இரண்டு நாள் கழித்து காலை விடியல் ரம்யமாக விடிந்தது. தன் மாடி அறையில் இருந்து கீழ் இறங்கி வந்தான் வருண். வீடே அமைதியாக இருக்க, பணியாள் "அய்யா காபி" என்று ஒரு கோப்பையைக் கொடுத்தான். அதை பெற்று கொண்ட வருண் " அனைவரும் எங்கே " என்றான்.
"அம்மா மாதார் சங்கம் போய் இருக்காக, பெரிய அய்யா நேற்று இரவே தேனி போறதா சொன்னர் அய்யா "என்று முடித்தான்.
வருணுக்கு அப்போதுதான் நினைவு வந்தது தந்தை அன்று கூறியது. காபியை குடித்துவிட்டு தன் அரைக்கு சென்று அடுத்த அரை மணிநேரத்தில் கிளம்பி வந்தான். பணியாளிடம் தான் தேனி செல்கிறேன் என்று அம்மாவிடம் கூறும் படி உத்தரவிட்டு சென்றான்.
வருண் மனதில் "இவ்வளவு பெரிய வீடு ஆனால் நான் சாப்பிட்டேனா, இல்லையா என்று கேட்கக் கூட ஆள் இல்லை. அம்மா, அப்பாவை இரண்டு நாள் முன்பு பார்த்து அவ்வளவுதான். மூவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறோம் என்று பெயர், ஆனால் ஒருவரை ஒருவர் பார்ப்பது கூட கிடையாது."
இதை நினைத்தபடியே காரை எடுத்த வருணுக்கு எவ்வளவு தூரம் சென்றோம் என்றே தெரியவில்லை கார் சென்னை நகரை விட்டு தேனி செல்லும் பாதையை அடைந்திருந்தது. சுற்று சூழல் வேறுப்பட்டது, இதமான காற்று விசியது. மண்வாசனையும், காற்றின் ஈரப்பதமும் சேர்ந்து அவன் மனதை மயக்கும் விதமாக இதமாய் இருந்தது அந்த இயற்கை காட்சி.
நீண்ட நேரம் பயணம் செய்து ஒரு பெரிய கேட்டின் முன் கார் நிற்பதை கண்ட காவலாளி ஓடி வந்து கதவை திறந்து விட்டான், அங்கிருந்து அரை கிலோ மீட்டர் வரை உள்ளே சென்றது கார். வழி எங்கும் வண்ண, வண்ண ரோஜா மலர் பூத்து குலுங்கியது. அதன் நடுவிலே ஒரு பெண் பொம்மை, அதன் கையில் இருந்து தண்ணீர் கொட்டி கோண்டு இருந்தது அந்த பொம்மையை சுற்றி மஞ்சள் நிற சாமந்தி அழகாய் காட்சி அளித்து வருணை வரவேற்றது.
தோட்டத்தை சுற்றி கொண்டு கார் வீட்டு வாசலில் வந்து நின்றதும், உள்ளிருந்து வந்த லட்சுமி அம்மா " வாங்கய்யா, பெரியய்யா சொன்னாக நீங்க வருவிங்கன்னு" என்றார். (லட்சுமி அம்மா 20வது வருடங்களாக அங்கு வேலை செய்பவர்).
லட்சுமி அம்மாவை வேலை செய்பவர் என்று பார்க்காமல் தன் குடும்பத்தில் ஒருவராய் தான் பார்ப்பார்கள் அப்பாவும், மகனும் "எப்படி அம்மா இருக்கீங்க?" என்றான் வருண். அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி வருண் விசாரித்த அந்த ஒரு வார்த்தைக்கே.
அவன் உள்ளே சென்று விட பணி ஆட்களை அழைத்து பெட்டி, படுக்கைகளை அவன் அரையில் வைக்க சொன்னார்கள் லட்சுமி அம்மா. மாடியில் பெரிய படுக்கையரை, குளியலறை, பால்கனி என அனைத்து வசதிகளையும் கொண்ட அருமையான அறை, அதிலும் அது இயற்கை காட்சிகளை காண ஏதுவான இடம்.
மாலை நேரம், ஒரு காபி யோடு வருண் பால்கனி பக்கம் போய் அமர்ந்தான். வீட்டின் பின் பக்கம் சிறிய தோட்டம் , சில மரங்கள் என இருந்து அதை தாண்டி ஒரு பெரிய கேட். சிறிது தூரத்தில் சில வீடுகளும் தெரிந்தது. அங்கே வீட்டு வாசலில் குழந்தைகளும், அதன் பெற்றோர்களும் விளையாடிக் கொண்டு இருந்தார்கள், அதை பார்த்த படியே வந்து தூங்கி விட்டான்.
எப்பொழுது முழித்தோம் என்றே தெரியாமல் இருந்தவனுக்கு பணியாள் வந்து எழுப்பிய பிறகே தெரிந்தது இரவு ஆகிவிட்டது என்று. பணியாள், "இரவு உணவுக்கு உங்களை கூப்பிட்டாங்க" என்று கூறினான்.
"வரேன் " என்றவன், கீழ் இறங்கி சென்றால் அங்கு சாப்பிடும் அறையில் லட்சுமி அம்மாவை தவிர வேறு யாரும் இல்லை. மணியை பார்த்தால் 9.00 என்று காட்டியது. அவர்களிடம் "அப்பா எங்கே" என்றான்.
"அவர் அப்பவோ சாப்பிட்டு படுத்துட்டார்" என்று கூறினார்கள். வருண் ஒன்றும் கூறாமல் பேருக்கு சிலதை கொரித்து
விட்டு அவனும் சென்று விட்டான் தன் அறைக்கு வந்தவன் வானத்தை பார்த்து கொண்டு இருந்த வேளையில், வானமகளின் கருநீல ஆடையில் வைரங்காளாய் மின்னிய விண்மீன்கள் கண்ணை பறித்தன.
விண்ணுலக கன்னி இன்று புதுவித அழகிய ஆடையை உடுத்தி இருந்ததால், அந்த அழகிய காட்சியை ரசித்தப்படியே உறங்கினான். காலையில் அவன் கண் விழித்த போது வருண் காதில் விழுந்தது அவன் பெயர்தான், ஆனால் ஒரு சிறிய மாற்றம்.
அந்த மாற்றம் வருண் வாழ்க்கை மாற்றும்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
No comments:
Post a Comment