VICKEY'S RECIPES :) |
தட்டுக்கடை பரோட்டா சால்னா பெயரை கேட்டாலே சும்மா அதிருத்துல .ஹோட்டல்க்கு போன எப்படி பிரியாணி ஆர்டர் பண்ணாம வரமாட்டோமோ அதே மாதிரி தான் பரோட்டா சால்னா .இந்த காம்பினேஷன் அடிச்சிக்கவே முடியாது . விக்ரம் வேதா படத்துல நம்ம விஜய் சேதுபதி சொல்வாருலே அந்த கறி / சால்னா எடுத்து பரோட்டா மேல வச்சு ,அப்புறம் பரோட்டாவை சால்னால முக்கி வாயில போட்டு அப்டியே கண்ணா மூடுனா,ஐயோ அந்த டேஸ்டே தனி தான் போங்க . அந்த டேஸ்ட் இப்போ நம்ம வீட்லயும் செஞ்சு ருசிக்கலாமா.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது
பச்சை மிளகாய் - 1
மஞ்சள் தூள் - 1 /4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 & 1 /2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
புதினா இலை, மல்லித்தழை
எண்ணெய்
உப்பு
தாளிக்க
கிராம்பு - 2
பட்டை - 1
ஏலக்காய் - 1
அரைக்க
வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 6
செய்முறை
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும் .
- அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம்,சிறிதளவு புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து பொன்னிறம் ஆகும்வரை வதக்கவும் .
- அடுத்து இஞ்சி பூண்டு விழுது , பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும். தக்காளி நன்றாக மசிந்த பின்னர் , மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்க்கவும் .
- அரைக்க கொடுத்துவுள்ள பொருட்களை மிக்ஸில் அரைத்து சேர்க்கவும்.
- பிறகு தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி 10 - 15 நிமிடம் மிதமான சூட்டில் வைக்கவும் .
- கடைசியாக எண்ணெய் மிதந்து மேல வரும். அப்பொழுது அடுப்பை அணைத்து கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரிக்கவும் .
தட்டுக்கடை பரோட்டா சால்னா தயார் .
No comments:
Post a Comment