“ஊரு உலகத்துலே அக்கிரமம் அதிகமாப் போச்சுங்க!”
“அதை நினைச்சா எனக்கும் கவலையாத்தாங்க இருக்கு... இருந்தாலும் அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?”
“ஊர்லே ஒர் அக்கிரமம்... அநியாயம்... நடந்தா... நம்மை மாதிரி உள்ளவங்க அதையெல்லாம் பார்த்துக்கிட்டு சும்மா இருக்கக் கூடாதுங்க...ஏதாவது பண்ணனும்!”
“சும்மா இருக்கறதைவிட ஏதாவது செய்யறது நல்லதுன்னுதான் பெரியவங்களும் சொல்றாங்க!”
“அவங்களும் சொல்றாங்களா?”
“ஆமாங்க...! ஒரு சுவர் எப்பவாவது பொய் சொல்லுதா? ஆனாலும் அது எப்போதும் ஒரு சுவராகதான் இருந்துக்கிட்டுருக்கு! ஆனா மனுஷன் பாருங்க... அவன் பொய் பேசறான்...அவனே பிறகு தெய்வமாவும் ஆயிடறான்... அதனால சும்மா இருக்கறதைவிட ஏதாவது ஒண்ணை அது தவறாவே இருந்தாக்கூட செஞ்சிக்கிட்டிருக்கிறது மேல்! பசு ஒரு போதும் பொய் சொல்றதில்லை... ஆனாலும் காலமெல்லாம் அது பசுவாவேதான் இருக்கு! அதனாலே ஏ மனிதனே நீ ஏதாவது ஒன்றைச் செய்... ஒன்றுமே செய்யாமலிருபதைவிட அது எவ்வளவோ மேலானது. உன்னுடைய குறிக்கோளை அடைய நீ ஏன் முயற்சி செய்யக் கூடாது...? தோல்விகள் மூலம் நாம் புத்திசாலிகள் ஆகிறோம்... இதுதான் பெரியவங்க சொல்ற கருத்து!”
நல்ல கருத்துங்க... நான்தான் அதைக் கொஞ்சம் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்... ஆனாலும் இப்ப திருந்திட்டேன்!”
“அப்படிங்களா?”
“ஆமாங்க! ஊரு உலகத்துலே திருட்டு அதிகமாப் போச்சுன்னு பேப்பர்லே படிச்சேன்... என்னாலே அதை சகிச்சிக்க முடியலே... அப்படி ஒரு செய்தியைப் படிச்சதுக்கு அப்புறமும் என்னலே சும்மா இருக்க முடியலே...!”
“என்ன செஞ்சிங்க?”
நானும் திருட ஆரம்பிச்சுட்டேன்!”
-தென்கச்சி கோ.சுவாமிநாதன் கதை
No comments:
Post a Comment