அனுபவங்கள் சொல்லி தந்த பாடம்
ஆயுள் வரை மறக்காது
களம் காண நீ இன்றி
ஆட்டம் சிறக்காது
வளர்கின்ற இளம் புயலே
நீ களம் காணும் கணத்திலே
இயற்கையும் அமர்ந்ததே
வெற்றி வேண்டி தவத்திலே
வரிசையா கார்கள் வந்து நிக்கும் சத்தம் கார்களில் இருந்து ஒரே சீரான உடைகளில் இறங்கும் பாடிகார்டுகளும் போலிசாரும் வரிசையை ஒழுங்கு படுத்த, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் வந்து இறங்கி மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டு கை குலுக்கி ஆசி பெற்று சென்றனர்.
என்ன முழிக்கறீங்க? அந்தோ பாருங்க அவங்கள வழிஅனுப்பி வெச்சுட்டு ஒருத்தன் உள்ளே வரான் பாருங்க, அவன் தான் ஸ்ரீ ருத்ரா. புயலினை ஒத்த வேகத்துடன் இந்திய கிரிக்கெட் அணியில் முன்னேறி வரும் ஆல் ரவுண்டர். இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் அப்படினு பேப்பருல எல்லாம் எழுதறாங்க.
வெளிநாட்டுல நடந்த ஒரு மேட்சுக்கு போயிட்டு இப்போதான் மணிவிழாவுக்கு வரார் அண்ணன். பய புள்ள மேன் ஆப் த மேட்ச் ஜெய்ச்சிருக்கு இந்தியாவுக்கும் வெற்றி, அதனால மன்னிச்சிருவோம்.
வெற்றி விழா, பிளைட் கேன்சல் அது இதுன்னு 1008 காரணம் சொல்லிட்டு, சொந்த தாய்மாமாவும் மாமனாருமான ஷேஷகிரி அய்யா 60ம் கல்யாணத்துக்கே லேட்டா வருது பக்கி.
இந்த சிங்கத்தையும் சிறு விழிஅசைவில் கட்டிப்போடும் சில்லுவண்டு ஒண்ணு இருக்குங்க, அவர் தான் அபினவ் நம்ம ஜுனியர் ஸ்ரீ ருத்ரா,
அது சரி, அது யாருங்க ஸ்ரீ ருத்ராவ முறைக்கறது?
பச்சை பட்டு உடுத்தி மீனாட்சி போல இருந்தாலும், கூட்டத்துக்கே கேக்காத ஹஸ்கி வாய்ஸுல ஸ்ரீ ருத்ராவ திட்டிகிட்டும் பத்ரகாளி லுக்கு விட்டுகிட்டு இருக்காளே அவதாங்க சரயு ஸ்ரீ ருத்ரா.
No comments:
Post a Comment