This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Monday, 26 November 2018

Easy Chicken Chukka Varuval(Bachelor friendly recipe)


VICKEY'S RECIPES :)

அட என்னப்பா ஒரே வெஜிடேரியன் ரெசிபியே போடுறீங்க கொஞ்சம் நான்வெஜ் ரெசிபீஸும் கண்ணுல காட்டுங்கப்பா நீங்க மனசுல நினைக்கிறீங்க தெரியுது. டைட்டில் பார்த்தாலே தெரிஞ்சு இருக்கும், bachelor friendly ரெசிபி so செய்யுறதுக்கு ரொம்பவே ஈஸி. சிக்கன் மற்றும் வெங்காயம் இருந்தாலே போதும் 10 to 15 minutesla செஞ்சிடலாம் .  இது குஸ்கா , சாதம் , ரசம் கூட சேர்த்து சாப்பிடலாம். 

தாளிக்க

சோம்பு - 1 / 4 டீஸ்பூன்
முந்திரி பருப்பு - 6 
காய்ந்த மிளகாய் - 1 
கறிவேபில்லை 

தேவையான பொருட்கள் 

சிக்கன் - 250 gm 
பெரிய வெங்காயம் -1 
சின்ன வெங்காயம் - 5 
இஞ்சி பூண்டு விழுது - 1 / 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 / 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
கடலை மாவு - 1 ஸ்பூன்
நெய் - 1 ஸ்பூன்
உப்பு , எண்ணெய்
கொத்தமல்லித்தழை 

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் , நெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்க்கவும் .

  • அடுத்து பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வதக்கவும் . அது தான் கறிக்கு டேஸ்ட் குடுக்கும் .
  • அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வாசனை போகும்வரை வதக்கவும். பின்பு சிக்கன் துண்டுகளை சேர்க்கவும். 
  • 2 நிமிடம் வதக்கிய பின்னர் மசாலா தூள்களை சேர்க்கவும். சிக்கன் வதுங்கும்போதே தண்ணீர் விடும் அதுனால அரை கப் தண்ணீர் சேர்த்து ஒரு 5 நிமிடம் மூடி போட்டு வேக வையுங்கள். 
  • சிக்கன் நன்றாக வெந்த பின்னர் 1 ஸ்பூன் கடலை மாவு , 1 / 2 கப் தண்ணீர் சேர்க்கவும். கடலை மாவு , தண்ணீர் சேர்த்தால் லைட் கிரேவி போல் இருக்கும். ட்ரையாக வேண்டுமென்று நினைப்பவர்கள் கடலை மாவு சேர்க்க வேண்டாம். 


  • ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் மிளகு தூள் , உப்பு சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அலங்கரிக்கவும்.சூடான சிக்கன் சுக்கா வறுவல் தயார்.


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.