நெய் சாப்பிட்டா நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்!
பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன், உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.
ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான, மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு, நெய் மிக முக்கியமான மருந்து. நெய்யை ஏன் நீங்கள் கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
காரணம் -1 : நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
காரணம்- 2 : மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.
காரணம்-3 : பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாரளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ல லாக்டோஸ் இல்லையே தவிர அவ்ற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.
காரணம்- 4 நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.
காரணம்- 5 : மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.
காரணம்- 6 : மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
காரணம்- 7 : சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
No comments:
Post a Comment