VICKEY'S RECIPES :) |
பன்னீர் ரோல் சாப்பிடறதுக்கு எவ்ளோ டேஸ்டா இருக்குமோ அந்த அளவுக்கு அதை செய்யிறது மிகவும் சுலபம். உங்க கிட்ட மீந்து போன சப்பாத்தி இருக்க அப்போ உடனே இதை உங்க குழந்தைகளுக்கு செஞ்சு குடுத்து அசத்திடுங்க. எண்ணையில் பொறித்த ஸ்நாக்ஸ் பதிலாக இந்த மாதிரி ஹெல்த்தி ஆகவும் குடுக்கலாம் .இது குழந்தைகளுக்கு மட்டும் அல்ல பேச்சிலர்களுக்கும் ஒரு ஈஸியான ரெசிபியும் கூட . இதே பன்னீர் ரோல் இன்னும் பல முறைகளில் செய்யலாம் அதை பின் நாட்களில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பன்னீர் - 250 gm
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
சீரக தூள் - 1 / 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 / 2 டீஸ்பூன்
பச்சை குடைமிளகாய் - 1
கொத்தமல்லித்தழை
எலுமிச்சை சாறு
உப்பு
எண்ணெய்
அலங்கரிக்க
வெங்காயம்
முட்டைகோஸ்
தக்காளி சாஸ்
மயோன்னைஸ்(Mayonnaise optional )
செய்முறை
- ஒரு பௌலில் தயிர் , இஞ்சி பூண்டு விழுது , பொடியாக நறுக்கிய ( பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை , குடைமிளகாய் ), மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் , 1 ஸ்பூன் எலுமிச்சைசாறு , உப்பு சேர்த்து பேஸ்ட் போல் மிஸ் செய்யவும்.
- பின் அதில் விருப்பமான அளவில் பன்னீர் கட் செய்து சேர்க்கவும். நன்றாக மிஃஸ் செய்த பின்னர் பிரிட்ஜ்ல் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் இந்த பன்னீர் கலவையை சேர்க்க வேண்டும்.
- அந்த கலவை தண்ணீர் சுருங்கி நல்ல திக்க்காக திரண்டு வரும்.அப்பொழுது அடுப்பை அணைத்து கொள்ளவும். பன்னீர் ஸ்டப்பிங் ரெடி.
- சப்பாத்தி எடுத்து அதன் நடுவில் விருப்பமான சாஸ் அல்லது சட்னி தடவி கொள்ளுங்கள். நான் என் விருப்பத்திற்கு தக்காளி சாஸ் சேர்த்து கொண்டேன்.
- அதன் மேல் இந்த பன்னீர் கலவை வைத்து , மேல் நீட்டமாக நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ் மற்றும் குடைமிளகாய் சேர்த்து அலங்கரிக்கவும். விருப்பம் இருந்தால் சிறிது மயோன்னைஸ்(mayonnaise ) சேர்த்து சப்பாத்தி இரண்டு புறமும் மடிக்கி சுருட்டு கொள்ளுங்கள். டேஸ்டியான சப்பாத்தி பன்னீர் ரோல் ரெடி .
No comments:
Post a Comment