விக்ரமாதித்தன் தொடர்பாக சமண மத நூல்களில் ஒரு கதை உண்டு. அவனைப் பற்றிய பல கதைகளில் ஒன்று இது. ஆனால் எல்லாக் கதைகளும் காலப்போக்கில் ஒரே விக்ரமாதித்தன் தலையில் கட்டிவிடப்பட்டது. விக்ரமாதித்தின் என்றால் ‘வீரத்தில் சூரியன்’ என்று பொருள். வீரத்தில் சூரியனைப் போல ஒளி உள்ளவன், தஹிப்பவன், புகழ் பெற்றவன் என்று பல பொருள் உள்ளதால் ஆதித்தன் (சூரியன்) என்ற பெயர் பல மன்னர்களின் பெயரில் — சோழ மன்னர்கள் – உள்பட சேர்க்கப்படும்.
வேதாளமும் விக்ரமாத்தித்தனும் என்ற கதையில் வரும் மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். அவனைப் பற்றிய ஒரு சுவையான கதை இதோ:
உஜ்ஜைனியை தலைநகராகக் கொண்டு கர்த்தபில்லா என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்பொழுது உஜ்ஜையினி நகரில் இருந்த மடத்தில் காலகாசார்யா என்ற சமண மதத் துறவி தலைவராக இருந்தார். அவருக்கு சரஸ்வதி என்ற பெயருள்ள அழகான சகோதரி இருந்தாள். அவளை மடத்திலிருந்து மன்னன் கர்த்தபில்லா கடத்திச் சென்றான். உடனே காலகாசார்யாவுக்கு கோபம் வந்தது.
பொதுவாக சமணர்கள் வன்முறையில் இறங்கமாட்டார்கள். ஆகவே அவர் முறையாக மன்னனைச் சந்தித்து சகோதரியை விட்டுவிடும் படி இறைஞ்சினார். ஆனால் மன்னனோ, ராவணன், சீதையை விடுதலை செய்வதற்கு மறுத்தது போலவே சரஸ்வதியை விடுதலை செய்யவும் மறுத்தான். அத்தோடு காலகாசார்யாவை இகழ்ந்தான். அவமானப்படுத்தினான்.
காலகாசார்யா, அருகிலுள்ள சக மன்னன் ஒருவனை அணுகி உதவி கேட்டார். அவனிடமோ குறைவான படைகளே இருந்தன. காலகாசார்யா சொன்னார்: நானே பயிற்சி கொடுத்து, நானே தளபதி பதவி ஏற்று படை நடத்துவேன் என்று. அவ்வாறே செய்தார். கர்த்தபில்லாவை வென்று சகோதரியை மீட்டார். அந்த மன்னனையும் மன்னித்தார். மன்னன் காட்டில் சென்று வசித்தான். அவனை ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. அவனது மகனே விக்ரமாதித்யன். அவன் பெரியவன் ஆனவுடன், பக்கத்து தேசத்தில் படை திரட்டி உஜ்ஜைனி மீது படை எடுத்தான். அவன் வெற்றி பெற்ற வருடத்தில் இருந்து விக்ரம சகாப்தம் என்ற புது ஆண்டுத் தொடக்கம் ஏற்பட்டது.
இந்தக் கதைகள் எல்லாம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்தான் எழுதப் பட்டன. இது தொடர்பான குட்டி ஓவியங்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வரையப்பட்டன. ஆக, எது உண்மை, எவ்வளவு தூரம் உண்மை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
காலகாசார்யா கதையைக் கூறும் ஓவியங்கள் பல மியூசியங்களில் உள்ளன. அமெரிக்காவில் ப்ரூக்ளின் மியூசியத்திலும் பல குட்டி ஓவியங்கள் இருக்கின்றன.
வேதாளம் சொன்ன இருபத்தி ஐந்து கதைகள்:
இதில் வேதாளமானது அரசரிடம் ஒவ்வொரு புதிர் கதயைக் கூறி முடிக்கும் போதும் ஒரு கேள்வியைக் கேட்கும் என்றும், ஒவ்வொரு சரியான பதிலுக்குப் பிறகும் தன்னிடமிருந்து சென்ற வேதாளத்தை அரசர் பிடிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அரசர் ஒரு சாதுவால், வேதாளத்தைக் கொண்டுவந்து அவரிடம் சேர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் கொண்டுவரும்போது பேசினால் வேதாளம் மீண்டும் அதன் இடத்திற்கே பறந்து போய்விடும் என்பதால்,கொண்டுவரும்போது ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அரசருக்கு விடை தெரியாமலிருந்தால் மட்டுமே அவர் மௌனமாக இருக்கலாம், இல்லையெனில் அவரது தலை வெடித்துச் சிதறிவிடும். துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு வினாவிற்கும் அரசர் விடை கண்டுபிடித்துவிடுவதால், கடைசி வினா விக்ரமாதித்யாவை திகைக்கவைக்கும் வரை இருபத்து நான்கு முறை வேதாளத்தைப் பிடிப்பதும் அதனை தப்பியோட விடுவதும் தொடர்கிறது. கதா-ஸரித்ஸாகராவில் இக்கதைகளின் ஒரு வடிவம் பதிந்திருப்பதைக் காணலாம்.
சிம்மாசனத்தைப் பற்றிய கதைகள்:
விக்ரமாதித்யா சிம்மாசனத்தை இழந்து, அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அரசர் போஜ, பரமரா தர்நாட்டு அரசரால் மீட்கப்பட்ட சிம்மாசனத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. பிறகு வந்த அரசரும் புகழ்வாய்ந்தவர். மேலும் இக்கதைகளின் தொகுப்பு, அவர் அந்த சிம்மாசனத்தில் அமர மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதாகும். கூறப்போகும் கதையில் சித்தரிக்கப்படுகின்ற விக்ரமாதித்யாவைப் போன்று தயாளகுணம் உடையவராய் இருந்தால் மட்டுமே அச்சிம்மாசனத்தில் ஏறி அமரமுடியும் என்று கூறும் பேசும் தன்மை வாய்ந்த 32 பெண் பதுமைகளால் (பொம்மைகளால்) இச்சிம்மாசனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது போஜ அரசரின் 32 முயற்சிகளுக்கும் ஒவ்வொரு கதை என விக்ரமாதித்யாவின் 32 கதைகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் ஒவ்வொறு முறையும் போஜ அரசர் தன் தாழ்வுத்தன்மையை ஒப்புக்கொள்கிறார். இறுதியாக, அப்பதுமைகள் அவரது அடக்கத்தைக் கண்டு மகிழ்ந்து அவரை சிம்மாசனத்தில் ஏறி அமர விட்டுவிட்டன.
No comments:
Post a Comment