This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 29 November 2018

Vegetable Pasta( Easy lunch box ideas )

VICKEY'S RECIPES :)

குழந்தைங்களுக்கு நூடுல்ஸ் ,பாஸ்தா ரொம்பவே பிடிக்கும் . பாஸ்தா கடைகளில் விதவிதமான shapes இருக்கு . அதுனால ஈஸியா அட்ராக்ட் ஆகிடுவாங்க. இது இத்தாலி நாடு ரெசிபி அவங்க வைட் சாஸ் வச்சு பண்ணுவாங்க. நம்ம ஊரு ஸ்டைல் மசாலா போட்டு பாஸ்தா செஞ்ச எப்படி இருக்கும். ரொம்ப டேஸ்டாவே இருக்கும். கிட்ஸ்க்கு மட்டும் இல்ல ஆபீஸ் போறவங்களுக்கும் உங்க லஞ்சுக்கு இத பேக் பண்ணி எடுத்துட்டு 
போகலாம். 

தேவையான பொருட்கள்

பாஸ்தா - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 
தக்காளி - 1 
பூண்டு - 3 
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது )
பீன்ஸ் - 5 (பொடியாக நறுக்கியது )
குடை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது )
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 / 2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 / 4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 / 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கியது
உப்பு மற்றும் எண்ணெய்

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும் . கொதித்த உடன் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் எண்ணெய் , பிறகு 1 கப் பாஸ்தா சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.வெந்த உடன் தனியாக எடுத்து வையுங்கள்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும். கருக விட கூடாது. அடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கிய உடன் கேரட் , பீன்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். 

  • பின் தக்காளி மிக்ஸியில் அரைத்து ஊற்றவும் . அப்புறம் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து ஒரு 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி விடுங்கள். 5 முதல் 10 நிமிடத்தில் வெந்து விடும். தக்காளி பச்சை வாசனை போகி மேல எண்ணெய் மிதந்து வரும் .

  • கடைசியாக வெந்த பாஸ்தா, உப்பு, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும் . கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.




No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.