Raagaa's Recipes:
தேவையான பொருட்கள்:
கருப்பட்டி - 1 டேபிள் ஸ்பூன்,
தண்ணீர் - 1 கப்
சுக்கு பொடி - 1 ஸ்பூன்
பொடி செய்ய தேவையான பொருட்கள்:
சுக்கு தூள் - 1/2 கப்
மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
பனங்கற்கண்டு - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் பொடி செய்ய தேவையான பொருட்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை ஒரு ஸ்பூன் மற்றும் கருப்பட்டியை சேர்த்து, 2-3 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
பின்பு அதனை இறக்கி வடிகட்டினால், சுவையான கருப்பட்டி காபி தயார்.
தேவைப்பட்டவர்கள் இதனுடன் பால் சேர்த்து பருகலாம். பனிக்காலத்தில் ஏற்படும் சளிக்கு நல்ல மருந்தாகவும் இந்த கருப்பட்டி காபி பயன்படும்.
No comments:
Post a Comment