Raagaa's recipes
தமிழ்நாட்டோட ஸ்பெஷலே காரசாரமான வத்த குழம்புதான், பந்தியில உக்காந்துட்டு வத்த குழம்பு வாங்காம எந்திரிச்சா அன்னிக்கி சாப்பாடு நமக்கு அரைகுறைன்னே அர்த்தம். அப்படிப்பட்ட வத்த குழம்புக்கு நாம ரெடிமேட் மிக்ஸ் செஞ்சு வச்சுகிட்டா, எப்ப வேணும்னாலும் சமைச்சுக்கலாம் இல்லையா, வாங்க ஒரு ரவுண்டு raagaa's recipeய பாத்துட்டு வரலாம்.
தேவையானவை:
கத்திரிக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி இவற்றில் ஏதேனும் ஒரு வற்றல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2.
வறுத்துப் பொடிக்க:
கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 7,
வெயிலில் நன்றாக காய வைத்த புளி - நெல்லிக்காய் அளவு,
பெருங்காயத்தூள், எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், வெந்தயம் ஆகியவற்றை வறுத்து, புளி சேர்த்து நன்றாக வதக்கிப் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, தாளிக்கும் பொருட்கள் மற்றும் வற்றலை சேர்த்து வறுக்கவும். இதை அரைத்து வைத்திருக்கும் பொடியுடன் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
வத்தக்குழம்பு தேவைப்படும்போது, ஒரு பாத்திரத்தில் குழம்பு மிக்ஸுடன் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.
இந்த மிக்ஸை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment