சாரல் சதிஷின் கையை பதம்மாய் பிடித்து மருந்தைப்போட்டு விட்டாள்...
சதிஷ் காதருகே போய் விஜய் ரகசியம்மாய் எப்படிடா உன் சிஸ்டர் என கேட்க்க அதற்க்கும் முறைத்தான் சதிஷ்..
இவன் எதற்கெடுத்தாலும் முறைக்கிறான் இவன் கையில குத்திருக்ககூடாது இவன் கண்ள குத்திருக்கனும் என நினைத்தான் விஜய்...
மருந்து மட்டும் தான் நீங்க போலாம் என்றவளும் போக யத்தனிக்க விஜய் அவளை அழைத்தான்....
ஹலோ அவன் வந்தது டீரிட்மெண்டுக்காக ஆனா நான் வந்தது உங்களுக்காக தான் எனவும் இப்பொழுது நிஜம்மாவே சாரல் கோபம் வந்து கத்து விட்டாள்....
இதோ பாருங்க இந்த மாதிரி பேசினா எனக்கு பிடிகாது இனி இதே மாதிரி பேசினா நான் பொல்லாதவளாகி விடுவேன். அதே வேகத்தில் சதிஷிடம் திரும்பியவள் இவர் உங்க ப்ரண்ட் தானே இவரிடம் சொல்லி வைங்க இனி மேலும் இந்த மாதிரி நடந்து கொண்டாள் நடக்குறதே வேற சொல்லிட்டேன் என்றவள் அவனை ஒரு
பார்வ்வைப்பார்க்க அதுலையே விஜய் மனது தொபுக்கர்ட்டின்னு அவள் மடியிலையே விழுந்தது...
முகம் சிவக்க சிவக்க உதடு துடிக்க துடிக்க கோபமாய் பேசியவளை ரசித்து தான் பார்த்துருந்தான் விஜய்...
இதல்லாம் உனக்கு தேவையா என சதிஷ் கேட்க அவள் எனக்கு தேவை அதனால் எனக்கு இது ஒன்னும்மே இல்லை என்றான் விஜய்...
ம்கும் நீ சரி பட்டு வரமாட்ட இதை அப்பாட்ட சொண்ணா தான் சரி வரும் ...
நீ மட்டும் சொல்லு அதோட இதே ஹாஸ்பெட்டலில் குத்துயுரும் கொலையுரும்மா டீரிட்மெண்ட் எடுப்ப சொல்லிட்டேன்...எனவும் அவனாள் விஜய்யை முறைக்கத்தான் முடிந்தது...
இருவரும் வெளியே வந்தபோது சாரல் தங்கச்சியுடன் பேசிக்கொண்டுருந்தாள்..
என்னக்கா கம்யூட்டர் கிளாஸ்ர்க்கு பீஸ் கட்ட பணம் கேட்டேன்னே நீ கொடுக்காம வந்துட்ட...
ஆமா சர்மி மறந்துட்டேன் என்றவள் அவளிடம் பணத்தை எடுத்துக்கொடுத்தாள்..அவளையே பார்த்தபடி வந்த விஜய்யின் பார்வ்வை வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் வேறு புறம் திரும்பி கொண்டாள்....
அவன் சர்மியை பார்த்தான் சாரலின் சிறுது ஜாடையில் தான் இருந்தாள்..சிறுது அழகு பெண்தான் ஆனால் சாரலின் அழகு அபாயகரமானது ..விஜய் எப்பொழுதும் ஒன்று நினைப்பான் ஏதோ ஒன்னு இருக்கு அவக்கிட்ட அப்படியே பிடிச்சு இழுக்குறா என நினைப்பான்...
அப்போ நான் கிளம்புறேன் என சொண்ண சர்மியை நிக்க சொண்ண சாரல் ஏதோ ஒன்றை கவரில் எடுத்து வந்தாள்...அது மல்லிகைப்பூ திரும்டி என்றவள் அவள் தலையில் மல்லிகை பூ அனைத்தையும் அவளுக்கே வைத்து விட அதைப்பார்த்த சர்மி உனக்குக்கா...என....
எனக்கு வேணாம் நீ வச்சுக்க என்றவள் பார்த்து கவனம்மா போ சர்மி என்றாள்..
அவர்களுக்கிடையேயான அந்த பாசம் அவனுக்கு பிடித்துருந்தது..அன்று மாமனார் இன்று மச்சினி இன்னும் இவர்கள் வீட்டில் எத்தனை மெம்பர்ஸ் இருக்காங்கன்னு தெரிஞ்சுக்கனும் என நினைத்தவன் அவளையே பார்த்து கொண்டுருக்க அவனை பெரும் பாடு பட்டுதான் வீட்டிற்க்கு இழுத்துப்போனான் சதிஷ் .....
இரவு ஏழு மணிக்குதான் வீடு வந்தாள் சாரல் ...வாம்மா என்ற ராமமூர்த்தியிடம் புன்னகைத்தவள்...
சாப்பிட்டிங்களாப்பா என கேட்டாள்...கழைத்து வரும் மகளை பார்க்கும் பொழுதல்லாம் மனம் தாங்காது ராமமூர்த்திக்கு தன்னாள் ஒரு வேளையைப்பார்த்து அவளது இந்த குடும்ப சுமையை சுமக்க முடியலையே எனும் போது மனம் வெம்பி போகும்...அவருக்கு...
நான் சாப்பிட்டின் சாரல்ம்மா நீ கை கால் அழம்பிட்டு வந்து சாப்பிடு எனவும் சரிப்பா என்றாள்...
சர்மி சாரல் வந்தாச்சு அக்காவுக்கு தோசையை ஊத்தி கொடு எனவும் சர்மி தோசை சுட ஆரம்பித்தாள்..
முகம் அழம்பிட்டு வந்தவள் அவளது தம்பி அரவிந்தனை காணாது போக... அரவிந்த் எங்க போணான் சர்மி என கேட்டபடி சமையலறை திண்டில் ஏறி அமர்ந்து சர்மி சுட்ட தோசையை சாப்பிட ஆரம்பித்திருந்தாள்....
அவன் ப்ரண்டிடம் நோட்ஸ் வாங்க போனான் இன்னும் வரலை என்றாள்.
அதற்க்குள் அரவிந்தனே வந்துருந்தான்...
எப்பக்கா வந்த என்றபடி....
நான் வரது இருக்கட்டும் நீ எப்ப போண எப்ப வர எனவும் ப்ரண்டிடம் நோட்ஸ் வாங்க போனேன் க்கா அவங்க சாப்பிட்டுத்தான் போகனும் என சொல்லிட்டாங்க அதான்க்கா லேட்டா ஆயீடுச்சு...
ம்ம் சரி நல்லா சாப்பிட்டியா இல்லாட்டி இந்ந தோசையை சாப்பிடு என்று அவனுக்கு நாளு வாய் ஊட்டி விட்டாள்...
சர்மி " அக்கா எங்க காலேஜ் கல்ஜ்ரல்ஸ் நீ வரனும் ...
என்னால்ல வர முடியாது சர்மி லீவு கிடைக்காது...
அக்கா நான் கவிதைப்போட்டியில் கூட கலந்துருக்கேன்..எனவும் அரவிந்த் அக்கா அப்போ நீ போகாதே என்றான் ஏண்டா என கேட்ட சாரலிடம்...
இவள் கவிதை சொண்ண பிறகு தான் எல்லாரும் பயந்து அலறி அடுச்சு ஓடிருவாங்களே அப்பறம் எப்படி பங்சன் நடக்கும் என்றதும் சாரல் கலகலத்து சிரித்து விட்டாள்..
அவனை கையில் இருந்த தோசைக்கரண்டியால் வலிக்காமல் நாளு வைத்தவள் உன்னிட்ட பேசலை நீ வாயை மூடு என்றாள்...
அவன் விளையாட்டுக்கு சொல்றான் சர்மி.."சர்மி அக்கா கெஸ்டா சினிமா ஆக்டர்ஸ் யாரும் வராங்களா அப்படி வந்தா சொல்லு நானும் வரேன் என்றான் அரவிந்தன்....
அவன் அப்படித்தான் சில சமயம் அக்கா என்பான் சில பொழுது சர்மி என்பான்..திடிரன வீட்டில் இருவருக்கும் சண்டை கலை கட்டும் இவன் அவளை காலேஜ் போற காட்டேறி என்பான் இவளோ அவனை ஸ்கூல் போற ஸ்டுப்பிட் என்பாள்.....
இருவரது சண்டையையும் சமாதானம் செய்யாமல் ரசித்து பார்த்துருப்பாள் சாரல்..
இந்த முறை நம்ம ஊர் தொழில் அதிபர் கணேஷ் அவர் பய்யனும் தான் கெஸ்ட் . நம்ம ஊர்ல்ல வெரி பவர் புல் ஆள் அவர் தான் என்றாள் சர்மி
அனைவரும் தூங்கியப்பிறகு ரகசியம்மாய் வந்தான் விஜய் சாரலைப்பார்க்க நான் ஒருத்தன் உன்ன நினைச்சு தூங்காம இருக்கேன் நீ தூங்கலாம்மா சாரல் பேபி எனறவன்
தன் தன் விரல் கொண்டு அவள் நெற்றி கண்ணம் வருடியவன் ...
கவிதையே தெரியும்மா என் கனவு ...
நிதானடி...
இதயம்மே தெரியும்மா உனக்காகவே...
நானடி...
நான் உன்னை எவ்ளோ விரும்புறேன்னு தெரியும்மா உன்னை பார்க்க நான் ஹாஸ்பெட்டல் வந்தேன்.என்ன நீ திட்டி அனுப்பினிட்ட உனை நினைச்சு நான் ஒரு கவிதைக்கூட எழுதினேன் சொல்லட்டும்மா...
உன்னைப்பார்க்கும் வரை தெரியாது
எனக்குள்ளும்...
காதல் விதை இருப்பது....
உன்னை பார்க்க பார்க்க ..
அது முளையாகி செடியாகி
இன்று பூவும் பூக்கிறது
அதை சூடத்தான் மறுக்கிறாய்
நீ...
என்றவன் அவளை நெறுங்கி அவளை ஆசையாய் பார்த்தவன் அவள் கண்ணத்தில் மித்தமிட அவ்வளவு தான் அறக்க பறக்க பெட்ஷிட்டை உதறி எழுந்து அமர கனவு எனவும் தான் மூச்சே வந்தது ..ஐய்யோ இந்த கிறுக்கன் என்னை நிம்மதியா தூங்க கூட விடமாட்டிங்குறான்னே என நினைத்தவள் இனி அவனை பார்க்கும் பொழுது நல்லா திட்டி விடனும் என நினைத்தவள் அவள் கண்ணத்தை தடவ்வ நிஜம்மாலும்மே முத்தமிட்ட உணர்வ்வு..அதை அழுத்தி துடைத்து கொண்டவளிடம் சர்மி...
என்னக்கா கெட்ட கனவ்வா என கேட்க்க ஆமா சர்மி....
தண்ணி குடிச்சிட்டு தூங்குக்கா என்றாள் தூக்க கலக்கத்திலையே...
சாரலும் சரி என்றாள்...
நான்கு நாட்களுக்கு பிறகு...
விஜய்யும் சதிஷ்ஷூம் ஹோட்டலுக்கு வந்தனர் என்னாச்சு சதிஷ் நான் சொண்ண வேல....
அம்மா பேர் தெய்வானை
அப்பா பெயர் ராமமூர்த்தி
தங்கச்சி சர்மிளா
தம்பி அரவிந்தன்
அம்மா இறந்துட்டாங்க என்றதும் சிறு அதிர்வ்வு விஜய்க்கு என்ன சொல்ற சதிஷ் அம்மா இறந்துட்டாங்களா...??
ம்ம் இறந்து மூன்று வருசம் ஆச்சு அப்பாவுக்கு இந்த வயசுல்ல வர அனைத்து நோயும் இருக்கு அவராள எந்த வேளைக்கும் போக முடியாது வீட்ல்ல தான் இருக்கார்.....
சாரல் எவ்வளவு தாய்மை உணர்வுடன் அன்று ஹாஸ்பெட்டலில் சர்மிக்கு அந்த பூவை வைத்துவிட்டாள் அவள் அம்மா இறக்களை அவள் ரூபத்தில் இன்னும் வாழ்றாங்க என நினைத்தவனின் உள்ளத்தில் சாரல் மிதான காதல் பலமடங்கு பெருகியது...
தங்கச்சி சர்மிளா பீ காம் படிக்குறா தம்பி ப்ளஸ் டூ படிக்குறான்...
அடுத்து நம்ம பார்க்க போறது மிஸ்ஸஸ் சாரல் விஜய்யைப்பத்தி அவங்க தான் வீட்டின் தூண் அவங்க சொற்ப்ப வருமானத்தில் தான் குடும்பம் ஓரளவு கஷ்ட நிலை இல்லாமல் போகுது...
எவ்வளவு சம்பளம் வாங்குவா சதிஷ்...
என்ன ஏழு எட்டாயிரம் வாங்களாம்
என்றதும் விஜய் தனது காலில் இருந்த பூட்ஸை பார்த்தான் அதன் விலை பதினைந்தாயிரம். அப்போ சந்தோஷத்திற்க்கும் பணத்திற்க்கும் சம்மந்தம் இல்லை போல என நினைத்து கொண்டான்.....
காலேஜ் கல்ஜ்ரல்ஸ் வந்தது ..சிறப்பு விருந்துனராக கணேஷ் விஜய்யும் கலந்து கொண்டனர்...விழா தொடங்கியப்பிறகே சாரல் அங்கு வந்தாள் அவளை மட்டும் பார்த்துருந்தாள் இப்பொழுதல்லாம் விஜய் தனது சேட்டையை ஆரம்பித்துருப்பான்...
சர்மி அந்த காலேஜில் படிக்கிறது அவனுக்கு தெரியாது இப்பொழுது கவிதைப்போட்டியில் கலந்து கொள்வதற்காக அவள் மேடை ஏறவும் தான் ...சதிஷிடம்...
டேய் சாரல் தங்கச்சிடா என்றான்...
ஆமா விஜய்
அப்போ சாரலும் வந்துருப்பா நான் அவளை போய் பார்க்குறேன் எழப்போனவனை தடுத்து நிறுத்தியவன் ஒன்னு செய் ஷ்டேஜ் மேல ஏறி சாரல் எங்கு இருந்தாலும் மேடைக்கு வருக என கத்து எனவும்...
குட் ஐடியா என மறுபடியும் எழ போனவனை அமர வைத்தவன் அடேய் காதல் மன்னா அடங்குடா இங்க உன் அப்பாதான் கெஸ்ட் எதையாவது பண்ணி அவர் மானத்தை வாங்கிடாதே...
பிறகு சமாதானம் ஆனவன் அதுக்குள்ள போயிட்டானா....??
"அதல்லாம் போக மாட்டாங்க என்றான் சற்று கடின மாகவே சதிஷ்...
இன்னியாரம் இந்த சிங்கத்தை பார்த்து அந்த புள்ளி மான் எங்க பதிங்கிருக்கோ என நினைத்தான்..சதிஷ்..
சிறுது நேரத்தில் அனைத்து போட்டிகளும் முடிய கணேஷ் சிறுது ஊக்கம் தரும் பேச்சக்களை உறையாற்றி முடிக்க பரிசை விஜய் தான் வழங்கினான் . கவிதைப்போட்டியில் சர்மி வெற்றிப்பெற்றதாக அறுவிக்க மேடை யேறிய சர்மிளா சாரலை தேட...
புள்ளி மான் பதிங்கி தான் இருந்தது இவன் இவரு பய்யனா என நினைத்தவளின் மனம் கலக்கத்தில் இருந்தது...சாதாரண ஆள் என நினைத்து முதல் நாள் அவனை காரணம் மில்லாமல் திட்டியது பிறகு ஹாஸ்பெட்டலில் வைத்து திட்டியது இதல்லாம் ஞாபகம் வைத்து நம்மள ஏதும் செய்துவிடுவானோ எனவும் வயிற்றுக்குள் பயப் பந்து ஓடியது ....
அவளுக்கு தெரியாது அவளை அவன் எதுவும் செய்ய போவது இல்லை அவளுக்காக எதையும் செய்ய கூடியவன் விஜய் என்று .....
சர்மி தன்னை தேடுகிறாள் எனவும் தான் வேறு வழியில்லாமல் தன்னை நிமிர்த்தி எழுந்து நின்றாள்...அவளைப்பார்த்த விஜய் அவளுக்கான தனது பிரத்யோக புன்னகையே சிந்த அதை அவள் கண்டு கொண்டதாகவ்வே தெரியவில்லை...
பிறகு சர்மிக்கு பரிசைக்கொடுக்க அதை தனது செல்லில் படமெடுக்க அவள் போட்டா எடுக்க போகிறாள் என்றதும் ஷ்டையிலாக விஜய் போஸ் கொடுக்க சாரலுக்கு அவன் செய்கையில் புன்னகை வந்தது....
பிறகு சைகையில் சர்மியை வரச்சொண்ணவள் வீட்டுக்கு போலாம் எனவும் இன்னும் பங்ஷன் முடியலைக்கா எனவும் இவள் ஒருத்தி என் நிலம்மை தெரியாம இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்தாலும் என்னை கண்ணால்லையே முழுங்கிடுவான் என நினைத்தவள்...
எனக்கு பசிக்குதுடா வா போலாம் எனவும் சரி இரு என் பேக்கை எடுத்துட்டு வரேன் என்றவள் வந்ததும் அவளை தூக்கி கொண்டு ஒடாத குறையாய் இழுத்து கொண்டு ஓடினாள்..
அக்கா என்னாச்சுக்கா ஏன் இவ்வளவு அவசரப்பட்ற நான் என் ப்ரண்ட்ஸ்கிட்ட கூட சொல்லமல் வந்துட்டேன்...
அதான் தினமும் சொல்றியே பேசாம்ம வாடி என்றவள் நடந்த வேகத்தில் கால் இடறி கிழே விழப்போக .. சர்மி "அக்கா என கத்த அவளை பூ பந்தாய் தாங்கியது ஒரு வலிய கரம் .. இருவருக்கும் அப்படி ஒரு நிம்மதி பெருமிச்சு.
பின்பு தான் உணர்ந்தாள் தன் இடையோடு தாங்கி பிடித்தருப்பது ஒரு ஆணின் கரம் என்பதை வேகம்மாய் தன்னை விலக்கி தனியே நின்று எதிரே இருந்தவனை பார்க்க விஜய் தான் நின்று கொண்டுருந்தான்...
பார்த்து வரக்கூடாதா சாரல் விழுந்துருந்தா அடிப்பட்டிருக்கும்மே எனவும் "நான் விழுந்துருந்தாக்கூட பராவாயில்லை என்னை ஏன் பிடிச்சுங்க என கத்தியவளின் முகம் சுளிப்பைக்காட்ட .
அதைப்பார்த்த விஜய் ஒரு நொடி இப்படி ஒரு பார்வ்வையா என மனம் சுறுங்கி போனது...
அக்கா என்ன பேசுற அவர் உனக்கு ஹெல்ப்தானே பண்ணார் ...என சர்மி நீ அமைதியாய் இரு உனக்கு எதுவும் தெரியாது.
"இந்த ஒரு வாரம் தான் நான் நிம்மதியா இருந்தேன் கெடுக்க வந்திட்டிங்களா என விஜய்யை கோபக்கனலாய் பார்க்க....
நான் உன்னை தொந்தரவு பண்ண நினைக்கல சாரல் உன்னிடம் பேசத்தான் ட்ரை பண்ணேன்....என தன்னிலை விளக்கம் கொடுக்க....
ஐயோ நீங்க யார் சார் என்னிட்ட பேச உங்களுக்கும் எனக்கும் என்ன இருக்கு நீங்க பேசுறேன் பின்னாடி சுத்துறேன்னு என ஈசியா சொல்லுவீங்க ஆனால் அதன் மூலம் பாதிக்க படபோவது பெண்ணா பிறந்த பாவத்திற்க்காக நானும் என் குடும்பமும் தான் என்றவளின் குரல் இப்பொழுது கமறி வந்தது...
இந்த சதிஷ் எல்லாத்தையும் வேடிக்கைப்பார்த்தான் தன் தகுதிக்கு கீ ழே இறங்கினாள் இந்தப்பேச்சை கேட்டுதான் ஆகனும் என நினைத்தான் தான் எவ்வளவு சொல்லியும் கேட்காதப்போது இந்தப்பேச்சல்லாம் கேட்டு தொலையட்டும் அமைதியாய் நின்றுருந்தான்....
சர்மிக்கு தலையும் புரியாது வாழும் புரியாது நின்றுருந்தாள்...
நான் ஏற்கனவ்வே நான் உங்கட்ட வான் பன்னிருந்தேன் இனி மேலும் என் பின்னே சுத்தாதிங்கன்னு அப்பறம் ஏன் பின்னாடி சுத்திரிங்கன்னு புரியல இப்படி தான் உங்களை உங்க அம்மா வளர்ந்தாங்களா நல்லபழக்கம் சொல்லி வளக்கலையா என அவனை காயப்படுத்த வேண்டும் மென்ற நோக்கத்துடனே அவள் பேசி போக ....
இந்த முறை சதிஷ் அமைதியாய் இருக்கவில்லை பொம்பளப்பொறுக்கி ரேஞ்சிற்க்கு விஜய்யை அவள் பேச இந்த முறை வாயை திறந்து விட்டான் சதஷ்...
இதோ பாருங்க உங்க பின்னாடி சுத்துனது வேணா அவன் மேல தவறா இருக்கலாம்.அப்பறம் அவங்க அம்மாவும் அப்படி வளக்கல அவன் எப்படி பட்டவன்னு எங்களுக்கு தெரியும் .
எப்படி பட்டவர் உங்க ப்ரண்ட் ஒரு பொண்ணு பேசவே பிடிக்களையின்னு சொண்ணபிறகும் வந்து மறுமடியும் மறுபடியும் டார்ட்ச்ர் பண்ணுபவர் நல்லவர் வல்லவரா..இந்தமுறை அப்படி பேசியது சர்மி...
சாரலுக்கு இப்போது கோபத்துடன் அலுகையும் வர ஒரு ஓரம்மாய் போய் அலுது கொண்டுருந்தாள்...இவளுக்கு ரொம்ப தொல்லையை குடுத்தட்டம்மோ என நினைத்தவனுக்கு அது பெரும் வருத்தமளிக்க சாரலை தான் பார்த்துக்கொண்டுருந்தான்....
சர்மிளாவும் சதிஷூம் தன் ப்ரண்டுக்காகவும் தன் அக்காவுக்காகவும் சண்டைப்போட்டுக் கொண்டுருந்தனர்...
இதோ பாருங்க இனி உங்க ப்ரண்ட் மூலம் அலுதான்னா அப்பறம் நடக்குறதே வேற சொல்லிட்டேன்...
என்ன பண்ணமுடியும் உங்களால ஒன்னும் பண்ணமுடியாது உங்களால என்றான் சதிஷ் சற்று திமிறாகவே...
ஓ உங்க பணத்திமிரைக்காமிக்கிறிங்களா ஒரு கால் போதும் போலிஸ்க்கு உங்களை அள்ளிட்டு போய் நொறுக்கி உங்க வாசல்ல போடுவாங்க....
என்னது போலிசா ஹா ஹா ஹா விஜய் இங்க பார்டா இந்தப்பொண்ணு சொல்லுறதை ...போலிஸ் எங்களுக்கு சல்யூட் வச்சுட்டு போவாங்க நீங்க பார்க்கிறிங்களா வர சொல்லட்டும்மா என நக்கலாய் கேட்க்க சர்மி சதிஷை கோபம் ஜிவுஜிவுக்க முறைத்து பார்த்தாள்....
விஜய் அழுது கொண்டு இருந்த சாரலை வைத்தக்கண் மாறாமல் பார்த்துக்கொண்டுருந்தான்...அந்த அழகாய் செதுக்கிய மூக்கை அந்தப்புறமும் இந்தப்புறமும் சிலுப்பியப்படி அவள் அலுவதே கவிதையாய் இருந்தது...அப்பப்ப இவனை பார்த்து முறைத்து வேறு பார்த்துக்கொண்டாள்...."அலுகுறா ஆனா முறைக்குறா என நினைத்துக்கொண்டான் மனதில் புன்னகைத்தவாறே....
என்ன சார் கிண்டல் பண்றிங்களா என சர்மி சதிஷிடம் கேட்க்க..
ஆமா என்ன பண்ணமுடியும் உங்களால என்ன பண்ண முடியும்...
இவ்வளவு மட்டம்மாய் பேசுற உங்களையெல்லாம் இவங்க கெஸ்ட்ன்னு கூப்புட்டுருக்காங்க இதல்லாம் ஒரு காலேஜ் கேவலம்...
ஆமா நீங்கல்லாம் படிக்கறகாலேஜ் எப்படி இருக்கும் கேவலம்மா தான் இருக்கும் என்ற சதிஷை முறைத்தவள் சாரலிடம் வந்து....
அக்கா வா போலாம் இவங்ககிட்ட என்னப்பேச்சு ஜென்ஸ்,மேனஸ் எதுவும் கிடையாது .....
இல்லாதவங்க கிட்ட அப்படிதான் பேசுவோம்....
அக்கா எழுந்துரு போவம்....சதிஷிம் விஜய்யிடம் வந்து போலாம் எனவும்....
ஒரு நிமிசம் சதிஷ் என்றவன்....
இரண்டு அடி வைத்த சாரலை ஒரு நிமிசம் சாரல் என ஆழ்ந்து அழைக்க அந்த அழைப்பில் சாரல் மகுடிக்கு மயங்கியபாம்பாய் கட்டுண்டு நின்றாள் அசையாது.....
அருகில் போன விஜய் அவர் எதிரே சிறுது இடைவெளி விட்டு நின்றான்...
அவள் முகம் பார்த்து நின்றவன் என்னை பார் சாரல் என்றான் ஆழ்ந்த அவன் அழைப்பில் தன்னையரியாமலே அவன் முகம் பார்த்தாள் ஒரு ஒரே ஒரே நொடி அவன் முகம் பார்க்க அதில் என்ன கண்டாளோ அடுத்த நொடி தலையை தாழ்த்திக்கொண்டாள்....
அதைக்கண்டவனின் மனதில் அவளை நினைத்ததும் அவன் உணரும் அதே இதம் தரும் மழைச்சாரலை உணர்ந்தான்....
மார்புக்கு திறையிட்டு மறைக்கும் பெண்னே....
மனசையும் மறைக்காதே....
என் வயதையும் வதைக்காதே....
புல் வெளிக்கூட பனித்துளி என்னும்
வார்த்தைப்பேசுமடி..
என் புன்னகையாளி ஒரு மொழி
சொண்ணாள் என் காதலும்
வாழுமடி...
என்ன பார்க்க வேணாம் ஆனா நான் சொல்லுறதை கேட்டாள் போதும். நானும் சராசரி ஆண் மகன் தான் பொண்னுங்களை பார்க்குறது சைட் அடிக்கிறது எல்லாம் நானும் செய்வேன்..கொஞ்சம் அதிகமாவே அதல்லாம் நானும் செயததுண்டு.பாரினில் படிக்கும் போதல்லாம் பொண்ணுங்க என்னோட நெருங்கி பேசுவாங்க ஏன் நெருக்கம்மா வந்து முத்தம் கூட குடுபாங்க அதில நம்ம ஊர் பொண்னுங்களும் உண்டு...
அப்படி நெருங்கி பழகும் போது கூட எந்த பொண்ணு மேலயும் வராத உணர்வ்வு பத்தடி டிஸ்டன்ஷ்ல்ல இருந்த உன் மேல ஏற்பட்ட அந்த மேஜிக்கல் மொமண்ட்ட என்னால்ல வார்த்தையால விளக்கி சொல்ல முடியல்ல சாரல் அந்த உணர்வ்வுக்கு பேரு தான் காதல்னா எஸ் ஐ லவ் வித் யூ என்றான் அவன். அவள் முகம் குனிந்த படி அழுது கொண்டுதானிருந்தாள்....
இவ்வளவு அழகா யாரும் தன் காதலை சொல்லிறுக்க முடியாது என தான் நினைத்தனர் சதிஷூம் சர்மியும் அந்த அழகான காதல் காவ்யக் காட்சியை தங்களது மனதினுள் நிரப்பிக்கொண்டுருந்தனர் இருவரும்...
சர்மியிடம் வந்த விஜய் சர்மி உன் அக்காவை நான் எவ்வளவு விரும்புறேன்னு என்னால்ல சொல்ல முடியலை...என்னை உன் அக்கா கல்யாணம் செய்துட்டா உனக்கு நல்ல ஃப்ரதரா இருப்பேன் உன் தம்பிக்கு நல்ல மாமாவா இருந்து சர்ப்போட் பண்ணுவேன், உன் அப்பாவுக்கு நல்லா மகனா இருப்பேன்...
என சொல்ல சர்மியே தன் அக்காவின் மேல் இவ்வளவு காதலா என உருகி தான் போனாள்.ஆனால் அவள் என்ன பதில் சொல்லுவாள் பதில் சொல்லவேண்டியது சாரல் தானே....
மறுபடியும் சாரலிடம் வந்தவன் இப்படி சினிமா தனம்மா லவ் சொல்றது எனக்கு பிடிக்காது இருந்தாலும் சொல்றேன் என்றவன் ஒரு காலை முட்டி இட்டு மறுகாலை நிமிர்த்தி தன் இரு கையையும் தன் நெஞ்சில் வைத்துக்கொண்டு அவள் முகம் பார்த்தான். "ஐ லவ் யூ சாரல் பேபி..என்னை கல்யாணம் பண்ணிப்பியா என விஜய் கேட்க்க அதில் தான் எவ்வளவு அழகு...
No comments:
Post a Comment