என்னதான் ஆஜானுபாகுவாய் இருந்தாலும், ஒரு தொழிலை எடுத்து திறம்பட செய்யும் ஆறடி அடி ஆண்மகனாய் ,மற்றவருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தாலும், மனதிற்குப் பிடித்த ஒரு பெண்ணிடம் தன் மனதின் மொழி பல பேரால் சொல்ல முடிவதில்லை.
இதற்குப் பெயர்தான் என்ன? பயமா ?பாசமா? காதலா? 😍😍😍😍😍😍😍😍
இப்படியே ஒரு வாரம் கழிந்து வருணை டாக்டர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். சில உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்ய சொல்லி இருந்தார்.
வீட்டிற்கு வந்த வருணுக்கு அனைவரும் வந்து பார்த்துவிட்டு நலம் விசாரித்து சென்றனர். ஆனால் வருணி மட்டும் வரவே இல்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது வருணுக்கு.
எப்போதும் போல காலை நடைபயிற்சி செய்து கொண்டிருந்தான் வருண்.
அப்போது வித்யா "என்ன கால் சரியாகி விட்டது போலிருக்கே" என்று வினவினாள்.
அப்போதுதான் அவளைக் கண்டான் வருண்.
"ம்... ஆமா மா, டாக்டர் சொன்னார்,
தினமும் நடைப்பயிற்சி செய்ய சொல்லி .
ஆமா நீங்க எல்லாம் இங்க வர மாட்டீங்களே, என்ன அதிசயமா இந்த பக்கம்?" என்று கேட்டான்.
"அப்படியெல்லாம் இல்லையே, அம்மாவும் அப்பாவும் உங்களை வந்து பாக்கலையா, அப்புறம் என்ன" என்றாள் வித்யா.
"அவங்க ஓகே , நீயும் உங்க அக்காவும் தான்" என்று பாதியிலேயே நிறுத்தினான்.
வித்யா சிறு புன்னகையுடன் "நானா இல்லை அக்காவா?" என்று அவன் கண்களைப் பார்த்து கேட்டாள்.
வருண் அமைதியாக இருக்க வித்யாவே தொடர்ந்தாள் "எனக்கு எல்லாம் தெரியும் ,நீங்க அவ கிட்ட சொன்னது எல்லாம்" என்றாள்.
"வருணி சொன்னாளா? "என்று வியப்பாக கேட்டான்.
" அவளா சொல்லுவா?, நீங்க வேற, நானே கேட்டேன் ஹாஸ்பிடல்ல ,அப்புறம் அவகிட்டயும்..." என்று வருணை பார்த்தாள்.
"ஓ "என்று ஒரு அர்த்தப் பார்வை பார்த்தான் வருண்.
" நீங்க தப்பானவங்ககிட்ட அந்த வார்த்தையை சொல்லிட்டீங்க, அவ கிட்ட நீங்க சொன்னதே வேஸ்ட்" என்றாள் வித்யா.
" ஏன், நான் ஒரு பொண்ணு கிட்ட தானே சொன்னேன். அப்படி இல்லையா ?"என்று குறும்புடன் கூறினான்.
"ம்.... ரொம்பத்தான் உங்களுக்கு. அவள பாத்தா அப்படி தெரியுதா உங்களுக்கு?"என்றாள் முறைப் போடு.
" இல்லப்பா, நீதான சொன்ன. சும்மா சும்மா விளையாட்டுக்கு, சரி சொல்லு என்ன பிரச்சனை அவளுக்கு" என்றான்.
"அவளுக்கு காதல்னாலே பிரச்சனை என்ற கான்செப்ட் ல இருக்கா.
அவகிட்ட போய் பேசி, பழகி, காதலித்து ம்............ முடிஞ்ச மாதிரிதான்.
முதலில் எனக்கு ஒரு டவுட்டு? உங்க மேல."
" உனக்கு டவுட்டா? என் மேலயா, எதுக்கு?
" ஆமா உங்க மேல தான் first எங்க அக்கா கிட்ட சண்டை போட்டீங்க,
அப்புறம் அவள கோபப்படுத்திநீங்க.
என்னெல்லாம் பண்ணக் கூடதோ எல்லாத்தையும் செஞ்சு வெறுப்பேத்தனீங்க. அப்புறம் எப்படி திடீர்னு லவ்வு? அங்கதான் எனக்கு ஒரு ஒரு டவுட்?. "
" எல்லாம் என் நேரம் சின்ன வாண்டுகள் எல்லாம் என் லவ்வ, சந்தேகப் படுதூங்க... அடக்கடவுளே இது என்ன எனக்கு வந்த சோதனை". என்று ஒரு நிமிடம் நினைத்தாலும் வருணியை யோசிக்க வைத்தது மனது.
" சரி வேணாம்னா, விடுங்க சொல்ல வேண்டாம். உண்மையா இருந்தா ஹெல்ப் பண்ணலாம் என்று நினைத்தேன். நான் வந்த வேலையை பார்க்கிறேன் ."என்று அங்கிருந்து செல்ல நினைத்தால் வித்யா.
" என்ன ஹெல்ப் பா "என்று வியந்தான் வருண்.
" ஏய் ஓகே ஓகே, நில்லு நில்லு. "என்று பின் வந்தான்.
" உண்மையா நீ ஹெல்ப் பண்ணுவியா" என்று வியப்போடு கேட்டான்.
"ம்.... பண்றேன் ஆனா நீங்க உண்மைய சொல்லுங்க சொல்லுங்க" என்றாள்.
" திடீர்னு எல்லாம் இல்ல, என்னோட காதல் சண்டையில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக டெவலப் ஆனது" என்றான்.
" அப்போ உங்களுக்கு பிடிச்சவங்க மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க எங்க அக்காவை நீங்க லவ் பண்றீங்க என்று." என்றாள் வித்யா.
" என் மேல அவ்ளோ சந்தேகமா உனக்கு".
" உங்க மேல இல்ல எங்க அக்கா மேல அவ்ளோ பாசம் தப்பானவங்க கையில எங்க அக்கா போகக்கூடாது இல்லையா. அந்தப் பயம் தான் சந்தேகமா மாறுது."
" சரி சரி நான் சத்தியமா உங்க அக்காவ லவ் பண்றேன் .இது அந்த சாமி மேல ,எங்க அம்மா மேல, எங்க அப்பா மேல ,லட்சுமி அம்மா மேல, உன் மேல, இங்கே இருக்கிற மகிழமரம் மேல, இந்த ஊர் மேல, இந்த உலகத்துல இருக்கிற எல்லாத்து மேலயும் சத்தியமா விரும்புறேன். போதுமா? "
"ஏன் அக்காவ புடிச்சது?"
"உங்க அக்காவை ஏன் எனக்குப் பிடிச்சிருக்குனா,,,,,, நான் என்ன சொல்லுவேன் ம்....... அவளோட குணம், பண்பு ,அவ எல்லார்கிட்டயும் காட்டுற பாசம், அவளோட அந்த குறும்புத்தனம், பெரியவங்க கிட்ட காட்டும் மரியாதை, உங்க குடும்பம், அந்த சூழல் ,
மொத்தமா சொன்னா உங்க அக்கா கிட்ட இருக்குற எல்லா சந்தோஷமும் வாழ்க்கையில் எனக்கும் வேணும்" என்றான்.
" ஆ....... வேண வாயைப் பிளந்தாள் வித்யா. இவ்ளோ இருக்கா உங்களுக்கு அக்காவை காதலிக்க" என்றாள் வியப்பாக.
" ஆனால் அவளுக்கு உங்ககிட்ட எதுவுமே இதுவரைக்கும் தோணல, மொதல்ல நல்ல பேர அவகிட்ட எடுங்க , அப்புறம் லவ்வ பத்தி யோசிக்கலாம் "என்றாள்.
" நீ தான் ஹெல்ப் பண்றேன்னு சொன்ன அப்புறம் விட்டு போறே. " என்றான்.
" ஹலோ, ஹெல்ப் பண்றேன் தான் சொன்னேன். தவிர ஐடியா தரேன் என்று சொல்லல. நீங்க ஐடியா பண்ணுங்க. அதுக்கு ஹெல்ப் பண்றேன் " என்றாள்.
" சரி சரி முறைக்காத முறைக்காத ".
சிறிது நேரம் யோசித்த பிறகு வருணுக்கு பாண்டியனின் நினைவு வந்தது. அன்று ஹாஸ்பிட்டலில் அவன் வருணியை பார்த்த பார்வை சரி இல்லையே என்று அதை வித்யாவிடம் கேட்டான்.
" ஆமாம் பாண்டியன் அக்காவை டிஸ்டப் செய்கிறான். அவ மதிக்கவே மாட்டா
ஸ்கூல்ல, வீட்டுக்கு வர வழியில, கிளாஸ்ல என்று எல்லா இடத்திலும் லவ் பண்றேன் ,லவ் பண்றேன்னு உயிரை வாங்குறான் என்று அக்கா சொல்லுவா. "என்று கூறினால் வித்யா.
" என்னது, இதிலேயும் அவன் எனக்கு எதிரியா? "என்று வாய்விட்டே கூறினான் வருண்.
" ஆமா ஆமா நீங்கதான் சமாளிக்கணும் ஆனா ஒரே ஒரு ஆறுதல் என்ன தெரியுமா? ".
" என்ன "என்றான்.
" அந்த ஆளை இங்கே யாருக்கும் பிடிக்காது. எங்க அப்பாவும் தள்ளிதான் இருப்பார். இந்த விஷயத்துல நீங்க பரவாயில்லை எல்லாருக்கும் உங்களை பிடிக்கும். "என்றாள்.
" ஆமாமா பிடிக்க வேண்டியவங்களுக்கு? இன்னும் வாயே திறக்காமல் இருக்காங்க" என்றான் சலித்துக்கொண்டு.
" சரி சரி எனக்கு நேரம் ஆகுது. எங்க அம்மா ,லட்சுமி அம்மாகிட்ட இந்தக்கீரை சூப்பு கொடுக்க சொன்னாங்க. அனேகமா உங்களுக்கு தான் நினைக்கிறேன். லேட் ஆனா அம்மா திட்டுவாங்க நான் கிளம்புறேன் ".என்று வீட்டுக்குள் சென்றாள் வித்யா.
சரி நாமளும் போய் விட்டுப்போன ஸ்கூல் வேலைகளை செய்யலாம் என்று முடிவு எடுத்தான். அப்படி என்றாலாவது வருணி தன்னை பார்ப்பதை தவிர்க்க முடியாது என்று கள்ளத்தனமாக யோசித்தான்.
ஆனால் அவன் எதிர்பார்க்காத ஒன்று லட்சுமி அம்மா மூலமாய் நடந்தது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நண்பர்களே அப்டேட் லேட்டானதற்கு மன்னிக்கவும் என்னால் முடிந்த அளவிற்கு கதையை எழுதி முடிக்கிறேன் இது எனது முதல் கதை என்றதால் சிறு தடுமாற்றங்கள் இருக்கின்றன கதையை படித்துவிட்டு மறக்காமல் கமெண்ட் செய்யவும் அது என் பிழைகளை திருத்திக் கொள்ள உதவும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment