காற்றோடு கலந்துவிட்ட
பூக்களின் வாசமும்,
உண்மை உறவுகளின் நேசமும்
என்றுமே பிரிவதில்லை,
உனக்கென யோசிக்கும்
ஒர் உயிரை நீ இழந்தால்,
உயிர் வாழ்ந்தும்
பயனில்லை!
இதோ நமக்கு முன்னால வரிசைல நிக்கிற குடும்ப இளவல்கள் பற்றி ஒரு சின்ன அறிமுகம் ரங்கநாதன் -கௌசல்யா ஷேஷகிரி ஐயாவின் தம்பியும் அவரோட மனைவியும் தாங்க. அடுத்த வருஷம் மணிவிழா காணபோகும் தம்பதி.
இவர்களின் இன்னொரு குடும்ப தொழிலான ஸ்ரீ ஹோட்டல்ஸோட நிர்வாகம் இவர் கீழ தான் இருக்குதுங்க.
அங்க பாருங்க டைனிங் ஹால் ல நின்னுகிட்டு வரவங்கள சாப்பிட வெச்சு விசாரிச்சு அனுப்புற ஜோடிதான் ஆனந்த் -ராதா நம்ம ஷேஷகிரி,ரங்கநாதன் இருவரின் தங்கையும் அவங்க வீட்டு மாப்பிள்ளையும் தாங்க 2 வருஷம் முன்னாடியே மணிவிழா கண்ட தம்பதி இவங்க.
குடும்பத்தின் அசையா சொத்துக்கள் இவங்க பொறுப்புலதான் இருக்கு.
வாசல்ல வந்தவங்கள வரவேற்க நிக்கிற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி இவங்களோட மூத்த மகனும் மருமகளும் தாங்க.
ஐயோ அது யாருப்பா குட்டி ஏஞ்சல் அட அக்க்ஷிதா குட்டி அம்மாடி இவங்க அறுந்த வால் ஆச்சே.
தொழில் ல எந்த ஒரு சிக்கலயும் ஈசியா சமாளிக்குற சூர்யா-பிரவர்ஷிணி ஜோடி சமாளிக்க முடியாம திணறுவது இவங்க செய்யற சேட்டைய தாங்க.
பிள்ளைய பெத்தேனா இல்ல தொல்லைய பெத்தேனானு எனக்கே தெரியல இதுதான் பிரவர்ஷிணியோட லேட்டஸ்ட் புலம்பல்.
ஆசியோட சேத்து அன்பையும் அள்ளி வழங்கும் லக்ஸ் (லக்ஷ்மி அம்மா) பாட்டி அக்க்ஷிதாவுக்கு ரொம்பவே பிடிக்கும் தினமும் கதை சொல்லும் சேஷு தாத்தா கிட்ட கொஞ்சாம இருந்தா அக்க்ஷிதாவுக்கு தலையே வெடிச்சிருமுங்க வாசல்ல திடீர்னு ஒரே சலசலப்பு.
No comments:
Post a Comment