நெசவுத் தொழில் நுட்பத்தை ஆயக்கலைகளில் ஒரு கலையாகவே நமது முன்னோர்கள் பாவித்து பின்பற்றி வந்துள்ளனர். பருத்தியிலிருந்து பஞ்செடுத்து நூல் நூற்றது, கைத்தறி, தையல் முதலியவற்றை பண்டைக்காலம் தொட்டே தமிழர்கள் அறிந்திருந்தனர். நெசவுத்தொழிலை பற்றி வரலாற்று பதிவினை இந்த பதிவில் நாம் காணலாம்.
மகாவம்சத்தில் நெசவு
இலங்கையின் வரலாற்றின் முற்பட்ட நூலான மகாவம்சத்தின் கூற்றின் படி, இலங்கைக்கு விஜயனும் அவனது நண்பர்கள் 700 பேரும் தம்பபண்ணி எனும் இடத்தை வந்தடைந்ததன் பின்னர், விஜயனின் நண்பர்கள் அவ்விடத்தில் தோன்றிய ஒரு பெண்ணை (யாக்கினி) பின் தொடர்ந்து ஒவ்வொருவரும் செல்கின்றனர்.
அங்கே குவேணி அவர்களை பொய்கை ஒன்றில் சிறை வைக்கின்றாள். கடைசியாக அவர்களை தேடி விஜயன் செல்லும் போது, ஒரு மரத்தடியில் துறவி வடிவில் குவேணி நூல் நூற்று கொண்டிருக்கின்றாள், எனும் தகவல் விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கையில் நெசவு தொழில் பற்றிய அறிவு இருந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.
நெசவின் பிரிவுகள்
1. இயற்கையான பஞ்சுத்துணி நெசவுகள்
2. செயற்கை இழை பஞ்சுத்துணி நெசவுகள்
3. மிருக உரோம நெசவு
No comments:
Post a Comment