காலை நேர பரபரப்பில் இருந்தது அந்த வீடு.
"அம்மா தாயே பரதேவதை கொஞ்சம் சீக்கிரம் கெளம்பு எனக்கு லேட் ஆகுது."
"ஏன் பொய் சொல்ற டா? சைட் அடிக்க தான போற? ஒரு நாள் லேட் ஆனா தப்பில்ல. "
"அதெல்லாம் உன் வேலை. எனக்கு பேங்க் ல வேலை இருக்கு எருமை... சீக்ரமா வா" என்றான் சிவா.
"கெளம்பிட்டேன் டா குரங்கு" என்றபடியே வந்தாள் நம்ம ஏஞ்சல் சீமா. (அதாங்க ஹீீரோயின் )
"ஏன் டி எப்போ பாரு லேட்... அந்த தம்பி வந்து எவ்ளோ நேரம் ஆச்சு தெரியுமா?" என திட்டிக்கொண்டே வந்தாள், அவளது அம்மா தேவி.
"அவன் குளிக்காம வந்துருக்கான்மா, நான் அப்டியா? நல்லா பாருங்க என்னை" என்றாள்.
"அப்டி சொல்லுடா என் தங்கம். உனக்கென்னடி பொறாமை என் பொண்ணு மேல?" என கூறினார் மணிகண்டன் (சீமாவின் அப்பா ).
"ஆரம்பிச்சுடீங்களா காலைலயே? இந்தாடி மதிய சாப்பாடு, நீ கேட்ட மாதிரி 2 பேருக்கும் வச்சுருக்கேன். சீக்கிரமா சாப்டு கிளம்பு."
"அம்மாக்கு நம்ம மேல பாசமே இல்லப்பா. இவன தான் தலைல துாக்கி வச்சுக்கிட்டு ஆடுறாங்க. நீங்க வாங்கப்பா நாம சாப்டலாம்" என்ற சீமா டைனிங் டேபிளில் சென்று அமர்ந்தாள்.
சிவா மற்றும் சீமா இரண்டு பேரும் பள்ளிக்கூட நண்பர்கள். அடுத்த அடுத்த தெரு என்றாலும் ஒரே ஸ்கூல் வேன் என்பதால் பழக்கம். ஆறாவது வகுப்பில் தான் சீமா இங்கு சேர்ந்தாள்.
அப்பாவின் அரசு பணி மாற்றல் காரணமாக ராஜபாளையம் வந்தவர்கள் இந்த ஊர் பிடித்ததால் இங்கேயே நிரந்தரமாக வீடு கட்டி விட்டனர்.
அம்மா தையல் வகுப்பு கற்று கொடுத்துக் கொண்டே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தைத்துக் கொடுக்கிறார். அப்பாவும் மகளும் தைக்க வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் அவர் இதுவரை கேட்கவில்லை. நீங்கள் வீட்டில் இல்லாத பொழுதில் எனக்கு நேரமே செல்லாது என தட்டி கழிக்கிறார்.
சிவா தற்போது தனியார் ஆட்டோ மொபைல் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிகிறான். சீமா சாப்ட்வேர் கம்பெனியில் சிஸ்டம் அட்மினாக பணிபுரிகிறாள். ரெண்டு பேரும் இன்ஜினியரிங் படித்துள்ளனர் வேறு வேறு துறையில்... ரெண்டு பேரும் சேர்ந்து தான் அலுவலகம் செல்வர் சிவாவின் வண்டியில். இவர்கள் இருவரும் சேர்ந்தால் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது.
சீமாவின் காதலன் தான் கதையின் நாயகன். அவன் எங்கே பிறந்திருக்கானோ? அடுத்த எபிசோடில் பார்க்கலாம். நானும் யோசிக்கனும்ல பா பிளீஸ் இன்னைக்கு போதும். நாளை இல்லன்னா அப்டேட் செய்றே... சீயு கைஸ்.
No comments:
Post a Comment