VICKEY'S RECIPES :) |
அட என்னம்மா சமைக்கிற நீ,நானே சமைச்சுடுவேன்னு சொல்றாங்களா உங்க வால் பசங்க,அப்போ அவங்களுக்கு ஏத்த ரெசிபி தான் இந்த Pancake . குட்டிஸ்க்கு பிடிச்ச ரெசிபி அவங்களே செஞ்ச எப்படி இருக்கும். கிச்சனே சும்மா தெறிக்க விட்ருவாங்க.குட்டிஸ்க்கு மட்டுமல்ல வீகெண்ட்ல லேட்டா எழுந்து என்னடா சமைக்குறதுனு யோசிக்கிறவங்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம் தான்.இது செய்யுறதுக்கு மிகவும் சுலபம். நம்ம ஊர் ஸ்டைலில் சொல்லனும்னா மைதா இனிப்பு தோசை அவ்ளோ தான் . அதுக்கு மேல குழந்தைக்கு பிடிச்ச சாக்லேட் சாஸ், கிரீம் போட்டு குடுத்தா எஸ்ட்ராவே பசங்க சாப்பிடுவாங்க .
தேவையான பொருட்கள்
மைதா - 1 கப்
சுகர் - 2 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
பால் - 1 கப்
வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன் ( உருகியது )
முட்டை - 1
உப்பு - சிறிதளவு
டாப்பிங் ஐடியாஸ் ( Topping ideas )
தேன் / maple syrup
whipped cream
சாக்லேட் சிரப்
நட்ஸ் வகைகள்
பழங்கள்
வெண்ணெய்
நான் இங்கே maple syrup , சாக்லேட் சிரப் மற்றும் whipped cream சேர்த்து உள்ளேன்
செய்முறை
- ஒரு பௌலில் முட்டை உடைத்து ஊற்றி , அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும் .
- பின்பு அதில் மைதா மாவு , பேக்கிங் பவுடர் , பால் , உருக்கிய வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு போல் திக்க்காக கரைத்து கொள்ளுங்கள் .
- தோசை தவாவில் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். கருக விடக்கூடாது . சூடாக இருக்கும்பொழுதே அதன் மேல் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும் .
- பின் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப டாப்பிங்ஸ் சேர்த்து சுவையாக சாப்பிடுங்கள் .
No comments:
Post a Comment