Raagaa's recipes:
தென்னிந்தியாவின் தனித்துவமான உணவு சுவையை மற்ற உணவு வகைகளை விட சாம்பார்தான் அதிகம் உணர்த்திடும். அதன் மதிப்பை நீங்கள் ஒரு முறை வெளி மாநிலங்களுக்கு பயணித்து இருந்தால் நன்றாகவே உணர்ந்திருப்பீர்கள். காலையில் ஆபீஸ் அவசரத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கும், கடையில் வாங்கி வந்தது ரசமா சாம்பாரா என குழம்பும் பேச்சிலருக்கும் செய்ய சுலபமான முறையில் இருக்கிறது நமது Raagaa வின் ரெடிமேட் சாம்பார் மிக்ஸ்.
தேவையானவை:
துவரம்பருப்பு - 100 கிராம்,
உளுத்தம்பருப்பு, தனியா, கடலைப்பருப்பு, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10,
பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு,
வெயிலில் நன்றாக காய வைத்த புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - தேவையான அளவு.
சாம்பார் செய்ய:
நறுக்கிய முருங்கை, கத்திரிக்காய், உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
வெறும் கடாயில் பருப்பு வகைகள், காய்ந்த மிளகாய், தனியாவை வறுத்துப் பொடிக்கவும். புளி, கொப்பரை துருவலையும் தனித்தனியே வறுத்துப் பொடிக்கவும்.
இரண்டு பொடிகளையும் ஒன்றாக சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் கலந்து... மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து, சேமித்து வைக்கவும்.
சாம்பார் தேவைப்படும்போது முருங்கைக்காய், கத்திரிக்காயை நறுக்கி உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு வேக வைக்கவும். அரைத்த சாம்பார் மிக்ஸை தேவைப்படும் அளவுக்கு இதில் சேர்த்து, தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். சாம்பார் வாசனை வந்ததும் இறக்கி, கறிவேப்பிலை சேர்க்கவும். இரண்டு மாதங்கள் வரை இந்த மிக்ஸை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment