Raagaa's Recipes:
தேவையானவை:
கொட்டை நீக்கிய, சுத்தமான பேரீச்சை - ஒரு கப்
தண்ணீர் - ஒன்றரை கப்
செய்முறை:
கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். கொதித்ததும் பேரீச்சையை அதில் சேர்த்து சுமார் 45 நிமிடம் வேகவிடவும்.
பேரீச்சை நன்கு மிருதுத்தன்மை பெற்றதும் இறக்கி, ஒரு பாத்திரத்தில் சுத்தமான காட்டன் துணியை விரித்து வேகவைத்ததை வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை அடுப்பில் வைத்து மிதமான தீயில் அடிப்பிடித்து விடாமல் கிளறிவிடவும். 15 நிமிடம் கழித்து பேரீச்சைச் சாறு சிறிது கெட்டிப்பட்டு நுரைத்துக்கொண்டு வரும்.
அப்போது அடுப்பில் இருந்து இறக்கி காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தவும். இதை வீட்டில் தயாரிக்கும் ஜூஸ்களில் கலந்து கொடுக்கலாம்.
No comments:
Post a Comment