முல்லை மலர் பல்லழகு,
அல்லிமலர் விழியழகு,
அன்ன நடை அணங்கிவளோ,
பெண்களிலே பேரழகு!!!
பொதுவுல சரயு அமைதியான பொண்ணு தாங்க. அப்பனயும் புள்ளையயும் மேய்க்கறப்ப மட்டும் பத்ரகாளீ அவதாரம் தேவைப்படுது.
சரயு எப்பவுமே மாமனார் மாமியார் செல்லம்.
ஸ்ரீ ருத்ரா ஆனந்த் -ராதா தம்பதிகளின் இளையமகன், சூர்யாவின் தம்பி.
சரியா போச்சு போங்க! தன்னோட பொண்டாட்டி கிட்ட மாட்டுனா அடி உறுதி தெரிஞ்சுகிட்ட நம்ம ருத்ரா பதுங்கின இடம் டைனிங் ஹால்.
அவன் நேரம், அங்கேயும் ரெண்டு பேர் அவன விரட்டி விரட்டி அடிச்சாங்க. அது ரங்கநாதன் தம்பதிகளின் ரெட்டை பிள்ளைகளான க்ருஷ்ணா - யவனா இந்த கூத்த கை தட்டி விசிலடிச்சு உற்சாக படுத்த ரெண்டு பேர். அவங்க ஸ்ரீகாந்த் -பூர்ணா.
ஸ்ரீகாந்த்தும் - யவனாவும் புதுசா கல்யாணம் ஆன ஜோடி. இவன் யவனாவோட தாய் மாமா விஸ்வநாத்- சகுந்தலா தம்பதிகளின் ஒரே பையன்.
பூர்ணா - லக்ஷ்மி அம்மாவின் பெரியப்பா ஒரே பேத்தி.
இவளோட அப்பா அம்மா பாஸ்கரும் ப்ரபாவும்.
ஸ்ரீகாந்த் -பூர்ணா இடையே நட்பும் சகோதர பாசமும் உண்டு.
யவனாவும் பூர்ணாவும் இணை ப்ரியா தோழிகள்.
விஸ்வநாத் ஸ்ரீ ஹோட்டல்சின் பங்குதாரர்.
பாஸ்கர் மீனாட்சி எண்டர்பிரைசஸ் நிறுவனங்களின் பங்குதாரர்.
இத தவிர கௌசல்யாவும், லக்ஷ்மி அம்மாவும் ஆனந்த் ஐயாவ அண்ணானுதான் கூப்பிடுவாங்க.
பெத்தவங்களுக்கு ஒரே பிள்ளையான அவருக்கும் அதில் ரொம்ப சந்தோஷம்.
மொத்ததுல இவங்க குடும்ப பாச சரித்திரத்த வெச்சே பாசமலர் பார்ட் 2 எடுக்கலாம்.
இருங்க எங்க கிளம்பிட்டீங்க சாப்பிடாமலா கிளம்பறது? வாங்க சாப்பிட்டுட்டு வரலாம்.
No comments:
Post a Comment