திகைத்த தோற்றத்திலிருந்த அவர், "வசுந்தராக்கா அங்க வரது யாரு ?" என கேட்க திரும்பி பார்த்த வசுந்தராவோ அழுகையை கட்டுபடுத்தி கொண்டே, "ஆமாம் சின்னாம்மா அது பாரதி பொண்ணுதான். கூட வரது நம்ம கலாவோட பையன், ரெண்டுபேருக்கும் இப்பொதான் கல்யாணம் ஆயிருக்கு. தம்பி நம்ம சுமித்ரா அம்மா கிட்டதான் வேலை பாக்குது."
அவர்கள் பேசி கொண்டிருக்கும்போதே பக்கத்தில் வந்து விட்ட ஷியாமையும் சக்தியையும் வசுந்தரா அறிமுகபடுத்த இவங்க யாருமா? என கேட்டாள் சக்தி.
இவங்க எங்க சின்னம்மா ரத்னா தேவிமா பெரியம்மாவுக்கு துணையா இங்க இருக்காங்க என சொன்னார் அவரை கை கூப்பி வணங்கிய ஷியாமும் சக்தியும் மேற்கொண்டு பேச துவங்கும் முன் அங்கு வந்த மருத்துவர் பெரியவரின் உடல்நலம் ஆபத்து கட்டத்தை தாண்டிவிட்டதாக சொல்ல அந்த செய்தியை சுமித்திரா தேவியிடம் தெரிவித்தான் ஷியாம் அவரோ தான் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதாக கூறி தொடர்பை துண்டித்தார்
மெல்ல பெரியவருக்கு சுயநினைவு திரும்பி கண் விழித்த உடன் அவர் வசுந்தராவை பார்க்க விரும்புவதாக சொல்ல உள்ளே சென்ற வசுந்தரவிடம் அவ வந்திருக்காளா என கேட்டார்
ஆமாம் அம்மா சுமிக்கா வந்துகிட்டு இருக்காங்க அப்போ சரி அவ வந்த உடனே என்ன வந்து பாக்க சொல்லு என சொல்லிவிட்டு கண்களை மூடி உறங்கத் துவங்கினார்
அந்த நேரம் அரக்க பரக்க உள்ளே நுழைந்த சுமித்திராதேவியோ ரத்னா அம்மா எப்படி இருக்காங்க கேட்டபடியே வந்தார் இப்போ பரவாஇல்லை மேடம் அபாய கட்டம் தாண்டிட்டாங்க என பதில் சொன்னது ஷியாம் தேங்யூ ஷியாம் உன் பெர்சனல் டைம்ல கூட நான் கேட்டுகிட்டதுக்காக வந்து ஹெல்ப் பண்ணிருக்க பா ரொம்ப தேங்ஸ் எங்க பா உன் மிஸஸ் அவங்களும் வந்திருக்காங்களாமே கூப்பிடு அன்னைக்கே சரியா நான் பாக்கல அவளுக்கும் தேங்ஸ் சொல்லணும்
இட்ஸ் ஒகே மேடம் அதுனால என்ன எதோ எங்களால முடிஞ்ச உதவி என சொல்லியபடியே அங்கே சக்தி வர
அவளை குழப்பத்துடன் பார்த்த சுமித்ராவோ ஷியாம் உங்க அம்மா அப்பாவ நான் ரிசப்ஷனுக்கு வந்த போதே பாக்கல அவங்களை நான் பாக்கணுமே போட்டோ எதாவது இருக்கா என கேட்க திருமணதினத்தில் எடுத்த குடும்ப போட்டோவை அவரிடம் காட்டியபடியே எதுக்கு மேடம் என கேட்டான் ஷியாம்
அவன் காட்டிய போட்டோவில் இருந்தவர்களை பார்த்த சுமித்ராதேவி ஒரு பெருமூச்சுடன் சரத்துக்கு போன் போடு ஷியாம் உன் குடும்பம் எல்லாரும் உடனே இங்க வரணும் என கட்டளை இடும் குரலில் சொல்லிவிட மேடம் எனக்கு புரியலயே என ஷியாம் கேட்க உன் பேரண்ட்ஸ் வந்த உடனே உனக்கே புரியும் இப்போதைக்கு நான் சொல்றத மட்டும் செய் என சொன்னார்
ஷியாம் போன் செய்தவுடன் குடும்பத்தினரை அழைத்து கொண்டு வந்த சரத்தை வாயிலிலே நின்று வரவேற்றார் சுமித்ரா அங்கே வந்த கலாவை பார்த்த ரத்னாவோ கலாக்கா என்ற கூவலுடன் அணைத்துகொள்ள அதை பார்த்த மற்றவர்களின் கண்ணில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது
கலாக்கா என் கண்ணப்பூ எங்க ? என கேவலுடன் ரத்னா கேட்க சரத்தை இழுத்து அவள் முன் நிறுத்தினார் ஸ்ரீதரன் அண்ணா அப்போ இது என கேள்வியாய் நோக்க ஆமாம் மா நான் குப்பையிலிருந்து எடுத்த உன் குழந்தைதான் மா இவன்
எல்லாம் வாசலியே நின்னு பேசவேணாம் ரத்னா இனிமேதான் நிறைய வேலை இருக்கு தயவு செஞ்சு எல்லாரும் உள்ளே வாங்க என எல்லாரையும் உள்ளே அழைத்து சென்றார் சுமித்ராமேடம் இங்க என்ன நடக்குது தயவு செஞ்சு யாராச்சும் சொல்லுங்க பிளீஸ் என சக்தி கேட்க சொல்றேன் பா என பழைய நினைவுகளில் ஆழ்ந்தார் சுமித்ரா
எங்க அப்பா அம்மாவுக்கு நான் நா ரொம்ப செல்லம் சக்தி செல்வமும் செல்வாக்குமா இருந்த எங்கப்பாவுக்கு நானும் என் தம்பியும் தான் வாரிசுகள் எனக்கும் என் தம்பினா உசிரு அவனும் எங்கிட்ட ஒரு நண்பனாத்தான் பழகினான் என் நேரம்னுதான் சொல்லுவேன் நான் என் கூட படிச்ச தனசேகர விரும்பினேன் அவரையே கல்யாணம் பண்ணிக்குவேன்னு வீட்டுல அடம் பிடிச்சேன்
ஆரம்பத்தில எல்லாம் நல்லபடியாதான் போச்சு நாளடைவில என் வீட்டுக்காரர் குணத்துல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது அவரை நம்பி பிஸினெஸ் குடுத்து வெச்சிருந்தோம்
பணம் புழங்க ஆரம்பிச்சதும் அவருக்கு பேராசை வந்திருச்சு எல்லாம் தனதா ஆகனும் நு நினைச்சாரு இதுக்கிடையில என் தம்பி ரத்னாவ காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணமும் பண்ணிக்கிட்டு வந்தான் இதுனால எங்கப்பாவுக்கும் என் தம்பிக்கும் ஒத்து போகல்ல எனக்கு தெரியாம என் வீட்டுக்காரர் இந்த பகைய பெருசாக்க முயற்ச்சி பண்ணார்
உங்க அத்தை பாரதியும் ரத்னாவும் பிரெண்ட்ஸ் அதுனால அவங்க வீட்டு பக்கத்துல என் தம்பிய தனி குடித்தனம் வெச்சோம் அப்பதான் உங்கப்பா தவறி போய் இருந்ததுனால ஒரு ஆறுதலுக்காக பாரதிய பாக்க ரத்னா போனா அவ கூட நானும் அவரும் போனோம் அங்கதான் உங்கம்மா பழக்கம் ஆனாங்க உங்கம்மாவுக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணமும் ஆச்சு அந்த சமயத்துல ரத்னா கர்பவதியானா
கல்யாணம் ஆகியும் ரொம்ப நாள் எனக்கு குழந்தை இல்லாததால எங்கே சொத்தெல்லாம் கையவிட்டு போயிடுமோனு என் வீட்டுக்காரருக்கு பயம் வந்திடுச்சு அதுகேத்தமாதிரி உன் தாத்தாவும் என் தம்பிய வீட்டுக்குள்ள சேத்துக்க முடிவுப் பண்ணார்
அவங்களை வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தோம் ஆரம்பத்துல இருந்த மாதிரியே என்கிட்ட நல்ல பழகறமாதிரி நடிச்சார் நானும் அவர்மேல இருந்த அவநம்பிக்கைய விட்டுட்டு சந்தோஷமா இருந்தேன் என் தம்பிக்கு கொஞ்சம் சந்தேகம் அவர் மேல இருந்தாலும் அவன் எனக்காக அவர்கிட்ட நல்ல படியா நடந்துகிட்டான்
இதுக்கு இடையில என் அப்பாவுக்கு என்ன தோணிச்சோ தெரியல்ல எல்லா சொத்தையும் என் தம்பிகுழந்தைக்கு எழுதிட்டார் அதுக்கு கார்டியனா என்னையும் ரத்னாவையும் போட்டார் எங்க ரெண்டு பேர் உயிருக்கு எதாவது ஆச்சுனா அந்த சொத்து முழுதும் தர்மத்துக்கு போகணும்னு எழுதிட்டார்
இந்த விபரம் எங்க யாருக்கும் தெரியாது இந்த சமயத்துல நாங்க எல்லாருமா குடும்பத்தோட சந்தோஷமா கொண்டாட இந்த கொடைக்கானல் வீட்டுக்கு வந்தோம் ஜாலியா சந்தோஷமா இருந்தோம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நு வீடு களைகட்டிச்சு எல்லாம் முடிஞ்சு கிளம்பற நாளும் நெருங்கிச்சு
வீட்டுக்கு கிளம்பற நேரத்துல அவர் வயத்தகலக்குதுனு பாத்ரூம் ல போய் உக்காந்துகிட்டார் அப்போ எங்கப்பாவும் எந்தம்பியும் எங்கம்மா அப்புறம் ரத்னாவோட ஒரு கார் ல போறதுனும் என் வீட்டுக்காரருக்கு உடம்பு சரியானதும் நாங்க வரதுனும் முடிவாச்சு அவங்க கிளம்பினதும் கொஞ்ச நேரத்துல உடம்பு சரியாகிட்டதா சொல்லி இவரும் கிளம்பிட்டாரு
நாங்க வீட்டுக்கு போற வழியில ஒரு இடத்துல எதோ ஆக்ஸிடென்ட் ஆயிட்டதா சொல்லி ஒரே கூட்டமா இருந்துச்சு இறங்கி பாத்துட்டு வரேன் நு இவர் போனார் பொழுது போகாம கார் விட்டு நான் கீழ இறங்கி வந்தேன் அங்க இருந்தவங்க கார் ஆக்ஸிடென்ட்ல செத்தது முன்னால இருந்தவங்கனும் பின்னால இருந்த ரெண்டு லேடிஸ்ல ஒருத்தர் கர்பம் நு பேசிக்கிட்டு போனது என் மனச உறுத்த ஆரம்பிச்சது
நான் பின்னாடியே இறங்கி போய் பாத்தேன் அங்கே ரத்த சகதியா எங்க குடும்பம் இருந்தது ஐயோனு இருந்தது அப்பானு கத்திகிட்டே அவங்க கிட்டே போய் பார்த்தேன் அவர் எங்கிட்ட எதோ சொல்ல வந்தார் அதுக்குள்ளே சுத்தி நின்னுகிட்டு இருந்தவங்க என்ன கிட்ட போக விடாம பிடிச்சுகிட்டாங்க நான் இவர தேடி பாத்த போது அங்க இருந்த போலிஸ் கிட்ட இவர் பேசிக்கிட்டு இருந்தார் கிட்ட போய் பார்த்தபோது அவர் முகம் கல் மாதிரி இருந்தது ஆனா கண்ணுல சந்தோஷம் தெரிஞ்சிச்சு
நான் பக்கத்துல வரத உணர்ந்த அவர் கண்ணுல நீர் கோத்துகிச்சு ஒரு நிமிஷம் நான் பார்த்தது பொய்யோனு தோணிச்சு என்னை அணைப்புல வெச்சுகிட்டு யாரையோ பார்த்து கை கட்டை விரலை உயர்த்தி காட்டினத நான் பின்னாடி இருந்த கார் கண்ணாடில பார்த்தேன் அந்த உருவம் என் மனசுல பதிஞ்சு போச்சு அப்போ இருந்த மன நிலைல அதை பத்தி அவர் கிட்ட கேக்கணும்னு தோணல
எங்க வீட்டுல இறுதி காரியங்கள் முடிஞ்ச உடனே வக்கீல் உயில பத்தி சொன்னபோது அவர் ஆடின ஆட்டத்துலதான் அவரோட சுயரூபம் புரிஞ்சது ஆனாலும் அம்மாவும் ரத்னாவும் ஹாஸ்பிட்டல்ல இருந்ததுனாலயும் பிஸ்னஸ் பத்தி எனக்கு எதுவும் தெரியாததாலயும் என்னால அவரை ஒண்ணும் பண்ண முடியல
அப்புறம் வக்கீல் சமாதானம் பேசுனார் அதன்படி அவர் பிஸ்னெஸ நிர்வாகம் பண்ணுறதுனும் நான் அம்மாவயும் ரத்னாவயும் பாத்துக்கறதுனும் முடிவுபண்ணினோம் ரத்னாவோட குழந்தைதான் சொத்தை பத்தி முடிவு எடுக்க முடியும்னும் அதுக்கு எதாவது ஒண்ணு ஆச்சுனா சொத்து தர்மத்துக்கு போயிடும்னும் வக்கீல் சொல்ல வேற வழி இல்லாம அதுக்கு அவர் ஒத்துக்கிட்டார்
அம்மா ரத்னா அப்புறம் நான் மூணு பேரும் மன நிம்மதிக்காக தம்பியும் ரத்னாவும் இருந்த பழைய வீட்டுக்கு போய்ட்டோம் இங்க எங்களை பத்தின கவலை இல்லாம அவர் அங்க ஆட்டம் போட ஆரம்பிச்சார் எங்க என் வாழ்க்கை வீணா போயிடுமோனு பயந்து எங்க அம்மா என்னை வற்புறுத்தி அவர் கூட அனுப்பி வெச்சாங்க அதுக்கு நானும் மாசமா இருந்ததும் ஒரு காரணம்
சரின்னு எங்க வீட்டுல ரொம்பநாளா வேலை பார்த்த இந்த வசுந்தராவை துணைக்கு வெச்சுட்டு நான் அவர் கூட போனேன் எனக்கு ஒருவேளை குழந்தை பிறந்தா அவர் திருந்திடுவாறுனு ஆசை இருந்ததும் அதுக்கு ஒரு காரணம் ஆனா நான் இங்க இருந்து கிளம்பினதுமே எனக்கு தெரியாம அவர் வசுந்தராவை வேலைய விட்டு துரத்திட்டு அவருக்கு சாதகமா இருக்குற ஆட்களை வேலைக்கு வெச்சிருக்கார் அது எனக்கு தெரியாமையும் பாத்துகிட்டார்
ரத்னாவுக்கும் பிரசவ வலி எடுத்து ஹாஸ்பிட்டல சேத்த தகவல் கேட்டு நான் ரத்னாவ பாக்க அவருக்கு தெரியாம அங்க போனேன் போறவழில எனக்கு பிரசவ வலி எடுத்துச்சு எங்க நல்ல காலம் அவர் வேலைய விட்டு துரத்தினதும் வசுந்தரா வேற வழி இல்லாம அந்த ஹாஸ்பிட்டல வேலைக்கு சேர்ந்திருந்தா அவரோட ஆட்கள் மூலமா அவருக்கு ரத்னாவுக்கு வலி எடுத்த விஷயம் தெரியறத்துக்குள்ள சரத் பிறந்துட்டான்
ஆனா அவர் கிட்ட இருந்து குழந்தைய காப்பாத்த ஏற்கனவே நாங்க போட்ட திட்டபடி அவரோட ஆட்களை தாக்கிட்டு எங்க ஆட்கள் சரத்தை தூக்கிகிட்டு போய்ட்டாங்க அப்படியும் அவர் ஆட்கள் சரத்தை கைபத்த முயற்சி பண்ணாங்க இந்த சண்டையில அந்த ஆட்கள் அவனை குப்பை தொட்டில போட்டதும் அந்த வழியா வந்த ஸ்ரீதர் அண்ணன் காப்பாத்திஉன்னை எடுத்துகிட்டு போனதும் அந்த ஆட்களை பின்தொடர்ந்து கண்காணிச்சுட்டு இருந்த வசுந்தரா மூலமா எங்களுக்கு தெரிஞ்சது
அந்த ஆட்கள் அவரோட கோபத்துக்கு பயந்து குழந்தை செத்துட்டதா அவர் கிட்ட சொல்லிவிட அதே நேரத்துல பிறந்த எங்க குழந்தைய ரத்னாவோட பையன் நு சொல்லி ஏமாத்த அவர் திட்டம் போட்டார் தட்டி கேட்ட என்ன இதுக்கு சம்மதிக்கலனா அம்மாவையும் ரத்னாவையும் குழந்தையும் கொன்னுடுவேன் நு சொல்லி மிரட்டினார்
வேற வழி இல்லாம நானும் இதுக்கு சம்மதிச்சேன் கொஞ்சநாள் கழிச்சு உங்கம்மாகிட்டயும் பாட்டிகிட்டயும் உண்மைய சொல்லி நீ கலாகிட்ட வளர்ரதையும் சொல்லி சமாதானபடுத்தினேன் பாரதியோட கலா அண்ணிகறதுனால எங்களுக்கு உன்னைபத்தி எந்த கவலையும் வரல
எப்படியோ அடியாட்கள் மூலமா சரத் உயிரோட இருக்குறதை தெரிஞ்சுகிட்ட அவர் என்னை பின் தொடர்ந்து சரத்தை கண்டு பிடிக்க முயற்சி பண்ணார் அதுக்கு இடம் கொடுக்காம நான் கவனமா இருந்தேன் வசுந்தரா மூலம் கலாண்ணிக்கும் ஸ்ரீதர் அண்ணாவுக்கும் சரத் யாருங்கறத தெரியபடுத்தினேன் அவங்களும் கவனமா சரத்தை தன் மகனாகவே வளத்துனாங்க கொஞ்ச நாளில் அவர் கவனம் வேறபக்கம் திரும்பிடுச்சு இங்க சுரண்டுன காசுல வெளிநாட்டுல தொழில் பண்ண ஆரம்பிச்சார்
யாரையும் நம்பாம எனக்கு தொழில பழக்கி விட்டார் என் மகன எந்தம்பி மகனா அடையாளம் காட்டி முழுக்க அவர் கட்டுபாட்டுல வளத்தார் எங்களுக்கு பிறந்த குழந்தை இறந்துட்டதா நம்ப வெச்சார் தொழில நான் நல்லா கத்துகிட்டதும் என் மகனை எங்கிட்ட இருந்து பிரிச்சு வெளிநாட்டுல படிக்க வெச்சு வளத்தார்அவரும் அவனோட தங்கி கிட்டு இருக்கார் இதை பத்தி நான் வெளில சொன்னா என் மகனை சொத்து போனாலும் பரவால்லனு கொன்னுடுவேனு மிரட்டரார்
ஷியாமை வேலைக்கு எடுத்தபோது ஷியாமோட பயோடட்டால இருந்த விபரங்களை வெச்சு அவனை தெரிஞ்சுகிட்டேன் என் தம்பி சாயல் சரத்கிட்ட இருக்கறத வெச்சு அவனையும் நான் தெரிஞ்சுகிட்டேன் அதனாலதான் அவனை என்கூட வெச்சுக்கறத்துகாக வேலை குடுத்தேன் சக்திக்கும் பாரதிக்கும் இருந்த ஜாடை ஒத்துமைனால ரொம்ப நாள் ஆனாலும் என்னால உங்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சது
இன்னமும் கொஞ்ச நாளுல என் புருஷன் இங்க வந்திடுவார் அப்புறம் என்ன நடக்க போகுதுனு தெரியல என கவலைபட்டார்
தொடரும்
No comments:
Post a Comment