை வாரவிடுமுறை அன்று மட்டுமே வீட்டுக்கு வரும் கணவனிடம் அவனுடைய நிம்மதிக்காகவே தான் சந்தோஷமாக இருப்பதாக நடித்தாள் ராதா .
ரங்கனாதனின் திருமணத்திற்கு ராதா குடும்பத்தினரை அழைக்க சென்ற ஜானகியின் கூரிய கண்களுக்கு மகளின் நிலை பட்டது மெல்ல மகளை விசாரித்து விபரங்களை அறிந்து கொண்டார்.
திருமண நாளும் வந்தது. திருமணத்துக்கு வந்த ஆனந்திடம் மகளின் நிலை குறித்து பேசினார் அந்த தாய் தான் சொல்வதை வைத்து மட்டுமே நம்பி முடிவெடுக்க வேண்டாம் எனவும் உண்மை நிலை விசாரித்து தெரிந்து கொள்ளும்படியும் கேட்டுகொண்டார்.
முதலில் தன்னை பெற்றவர்களை குறை கூறுவதாக ஆனந்த் கோபித்து கொண்டாலும் முடிவில் ஜானகியின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மனதைத்தொட சரியென ஒப்புக்கொண்டான் ஆனந்த்.
மாமியார் சொன்ன விஷயங்கள் மனதை உறுத்தியதாலும் அன்றைய அலுவலக பணியில் கவனம் செல்லாததாலும் வார இறுதிநாள் என்பதாலும் விடுப்பு எடுத்து கொண்டு யாருக்கும் சொல்லாமல் வீட்டுக்கு திடீர் என வருகை தந்த ஆனந்துக்கு தாய் தன் மனைவியை திட்டிக்கொண்டிருப்பது வித்தியாசமாக பட்டது.
தன் மகனை பார்த்த அவரும் சுதாரித்து கொண்டார் எதோ சாதாரணமான சண்டை என நினைத்தாலும் கண்களில் நீருடன் ராதாவை பார்த்தது மனதை பிசைய அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டி கோவிலுக்கு அழைத்து சென்றான்.
முதன் முறையாக தன் கணவனுடன் வெளியே செல்லும் ஆனந்தம் மனதை நிறைக்க தன் இயல்பான கலகலப்புடன் கோவிலுக்கு சென்றாள்.
ராதா அங்கு வந்த பக்கத்து வீட்டுகார தம்பதிகளுடன் இயல்பாக பேசியபடி பிராகாரத்தை வலம் வந்த வேளையில் பெண்கள் இருவரும் அமர்ந்துவிட ஆண்கள் மேலும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர் பேச்சின் இடையே இயல்பு போல ஆனந்த் தன் வீட்டில் நடக்கும் விபரங்களை கிரகித்து கொண்டான்.
கோவிலில் மனமுருக தனக்கு குழந்தை வரம் தர வேண்டிக் கொண்டாள் ராதா வீட்டுக்கு வரும் வழியில் தன் கணவனின் முகம் சரியில்லாது இருப்பதை கண்டு எதுவும் பேசவில்லை வீட்டுக்கு வந்தவுடனோ ஆனந்த் ராதாவுடன் முகம் குடுத்து பேசவில்லை.
மேலும் உடம்பு சரி இல்லை என சொல்லி விடுப்பை நீட்டித்தான் ஆனந்த். பக்கத்துவீட்டுக்காரர்கள் தவிர நண்பர்களிடமும் விசாரித்து உண்மை அறிந்த ஆனந்த் ராதாவிடம் கோபப்பட்டது தன்னிடம் இருந்து மறைத்ததற்க்காகவே. கணவனின் பாராமுகம் மனதை உறுத்த நிலைகுலைந்து போனாள் ராதா...
ஆனந்த் ஊருக்கு கிளம்பியபின் ராதாவின் வாழ்வு எப்போதும் போல செல்ல வங்கிக்கு சென்றவுடன் சொந்த ஊருக்கு மாறுதல் வேண்டி விண்ணப்பித்தான் அந்த வார இறுதியில் வீட்டுக்கு வந்த ஆனந்திடம் பாராமுகத்தை விட்டுவிடும்படி ராதா கெஞ்ச மனம் தாங்காத ஆனந்த் இயல்பாக பேச துவங்க அங்கே அன்று இல்லறம் இனியதானது.
நாட்கள் நகர ஊர் மாறுதல் பெற்று ஆனந்த் வந்தபின் வாழ்க்கை இனிமையானது. ராதாவுக்கு சூர்யா அவர்கள் வாழ்வில் வந்தபின் வசந்தமும் வந்தது. இரண்டாவது முறையாக ராதா கருவுற்ற போது சகுந்தலாவும் பிரசவித்திருக்க கௌசல்யாவின் வளைகாப்பும் நடந்தது வளைகாப்புக்கு வந்திருந்த ஆனந்தின் தாய் லக்ஷ்மி குழந்தை இல்லாதிருப்பதை குறித்து சபையில் பேசிவிட தன் தாயை கண்டித்தான் ஆனந்த்... வாய் தகராறு முற்றிவிட தன் மகனிடம் சண்டை போட்டார் ஆனந்தின் தாய்.
தாயை வழி அனுப்பிவிட்டு வந்த ஆனந்த் முகம் கருக்க நின்றிருந்த லக்ஷ்மியிடமும் ஷேஷகிரியிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு சூழ்நிலையின் கனம் தாங்காது வெளியே உலாவ சென்றான். கவனமில்லாது ரோட்டை கடந்து சென்ற ஆனந்த்தின் மீது லாரி மோத உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டான் ஆனந்த்.....
No comments:
Post a Comment