This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 26 December 2018

இல்லாள்

ஹலோ உறவுகளே...


     நான் ராமராஜன்(48). இது என் முதல் முயற்சி என்பதால் முன்ன பின்ன இருந்தா பொறுத்துக்கோங்க.


    எனக்கு படிக்கப் பிடிக்கும் அதேமாதிரி நாமளும் ஏதாவது எழுதனும்னு ரொம்ப நாளாவே ஆசை இருந்துச்சு, ஆனா எங்க போய் எழுதுறதுன்னு தெரியல. பொத்தாம் பொதுவா எழுதினா வாசிப்பாளர்கள் எழுதத் தெரியாமல் ஏன்யா எழுத வரீங்கன்னு கேப்பாங்களே.... அப்படின்னு ஒரு சின்ன தயக்கம் இருந்துச்சு.


     இந்த கூட்டாஞசோறு பகுதியில எழுத பழகலாம் சொன்னதும் யோசிக்காம இறங்கிட்டேன். நான் எழுத்தாளர் ஆக போறேன்னு என் மனைவியிடம் சொன்னதும் என்னவோ செஞ்சு தொலைங்க என்ன டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரின்னுட்டா. சொல்லிட்டு போறா என் முதல்  படைப்பை வாசித்தபிறகு அவளே என்னை தேடி வருவா...


      மனைவின்ற வார்த்தைக்கு அர்த்தமே வீட்டை விளங்க செய்பவள்ங்க. 

மனை=வீடு

வி=விளங்கச்செய்பவள்.     


     திருமணம் அப்படின்ற நிகழ்ச்சி மூலமா நமக்கு மனைவி மட்டும் கிடைக்கிறதில்ல, மனைவிங்கற பேருல ஒரு தோழி, ஒரு குரு, ஒரு அம்மா, ஒரு வழித்துணை, ஒரு சுமைதாங்கி, ஒரு எதிரி இன்னும் சொல்லப் போனா அவள் ஒரு நிழல்....


     நாம அவகிட்ட ஆழ்மனதிலிருந்து சொல்ற சொல்லும், அவ கையில கொடுத்தா பொருளும் அவளைத் தாண்டி எங்கேயும் போக முடியாது. சில சமயம் நமக்கே திரும்பி வராது அது வேற விஷயம், ஆனாலும் மனைவி ஒரு பொக்கிஷம் புதயலையே தன் பொறுப்பில் வைத்திருப்பாள் என்பது மறுக்கமுடியாத உண்மை.


     ஒருநாளில் ஆயிரம் முறை நம்மை திட்டி தீர்த்தாலும் தினமும் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது சிரிச்ச முகமா வாசலைப் பார்த்து நீப்பாளே, அப்பவே அவ பேசினது எல்லாம் மனசில இருந்து அழிஞ்சு போயிருக்கும். ஒரு நாள் அவ வீட்டுல இல்லாம வெறும் வீடா இருந்தா சுருக்குனு ஒரு வலி வருமே, அந்த உணர்வ சொல்ல எந்த மொழியிலயும வார்த்தையை கிடையாது.


     எந்த ஆம்பளைக்குமே மனசுல இருக்கிற அன்பை தன் துணையிடம் சரியாய் வெளிப்படுத்த தெரியாது, அது இளைஞனானாலும் சரி, வயசான கிழவனா இருந்தாலும் சரி...  சின்னதா ஒரு சிரிப்பு, செல்லமா ஒரு பாராட்டு, கொஞ்சலா ஒரு மன்னிப்பு எத்தனை பேரு செஞ்சிருக்கோம்? மனைவி வாய்விட்டு கேட்டாலும் கூட நாம செய்றது கிடையாது.


     இருந்தாலும் நம்மள கட்டிக்கிட்ட பாவத்துக்கு, உடலளவிலும் மனதளவிலும் எல்லா வித கஷ்டங்களையும் அனுபவிக்கிற அந்த ஜீவனுக்கு, வயசு இருக்கும் போதே அப்பப்ப நேரம் ஒதுக்குங்க... வயசான பிறகு நேரம் இருக்கும், வசதி இருக்கும் மனைவியும் இருப்பா, ஆனா எங்கேயும் போய் வர முடியாத தேய்மானங்களுடன்...


     ஒரு காலத்துல அவளும் நம்மை போல படிப்பு, வேலை, தோழிகள், ஊர் சுற்றல் என்று பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்தவள்தான். கல்யாணம் ஒன்னு ஆனதும் காலையில கண்ணு முழிச்சதுல இருந்து ராத்திரி கண்ண மூடி தூங்குற வரைக்கும், அவளோட உலகம் அந்த நாலு சுவத்துக்குள்ள அடங்கிப் போகிறது. டிவியும் செல்போனும் வேடிக்கை காட்டுமே தவிர, வேறு எதுவும் செய்யாது.


     எந்த ஊரு மனைவியும் சினிமாவிலும் கதைகளிலும் வரும் சூப்பர் மேன் ஹீரோக்களை விரும்புவதில்லை, அது அவளுக்கான பொழுதுபோக்கு மட்டுமே. அவளது தேவை மிக மிக குறுகியது. 


    ஒவ்வொரு நாளும் அவளுக்கென நாம் செலவு செய்யும் ஐந்து நிமிடங்கள்.


    அந்த நிமிடத்தில் அவள் மேல் நம் காதலை உணர்த்திடும் நான்கு வார்த்தைதள்.


     தினமும் குறைந்தது மூன்றே மூன்று முத்தம், அது பறக்கும் முத்தமோ இல்லை வாட்ஸப்பில் பகிரும் முத்தமோ.


     அவ்வப்போது இரண்டே இரண்டு வார்த்தை, லவ்யூ...


     அதுவும் முடியவில்லை என்றால், அவளுக்கென ஒரே ஒரு ஆலிங்கனம்.....


மனைவி எனும் அழியா சொத்தினை இருக்கும்போது தொலைத்துவிட்டு, இல்லாத நேரம் தேடி அலையாதீர்கள்.

   

மல்லி காபி

Raagaa's Recipes:

தேவையானவை:  

தனியா - 150 கிராம், 

சுக்கு - 50 கிராம், 

மிளகு - 10 கிராம், 

திப்பிலி - 10 கிராம், 

சித்தரத்தை - 10 கிராம், 

சதகுப்பை - 10 கிராம், 

பனை வெல்லம் - தேவையான அளவு.


செய்முறை: 


பனை வெல்லம் நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். 


இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். 


தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!


குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.

Anubama karthik's தோல்வி நிலையென நினைத்தால் 15


கனவில் காதல் செய்கிறேன் வேலை களைப்பில் தோள் சாய்கிறேன்


அந்தரங்க நேரத்தில் ஆழ்மனதின் ஆசைகள் அறிவாயோ


அன்று உனக்கு பிடித்த என்னை


இன்று பிடிக்காமல் போன மாயம் என்ன ?


சாயம் போன என் இளமை தானோ


காதலனே என் கணவனே கண்ணீருடன் கேட்கின்றேன்


கலக்கம் நீங்கிட மறுமொழி கூறிடுவாயே


 


சற்றே மயக்கம் நீங்கி ஆசுவாசபடுத்தி கொண்டபின் மனதை  தைரிய படுத்திகொண்ட ப்ரபா சாரதாவிடம், "அக்கா என்னக்கா ஆச்சு ? அப்பா அம்மாவ பாத்தியா? உன் புருஷன் என்ன ஆனார்" என கேட்டாள். அவர்கள் இருவரும் பேச தனிமை கொடுத்து வெளியே நின்று கொண்டான் பாஸ்கர்


"ப்ரபா உனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு, அது எனக்கு சந்தோஷம் முதல்ல கல்யாண நாளில் வீட்ட விட்டு போய் உன் வீட்டுகாரருக்கு அவமானம் உண்டாக காரணம் ஆயிட்டேன். அவர்கிட்டே மன்னிப்பு  கேட்டேன்னு சொல்லுமா... நான் இனிமே ரொம்ப நாள் இருக்க மாட்டேன் எனக்கு இருக்குறது  இரத்த புற்றுநோய்மா. என்னை காதலிச்சவன் கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு போயி ஒரு வீட்டெடுத்து தங்கவெச்சான். முக்கிய செலவுகளுக்கு வேணும்னு என் நகைகளை வாங்கி விக்க எடுத்துகிட்டு போயிருந்த போது அவனை தேடி ஒரு பொண்ணு கைல குழந்தையோட வந்தா. அவகிட்ட பேசுனத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது அவதான் அவனோட முதல் மனைவினு...  நாங்க பேசிக்கிட்டு இருந்த போதே அவன் பணத்தோட வந்துட்டான்."


     "நான் கோபப்பட்டு நியாயம் கேட்டப்ப 'உன் சொத்துக்காகதான் உன்னை கல்யாணம் பண்ண நினைச்சேன் எப்போ நீ வீட்ட விட்டு வந்தியோ அப்பவே உன்னை விட்டுட்டு போய் இருப்பேன். கைல இவளோ நகை வெச்சு இருக்கேனு தெரிஞ்சதோ அதையாவது அனுபவிக்கலாமேனு தான் இது வரைக்கும் கூட வெச்சு இருந்தேன்' என சொன்னான்."


    "அதிர்ச்சில எனக்கு ஒண்ணுமே தோணல.. 'இந்தா உனக்கும் கொஞ்சம் காசு தரேன் ஊரப் பாக்க போய் சேரு'னு சொன்னான். அதிர்ச்சியில சத்தம்போட்டு கத்திட்டு இருக்கும் போதே நான் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்துட்டேன். எற்கனவே ரெண்டு தடவை இந்தமாதிரி ஆனபோது நான் பெருசா எடுத்துக்கலை. மயக்கம் போட்ட உடனே பயந்து போய் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் பாத்தபோது எனக்கு இருக்குறது இரத்த புற்றுநோய், அதுவும் முத்தின நிலமைனு தெரிஞ்சது."


   "நான் ஆஸ்பத்திரில இருந்த போதே அவன் வீட்ட காலி பண்ணிக்கிட்டு பொண்டாட்டி புள்ளையோட எங்கேயோ போய்ட்டான். அக்கம் பக்கத்துல இருந்தவங்க சில பேர் உதவியால காசு கிடைச்சது, அப்பா அம்மாவ பாக்கப்போனேன் என்ன பாத்தவுடனே அப்பாவும் அம்மாவும் அடிச்சு விரட்டிடாங்க. அவங்களுக்கு எனக்கு இப்படி ஒரு நோய் இருக்குறது தெரியாதுடி..."


     "ப்ரபா எனக்கு ஒரு கடைசி ஆசை இருக்கு நம்ம அப்பா அம்மாவ ஒருதரம் பாத்தா போதும். அதுக்கு பிறகு நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன். தயவு செஞ்சு உன் வீட்டுக்காரர் கிட்ட சொல்லி அதுக்கு மட்டும் ஏற்பாடு பண்ண சொல்லேன்..."


     விஷயத்தை கேள்வி பட்டதுமே பாஸ்கர் நேரே சென்று மாமனார் மாமியாரை பேசி சமாதானப்படுத்தி கூட்டி வந்தான். தன்னை பெற்றவர்களை கண்டவுடன் முகம் மலர்ந்த சாரதா அவர்களுக்காவே காத்திருந்தது போல மண்ணுலக விடை பெற்றாள்....

Uma krishnan's அன்பென்ற மழையிலே 5

திவ்யா வீட்டில் படித்துக்கொண்டு இருந்த பொழுது அவள் மாமா காசி வந்தான். 


    "என்ன பண்ற கண்ணு?" என சொல்லி. 


    திவி பேசவில்லை, எழுந்து சென்றாள். 


   "என்னக்கா?  பேச மாட்டிக்கா உன் பொண்ணு" என்றான்.


    "உன்கிட்ட பேச என்ன இருக்கு?" என பாக்கியம் சொல்ல சண்டை வலுத்தது. 


    பக்கத்து வீட்டு மங்களம் வந்து பஞ்சாயத்து செய்து பிாித்தாள். அவன் மது குடிக்க சென்றதும் மங்களம் பாக்கியத்தை திட்டினாள். 


    "வயசு பிள்ளைய வச்சுகிட்டு நீ ஏன் அவனை உள்ள விடுற?" என்று கூறினாள். 


    "நான் என்னத்த செய்ய தம்பியா போய்ட்டானே?" என்றாள் பாக்கியம். 


     "அப்ப உன் பொண்ண சீக்கிரமா கட்டி குடுக்குற வழியப்பாரு..." என யோசனை சொன்னாள்.


    "நான் அதெல்லாம் எப்பவோ அவகிட்ட சொல்லிட்டே கேட்டாதான. 'கட்டிக்குடுக்க நீ காசு வச்சிருக்கியாம்மா, நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போய் சம்பாதிச்சு உன்ன நல்லா பாத்துக்க போறேன்றா' என்னக்கா பண்றது இவள?"


    "சாி விடு, நான் நல்ல மாப்பிள்ளை வந்தா சொல்றேன், அங்க போயி படிக்கட்டும். நான் கிளம்பறேன்க்கா..." என மங்களம் சென்றாள்.


    திவி அவள் அம்மாவிடம், "ஏன்மா இப்டி பண்ற எனக்கு கல்யாணம் இப்போ வேணாம்மா..." என கண்ணை கசக்க 


     "போடி அந்தண்ட. உன்னைய வீட்ல வச்சுகிட்டு மடியில நெருப்ப கட்டிகிற சொல்றியா? நீயே பாத்தல்ல காசி எவ்ளோ குதிக்கிறான்னு. போ எல்லா எனக்கு தொியும்" னு பாக்கியம் கத்த திவி சாப்பிடாமல் படிக்காமல் அழுது கொண்டே படுத்தாள்.



      இங்கு மறுநாள் மாலை சிவா தன் அம்மாவை தேடி பியூட்டி பாா்லா் சென்ற பொழுது அங்கு அம்மா இல்லை. 


    திவி அவனிடம், "யாா் நீங்க? லேடீஸ் மட்டும் தா அலவ்ட் இங்க கெளம்புங்க" என சொல்லி உள்ளே நுழையக்கூட விடாமல் வெளியே விரட்டினாள். 


    சிவா பொய் கோவம் கொண்டு, "அத சொல்ல நீ யாரு? வந்தா என்ன செய்வ ?என்ன ஓவரா சவுண்ட் விடுற?" என சொல்லி வம்பிழுத்தான்.


     திவி, "உடனே போலிஸ்கிட்ட சொல்லுவேன்" என போனை எடுக்க, 


    "சொல்லு ஆனா அவங்களால என்னை வெளிய அனுப்ப முடியாதே என்று சிரித்தான்."


    "ஏன் நீ அவ்ளோ பொிய பிஸ்தாவா" என திவி கிண்டலுடன் கூற 


    "நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நா பிஸ்தா தான் இந்த பாா்லருக்கு" என அவன் சொல்லும் போதே, அவன் அம்மா பாா்வதி வந்து விட்டார்.


    "என்ன கண்ணா இங்க வந்துருக்க?அதிசயமா இருக்கே.." என கேட்க 


   "அவன் ஒரு குட் நியூஸ்மா, அத சொல்ல கால் பண்ணா நீங்க போன் எடுக்கல. அதான் நேர்ல வந்தேன்."


   "அம்மாவா...." என வாயை பிளந்தாள் திவி.


    "ஆமா திவ்யா, இது என் ஒரே பையன் சிவா" என்றார் பாா்வதி. 


    "இவ்ளோ பொிய பையனா ? உங்கள பாத்தா அப்டி தொில மேடம்" என சொல்லிவிட்டு பாா்வதி கைகளில் இருந்த பைகளை உள்ளே வைக்க சென்றாள்.


    "யாருமா இது? ஓவரா மிரட்டுது.." என சிவா கேட்க 


    "என்கிட்ட வேலை பாக்கறாடா, நல்ல பொண்ணு அமைதியா இருப்பா ரொம்ப பிாில்லியண்ட் கரஸ்ல படிக்கிறா. கஷ்டபட்ற பேமிலி அதான் வேலைக்கு வச்சுகிட்டே. சாி எதுக்கு இவ்ளோ தூரம் வந்த அத சொல்லு."


    "அம்மா தாத்தா சித்தி போன் பண்ணாங்க எனக்கு நீ போன் எடுக்கலன்னு.


    "ஆமா ஆட்டோல வந்தேன் சத்தம் கேக்கலை. என்ன விஷயமாடா? எதும் பிரச்சனையா?"


    "அம்மா கூல் அதெல்லா இல்ல தாத்தா பாட்டிக்கு அறுபதாங்கல்யாணம் பண்றத பத்தி சின்ன தாத்தா கேட்டாராம்... அதான் சித்தி உன்கிட்ட பேச கூப்றுக்காங்க" என சொல்லியவுடனே 


    "நல்ல விஷயம் தான என்கிட்ட கேக்க என்ன இருக்கு" என்றாள்.


   "அதில்லமா மாமாவையும் கூப்டணும்ல, அதான் தயங்குறாங்க" என சொல்லவும் 


    "உன் அப்பா என்ன சொல்வாரோ தெரிலயேடா..." அப்டினு பாா்வதி அழ 


    "அதெல்லாம் நான் பாத்துகிறேன் மா நீ கவலை படாத" என்று கிளம்பினான் அம்மாவுடன் வீட்டிற்கு.


     திவி அவனிடம் கண்களாலே மன்னிப்பு வேண்ட அவன் முறைத்து விட்டு சென்றான். 


            

                 இங்கே சீமா ஆபிஸ் கிளம்பி ரெடியாகி விட்டாள். சிவாக்காக வெயிட்டிங். 


    சிவா வந்ததும் நன்றாக திட்டினாள், "ஏன் லேட்" என்று அடித்தாள்.


    "வெயிட் வெயிட் என்னடி உன் பிரச்சனை அதான் வந்துட்டேன்ல?இன்னும் டைம் இருக்கே" என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டான் சப்பாத்தி ஆப்பமும்.


    "எப்பவும் வா்ற டைம்முக்கு ஏன் வரலை?" 


    "அதுவா அப்பா கிட்ட கொஞ்சம் பேச வேண்டி இருந்தது அதான்."


    "அப்டி என்ன விஷயம் எனக்கு தொியாம லவ்வா?"


    "போடி லூசு நானாவது லவ் பண்றதாவது? தாத்தா பாட்டிக்கு அறுபதாம் கல்யாணம் பண்ண எங்க தாய் மாமாவ கூப்ட அப்பாவ ஒத்துக்க வச்சேன் அவ்ளோதான்."


    "அப்டியா சூப்பா்டா ஆமா என்னைக்கு என்ற சீமாட்ட 


    "வா்ற வெள்ளிக்கிழமைடி நீயும் மறக்காம கிளம்பி வா" என்றான்.


     "அப்படியா டிரை பண்றே லீவ் கிடைக்கணும்ல" என்றவளிடம் ஏய் லூசு அன்னைக்கு கவா்மெண்ட் லீவ் என்றதும் குதித்தாள்.


    "ஆமால்ல... ஐய்யா ஜாலி" என்று... 


    அவள் அம்மா திட்டினாள், "அதுக்கு ஏன்டி வீடு இடியிற மாதிாி குதிக்க? அறிவு கெட்டவளே" என்றாள்.


    "போ மா நீ வாடா போலாம் லேட் ஆகிட்டுல ஆபிஸ்க்கு. நீ உங்க தாத்தா பாட்டி பாத்து ரொம்ப நாள் ஆச்சுல" என்றாள் சீமா. 


    "ஆமாடி பாட்டிக்கு உடம்பு சாி இல்ல, கால் வலி இருக்குல அதான் அலைய முடியலைன்னு வா்றதில்லை." 


    "சாி உன் மாமா பேமிலிக்கும் உன் அப்பாக்கும் என்ன பிரச்சனை ?"


    "அதுவா பொிய கதை வா போறப்போ சொல்றேன்" என்று பைக்கை எடுத்தான்.


    "அம்மாவ அப்பா கோவத்துல அடிச்சுட்டாா் பாட்டி வீட்ல வச்சு, அதான் மாமா திருப்பி அப்பாவை அடிச்சிறுக்கார் போல.சோ அப்பா கோவிச்சுகிட்டு அவன் இருக்கணும் இல்ல நான் இருக்கணும்னு சொன்னதும் தாத்தா மாமாவ அடிச்சுறுகாா். மாமா அப்ப கோவிச்சுகிட்டு போனவா்தான்... மாமா தன்னோட மொறப்பொண்ணை கட்டிகிட்டு தென்காசி போயிட்டாா். அத்தையோட நகைய வச்சு சொந்தமா பரம்பரை தொழிலை ஆரம்பிச்சுறுக்கார் போல நல்ல வசதியாம். தாத்தா எவ்ளவோ கூப்டும் வரல அதான் இந்த பங்ஷன் வச்சா வருவாருன்னு சின்ன தாத்தா சித்தி ஐடியா" என்ற சிவாவிடம் 


    "நல்ல பிளான் கண்டிப்பா ஒா்க் அவுட் ஆகும்"னு சீமா சொல்ல


    "இல்லடி தாத்தா சொத்தை பிாிக்க தொழில் பார்க்க பாட்டிக்கு உடம்பு சாி இல்லைன்னு என்ன என்னவோ சொல்லி பாா்த்துட்டாா். வரவே இல்லையாம் அதான் அம்மா ரொம்ப பீல் பண்ணுறாங்க."


    "சாி விடு நீ அவங்க போன் நம்பர வாங்கி நீயே பேசி கூப்பிடு" என்றதும் 


    "வருவாங்கலா?" என ஆர்வமாக வினவினான் சிவா. 


    "கண்டிப்பா நீ பேசுற விதத்துல இருக்கு" என சொல்லிய சீமா ஆபிஸில் இறங்கிக் கொண்டு மகா கூட ஜாயின் பண்ணிகிட்டா.


    "ஏய் குள்ள கத்திாிக்கா" என்ற சிவாவிடம்


    "போடா அரலூசு" என்ற மகா சீமாவிடம் "சொல்லி வைடி என்கிட்ட வைச்சுக்க வேணாம்"னு என்றாள்.


    "சாிங்க சொா்ணாக்கா" என்ற சிவா பறந்து விட்டான்.


   இல்லைன்னா சீமாட்ட அடி வாங்குறது யாரு அடி இடி மாதிாில்ல இருக்கும். 


    "பாரு டி அவன் போயிட்டான் என்ற மகாவிடம்


    "விடு டி எப்படியும் காலைல சிக்குவான்ல அந்த வனஜாட்ட கோத்து விட்றுவோம்"னு சொல்லி hifi 🙌 அடித்து கொண்டனா்.


    வனஜா நம்ம சிவாவ ஒன் சைட் ஆ லவ் பண்றாப்ல.,ஆனா சிவா அவளை கண்டாலே ஓடிருவால்ல.

               

              யாரு அந்த தென்காசி பேமிலின்னு நெக்ஸ்ட் எபிசோடுல பாக்கலாம் ஓகேவா? சாாி கைஸ் சிபி பத்தி போஸ்ட் பண்ண முடியல இன்னைக்கு. ஹீரோன்னா சும்மாவா?

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.