This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday, 26 February 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 7


Click here to get all parts

அரவிந்துக்கு இறுதி தேர்வு முடிந்துருந்தது..என்னடா எப்படி எக்ஸாம் எழுதிருக்க என சாரல் கேட்க்க...



ம்ம் சூப்பரா பண்ணிருக்கேன்க்கா ஆனா நான் நினைக்கிற காலேஜ்ஜில் இடம் கிடைக்கும்மான்னு தான் தெரியல...



எந்த காலேஜ் அவன் பெயரைச் சொண்ணான் அவ்ளோ பெரியக் காலேஜா பணம் ஏதும் எதிர் பார்பாங்களே என சாரல் சொண்ணதும் அரவிந்தின் முகம் வெகுவாய் வாடி விட்டது....



சரிடா ரிசல்ட் வரட்டும் பிறகு பார்க்கலாம்.என் தம்பி மார்க்கைப்பார்த்துட்டு அவன் அவன் ப்ரி சீட் கொடுக்க போட்டி போடுவாங்க எனவும் தான் அரவிந்தின் முகம் சிரிப்புக்கு வந்தது....



ரிசல்ட்டும் வர அரவிந்த் நல்ல மார்க் எடுத்துருந்தான்.அவன் சொண்ண கல்லூரிக்கே போக கல்லூரி நிர்வாகம்மோ"உங்க தம்பி ரொம்ப நல்ல மார்க் எடுத்துருக்கான்.நாங்க ப்ரி சீட் குடுப்போம் தான் ஆனால் அதல்லாம் நெம்பிடுச்சு.அப்படி இங்க படிக்கனும்னு நினைச்சா நாங்க சொல்ற பணத்தை கட்டுங்க எங்க கல்லூரியில் தாராளமாய் படிக்கலாம் என்றவர்கள் கட்ட வேண்டிய பணத்தை சொல்ல சாரலுக்கும் அரவிந்துக்கும் மயக்கம் வராத, குறைதான்....



பஸ்டாண்ட் என்று கூட பார்க்கவில்லை அரவிந்த் ஓ வென அழுது விட்டான்.அவனை சாமாதானம் கூட பண்ண முடியாமல் மன வேதனையில் அமர்ந்து இருந்தாள் சாரல்.பிறகு அவனிடம் அழாதே அரவிந்த் இந்த கலேஜ் இல்லைன்னா வேற காலேஜ் என சமாதானம் பண்ண முயல அவனோ.....



கிடைக்கும்க்கா பணம் அவனுங்க கேட்க்குற அஞ்சு லட்சத்திற்க்கும் பத்து லட்சத்திற்க்கும் எங்க போறது.நம்மல மாதிரி ஏழைங்கள்ளாம் பணத்தை கையில்ல வச்சிட்டா படிக்க போக முடியும்.ஏன் காசு இருந்தா தான் படிக்கனும்மா நம்மல்லா பெரிய படிப்பு பெரிய வேலயின்னு போக கூடாதா என்று அழுபவனைக்காண முடியாமல் கண்களில் நீர் துளிர்ந்தது சாரலுக்கு....



முதல் முதல்லாய் ஏழையாய் பிறந்ததையை எண்ணி மனம் வெதும்பி போனாள்.நம்மளும் வசதி படைத்தவர்களாக இருந்துருந்தாள் இன்னியாரம் அவங்க கேட்ட பணத்தை அவங்க முகத்தில் தூங்கி எரிஞ்சிட்டு அரவிந்தை அங்க சேர்த்து படிக்க வச்சுறுக்கலாம் என எண்ணியவள் அரவிந்தை சமாதானம் பண்ணுவதற்க்குள் பெரும் படாகி விட்டது. ....



மறு நாள் காலையில் உற்சாகம்மாய் கல்லூரி கிளம்பிக்கொண்டுருந்தான் அரவிந்த் அவனது உற்சாகம் மற்றவர்களையும் தொத்த முக மலர்ச்சியுடன் அவனைப்பார்த்துக்கொண்டுறுந்தனர் மற்றவர்கள்....



இன்னும் சாரலால் நம்பவ்வே முடியவில்லை அப்படி என்னதான் ஒரு பகல்யையும் ஒரு நைட்ல்லையும் நடந்துருக்கும்..



விடியலில் வந்தது அந்த போன் கால்.உங்க தம்பியோட மார்க் பார்த்து நாங்க அவங்களுக்குன்னே பெஷல் சீட் ஒதுக்குறுக்கோம் உங்க தம்பி மாதிரி ஒரு பய்யன் எங்க காலேஜ்ஜில் படிச்சா எங்களுக்கு தான் பெருமை அதனால் உங்க தம்பியை எங்க காலேஜில் ஜாயின் பண்ணிக்கோங்க என சொல்ல எப்படி இதல்லாம் என சாரலின் மூளையை சிந்திக்க விடாமல் செய்துருந்தது அரவிந்தின் மகிழ்ச்சி....



அவனை மகிழ்ச்சியாய் அனுப்பி வைத்தனர் கல்லூரிக்கு...



முதல் நாள் மதியம்..



தனது ஃகேபினில் இருந்த விஜய் சில கோப்புகளை தீவிரம்மாக பார்த்துக்கொண்டுருந்தான்...



அப்பொழுது மே ஜ கமின் சார் என்ற குரல் கேட்க்க "இவனுக்கு வேற வேளை இல்லை என நினைத்த விஜய் "எஸ் கமின் என்றதும் சதிஷ் உள்ளே வந்தான்....



நீ ஏண்டா நாக் பண்ணிட்டு வர என்று செல்லம்மாய் அழுத்துக்கொண்டான் சதிஷை பார்த்து....



இப்போ தானே நீ இங்க இருக்க இதுக்கு முன்னாடி உன் அப்பா இருந்தார் அவரிடம் வரும் பொழுது நாக் பண்ணாம்ம வரமுடியும்மா அது தான் இப்போ தொடர் கதை ஆயிடுச்சு என அவனும் அழுத்துக்கொள்ள.....



அந்த கதையை இதோட நிறுத்து இல்ல உனக்கும் எனக்கும் டிஸ்டன்ஷ் ஆயிடும் பார்த்துக்க என பொய்யாய் விஜய் மிரட்ட ....



ஜயோ அதை இன்னைக்கே முடுச்சுட்றேன்.என் நண்பனுக்கும் எனக்கும் இடைவெளி வந்தா இந்த நண்பன் மனசு தாங்குமா என சதிஷ் சோகம் பாட....



போதுடா என்ன விஷயம் எதாவது முக்கியம்மான விஷயம்மா மறுபடியும் அந்த 

வீ ஆர் ஆளுங்க என்றபோதே...



இல்லை இது மிஸ்ஸஷ் விஜய் பத்தி என்றதும் விஜய் அழகாய் சிரித்தான்...



என்ன சொல்லு ....



அரவிந்த் இருக்கான்ல்ல ப்ளஸ் டூ வில் நல்லா மார்க் எடுத்துருக்கான்....



எடுத்த மார்க்குக்கு ப்ரீ சீட் கிடைக்கும்னு காலேஜ் போயிருக்காங்க ஆனா கிடைக்கலை.நாங்க சொல்ற பணத்தை கட்டுன்னா இடம் கிடைக்கும் என சொல்லிட்டாங்க போல அரவிந்த் ஒரே அழுகை அதைப்பார்த்த மிஸ்ஸஷ் விஜய்யும் அழ ஒரே பாசமலர் சீன் தான் போ என்றான் சதிஷ்....



எந்த காலேஜ் ப்ரிண்ஷி பேரன்ன என்று விஜய் நிதானம்மாக கேட்க்க சதிஷ் அவனை கூர்ந்து பார்த்தான்."அதைப்பார்த்த விஜய் "என்னடா அப்படி பார்க்குற.....



இல்லை உன்னோட அமைதிக்குப்பின்னாடி மத்தவங்களுக்கான ஆபத்தை தான் பார்க்குறேன் என்றான் மெல்லியக்குரலில்....



தெரியுதுல்ல சாரல் அரவிந்த் ரெண்டு பேரையும் அழவச்சவனை அழ வை அப்பறம் அவனுங்க கேட்குறப்பணத்தை கட்டி அரவிந்தை அவனுங்களே கூப்பிட்டதா சொல்ல வை என அசால்ட்டாய் சொண்ண நண்பனை அரண்டுப்போய் பார்த்துருந்தான் சதிஷ்.....





விஜய்யின் அசுர வளர்ச்சியில் சில அரசியல் பிரமுகர்கள் பழக்கமும் சில தொழில் அதிபதிகளின் நட்பும்,சில நம்பிக்கையாணவர்களின் ஆள் பலம்மும் சேர அவர்கள் விஜய்யின் சொல்லுக்கு அடிப்பணிந்து எதையும் செய்யக்கூடியவர்களாக இருந்தனர்.இது அவனது அப்பா கணேஷ்சிற்க்கு கூட தெரியாது.கணேஷ் தனது தொழில் என்று மட்டும்மே இருப்பவர் மற்றவர்களை எடைப்போட மாட்டார் அது நமக்கு தேவை என்ன என்று இருந்து விடுவார்.விஜய் அப்படி ஆராய சில விரோதிகளையும் சம்பாத்திருந்தான்.அவர்களுக்கு சிம்ம சொப்பணம்மாக விளங்கினான் விஜய்.....



அப்படி என்ன செய்தார்களோ மறு நாள் அரவிந்திற்க்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது பணிவாக......



மாலை சர்மி கம்யூட்டர் கிளாஸ் முடிய வீட்டிற்க்கு கிளம்பிக்கொண்டுருந்தாள்.செண்டரை விட்டு வெளியே வரும் போது சமித் அவளுக்காக காந்திருந்தான்.அவனைக்கண்ட சர்மி அவனைக்காணததைப்போல் கடந்துபோக அவளை பின் தொடர்ந்தான் சமித்....



சர்மி நில்லு உங்கிட்ட கொஞ்சம் பேசனும் "அவளோ எனக்கு விருப்பம் இல்லை நான் உங்க கூட பேச தயாராவும் இல்லை என்றவள் வேகம்மாய் நடக்க முயல...



ஒரு நிமிஷம் நில்லு சர்மி என்று அவன் கட்டளையாய் சொல்ல எரிச்சலுடன் நின்றவள் அவனைப்பார்த்து "என்ன வேணும் உங்களுக்கு என்ன வேணும் என்று கத்த.....



ஏ இப்படி பண்ற சர்மி நான் என்ன உன்னை தப்பாவ்வ பார்த்து உன் பின்னாடி சுத்துட்றுக்கேன்.நீ ஸ்கூல் போன நாள்ள இருந்து இப்போ காலேஜ் போற வரைக்கும் உன்ன பார்த்துருக்கேன்.நீயும் என்ன பார்த்தருக்க எப்பாவது உன்னை என்னோட கண் தப்பா பார்த்துருக்கும்மா...



சர்மி அவன் சொண்ண எதுக்கும் பதில் பேசவில்லை முகத்தை உற்றன்ன வைத்துக்கொண்டு நின்றுருந்தாள்....



இப்பக்கூட நான் உன்னிட்ட பேச வந்ததுக்கு காரணம் கூட வீட்டுல்ல எனக்கு பொண்ணு பார்த்துட்டுருக்காங்க என்றதும் அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள் சர்மி.அவள் அதிர்ந்த முகம்மே சொண்ணது அவள் தன்னை விரும்புகிறாள் என்பதை அதில் சமித்திற்க்கு பெரும் சந்தோஷம்.மெலிதாய் புன்னகைத்தான் அவளைப்பார்த்து....



உங்க வீட்டுல்ல இருந்து யாராவது வந்து பேசினாங்கனா நம்ம கல்யாணம் நடக்கும் என்றதும்"என்னது இவன் வீட்டிற்க்கு வந்து பேசுறதா இது மட்டும் அப்பாவுக்கு தெரிந்தாள் என் முகத்திலையே முழிக்க மாட்டார்.அப்பறம் அக்காவுக்கு தெரிந்தாள் பயங்கரம்மா கோபப்படுவா..


அவனிடம் திரும்பியவள் இதோ பாருங்க நீங்க யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்கிங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.நான் என்னம்மோ சம்மதம் சொண்ண மாதிரி வீட்டுல்ல வந்து பேச சொல்றிங்க.இதோட இந்த பேச்சை நிறுத்திட்டு வேற வேல இருந்தா பாருங்க என்றவள் நகர போகையில் அவள் கை பிடித்தான் சமித்...





அவனின் இந்த செயலை எதிர்பாராத சர்மி அதிர்ந்து அவன் முகம் பார்க்க "எனக்கு உண்மையான பதில் சொல்லிட்டு போ சர்மி என்றவனிடம் சீறினாள் சர்மி....



நீங்க கேட்டதற்க்கு தான் பதில் சொல்லிட்டேன்ல்ல என் கையை விடுங்க முதல்ல யாரவது பார்த்தா தப்பா ஆயிடும்....


எனக்கு சரியாண பதில் சொல்லாமல் நா உன் கையை விடப்போறது இல்லை என அவனும் பிடிவாதம் பண்ண.....





விட்றா அவ கையை என்ற தீ உறுமல்  வர இருவரும் குரல் வந்த திசையை பார்த்தனர் அங்கு விஜய் சமித்தை எரித்து விடும் பார்வ்வையில் நின்றுந்தான்...சர்மி அவனைப்பார்த்து மிரண்டு விழித்தாள்.விஜய்யை யார் என்று பார்த்ததும்மே தானாக அவள் கையை விட்டான்.....



எவ்ளோ தைரியம் பப்ளிக் ப்ளேஷ்ல்ல வச்சு ஒரு பொண்னோட கையை பிடிப்ப என்று அவனை துவம்சம் செய்யும் வெறியுடன் அவனை நெருங்க "அவரம்மாய் சமித் முன் வந்து நின்றாள் சர்மி"மாமா அவரை விட்டுங்க என்றபடி அவளை ஒரு நொடி கேள்வியாய் நோக்கின விஜய்யின் விழிகள் அவள் கண்களின் தெறிந்த கெஞ்சலில்"மாமா என்ற அழைப்பிலும் தனது கோபத்தை மட்டுப்படித்தியவன் வேறு திக்கில் திரும்பி நின்று கொண்டான்.....



சமித்திடம் இங்க இருந்து போங்க எனவும் சமித் ஒரு வினாடி விஜய்யை நோக்கியவன் அங்கு இருந்து போனான்.சமித்திற்க்கு விஜய்யை பற்றி நன்கு தெரியும் அதற்க்கு காரணம் அவனது அப்பா மயில் வாகனம் அவர் விஜய்யின் அப்பா கணேஷின் நண்பர் துரையிடம் தான் பீ ஏ வாக வேலப்பார்க்கிறார்.அவர் எனி நேரமும் தனது நண்பன் மகனின் தொழில் திறமை பற்றியும் அவனது அசுர வளர்ச்சி பற்றியும் இப்பொழுது பெரும் புள்ளிகள் கூட அவனைக்கண்டு ஒதுங்கி போவதை பற்றியும் பெருமையாக பேசுவார் அதை அப்படியே வீட்டில் வந்து ஒப்பிப்பார் மயில் வாகனம்.....



ஆனா இவன் எப்படி சர்மி மேல் இவ்வளவு அக்கறையுடன் அதுவும் சர்மி அவனை அவ்வளவு உரிமையா மாமான்னு கூப்பிட்றா இவங்களுக்கும் அவங்களுக்கும் அப்படி என்ன உறவா இருக்கும்.எப்படி பார்த்தாலும் ஒட்டாதே ஏணி வச்சு பார்த்தாக்கூட எட்டாதே என்ற சிந்தனையுடன்னே சமித் வீடு நோக்கி பயணமானான்......



அவன் யார் சர்மி ஏன் உன்னிட்ட அப்படி நடந்துக்கிறான்.....



சர்மி அழுத படியே பதில் சொண்ணாள் எனக்கு தெரியாது.....



தெரியாதா தெரியாதவன அடிக்க வந்தா அவன் முன்னாடி வந்து நின்னு அவனை பாதுகாப்பியோ ரோட்டுல்ல இன்டிசண்டா நடந்துக்கிறான் அவன் எதுக்கு அப்படி நடந்துகிட்டான் பதில் சொல்லு......



ப்ளிஸ் மாமா என்னிட்ட எதுவும் கேட்காதிங்க நான் போறேன் என்றவள் அழுக....



எரிச்சல் வந்தது விஜய்க்கு சரி வா நான் உன்னை வீட்ல்ல ட்ராப் பண்றேன் எனவும்"இல்லை தனியாவே போயிக்கிறேன் எனவும்"சரி பார்த்து போ என்றான்.....


அவள் போனதும் சதிஷிற்க்கு போன் பண்ணியவன் சமித்தை பற்றி விசாரிக்க சொண்ணான்...





இரவு எட்டு மணிக்கு தான் வீடு வந்தாள் சாரல்...அரவிந்த் வந்ததும்"எனக்கு பசிக்குத்துக்கா என்றதும்"ஏண்டா அதான் சர்மி இருந்தாலே உனக்கு எதும் செய்து தரலையா என கேட்க்க....



அவ வந்ததும் ரூம் கதவை சாத்திக்கிட்டவ தான் அதுக்குப்பிறகு வெளியவே வரல....


உடம்பு ஏதும் சரியில்லாம இருக்கும் சரி வா உனக்கு பசிக்குதுன்னு சொண்ணில்ல வா தோசை ஊத்தி தர்றேன் சமையல் கட்டுக்குள் நுளைந்தவள் ப்ரிட்ஜில் இருந்த சாம்பாரையும் சட்னியையும் சூடு படித்திக்கொண்டுருந்தவளின் நினைவு சர்மி சுத்திதான் இருந்தது.



எப்பவும் இப்படி இருக்க மாட்டாளே இன்னைக்கு என்ன ஆச்சு என்னியவள் அரவிந்திற்க்கு தோசை சுடுவதில் கவனம் ஆனாள்....



எனக்கு போதும்க்கா...

என்ன சாப்பிட்ற அரவிந்த் இன்னும் ரெண்டை சாப்பிடு என்று இன்னும் ரெண்டை தோசையை சாப்பிடவைத்தாள்....



அக்கா எனக்கு போதும் இதுக்கு மேலே சாப்பிட முடியாது என்றவன் "ராஜ் வீடு வரைப்போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்..



வாசலில் காற்றாட அமர்ந்துருந்த ராமமூர்த்தியிடம் சென்றவள்"அப்பா நீங்க சாப்பிட்றிங்களா என கேட்டாள். அவரோ"இல்லம்மா அப்பறம் சாப்பிட்றேன் என்று சொல்ல "சரிப்பா என்றவள் சர்மியிடம் சென்றாள்.....



சர்மி படுத்துருந்தாள்.சர்மி எழுந்துரு எனவும் எழுந்து அமர்ந்தாள்.ரொம்ப நேரம் அழுதுருக்கவும் முகம் எல்லாம் வீங்கி கண் ரெண்டும் சிவந்து இருந்தது."பதறி சாரல் என்னாச்சு சர்மி ஏ அழுதுருக்க என்று கேட்க இன்னும் அழுகை கூடியது...



என்னதுன்னு சொல்லு சர்மி சிறு கண்டிப்புடன் கேட்டாள்...



அது வந்து சமித் சமித் என்றாளே தவிர மேற்கொண்டு எதுவும் சொல்லமுடியாமல் தடுமாற "சமித் என்றதும் சாரலின் முகம் இறுகியது.....



என்னிட்ட.....



உன்னிட்ட தப்பா ஏதும் என்று கேட்டவளின் குரலில் சின்னதாய் சீற்றம்..."அவசரம்மாய் மறுந்த சர்மி" அவருக்கு வீட்டுல்ல கல்யாணம் வக்கிறதா இருக்காங்க என்றதும் கடுப்பாகி போனால் போனாள் சாரல்....



அவனுக்கு கல்யாணம்முன்னா நீ ஏண்டி உட்காந்து ஒப்பாரி வக்கிற அவன் யாரையும் கல்யாணம் பண்ணிட்டு போறான் உனக்கு என்ன நீ உன் வேளையைப்பார் என்றாள் கண்டிப்புடன்....



அப்படி என்னால்ல இருக்க முடியல்லக்கா அவனோட பேசினது இல்லை சுத்தினது இல்லை ஆனா எப்ப விரும்ப ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியலைக்கா என்றவளை அதிர்ந்து நோக்கினாள் சாரல்....



என்னடி இப்படி பேசுற இது அப்பாக்கு தெரிந்தாள் என்ன நடக்குமுன்னு தெரியும்மா எதையாவது மனசுல்ல போட்டு குழப்பிக்காதே சர்மி என்று சொல்லிவிட்டு எழ போக சர்மி சாரலிடம்....



அக்கா சமித் இல்லாட்டி நான் உயிரோட இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட சர்மியை கண்கள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தாள் சாரல்......

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.