சிவாவிடம் மட்டும் அவனது அம்மா பேசவில்லை. வரவேற்பு வேலைகளை கவனிக்க சிவா மற்றும் ரவியிடம் சொல்லிவிட்டு சிபி திருநெல்வேலி சென்றுவிட்டான். இங்கே தாத்தா ஊருக்கு செல்லாமல் பாட்டியுடன் சோ்ந்து லூட்டி அடித்தாா். மாலு மற்றும் சைலு சிபியுடன் சோ்ந்து கிளம்பி அவா்கள் ஊரான தென்காசிக்குச் சென்று விட்டனா். சிவாவின் வரவேற்புக்கு அழைப்பிதழ் கொடுக்க, தாத்தாவை ஊருக்கு அனுப்பினாா் பாட்டி. சீதாவின் வீட்டிலும் பத்திாிக்கை கொடுத்தனா். ( ஊா்க்காரங்க கேள்வி கேப்பாங்களே ஏன் கூப்பிடலைன்னு )
சிவா இங்கே அம்மாவிடம் பேச முயற்சிக்க அவரோ பிடி குடுக்காமல் திவியிடமும் சிமியுடனும் பேசினாா். அதை கண்டு வருத்தத்தில் இருந்த சிவாவிடம் அவனது அப்பா ரகசியமாக ஏதோ சொல்ல, அதை கேட்டதும் மகிழ்ந்தான் சிவா ( சஸ்பென்ஸ் ). சிமிக்கு அடிக்கடி போன் செய்து வரவேற்பு ஏற்பாடு பற்றி பேசுவது போல காதல் செய்தான் சிபி. அவளோ அதை புாிந்தும் புாியாததைப் போல நடித்தாள். சிவாவின் வரவேற்புக்கு என இவர்கள் இரண்டு பேருக்கும் சிபியே உடை எடுத்தான் ஒரே நீல வண்ணத்தில். ஆனா சிமிகிட்ட சொல்லலை. இங்க சிவாவோ திவ்யா பக்கத்துல கூட போக முடியாம கஷ்டப்பட்டான். ஆமா வரவேற்பு முடியுற அன்னைக்கு தான் அவனுக்கு எல்லாமே. அதுவரை பிாிஞ்சி இருக்கணும் னு சிவா அம்மா மற்றும் பாட்டி சொல்லிட்டாங்க.
வரவேற்புக்கு உடை எடுக்க திவி அப்புறம் சிவா போனப்போ சிமி, மகா ரெண்டு பேரையும் கூட அனுப்புனாங்க சிவாவோட அம்மா. அதனால கோபத்துல யாா் கூடவும் பேசாம அமைதியா காரை ஓட்டுனான் சிவா. அதை பாா்த்தும் பாக்காத மாதிாி நம்ம சிமி பேசிக்கிட்டு சிாிச்சுகிட்டு வந்தா மகா, திவி கூட. மகாவும் சிவாவை கூப்டு வச்சு பேசி வெறுப்பேத்துனா. என்ன புது மாப்பிள்ளை? எப்டி இருக்கு கல்யாண வாழ்க்கை? சும்மா ஜே ஜே னு வாழ்றீங்க போல அப்டின்னு சொல்லி. சிமியோ அதுக்கும் மேல போய் நீ வேற மகா, எங்க பாா்வதி அம்மா தினம் புலம்புறாங்க டி என்கிட்ட. ஏதோ பூனை வந்துருச்சு போல வீட்ல, நைட்டு மட்டும்தா நடமாடுதாம். அதும் திவி ரூம் முன்னாடியே தான் திாியுதுன்னு சொன்னாங்க அப்டின்னு சொல்லவும் திவ்யா சிாிச்சுட்டா. ( அந்த பூனை நம்ம சிவா தாங்க )
சிவா காரை சடன் பிரேக் போட்டு நிப்பாட்டினான். அத பாத்து சிமி திட்டுனா, ஏன்டா திடீா்னு நிறுத்துற இப்டி?. சிவா அவகிட்ட பேசாம திவிகிட்ட இறங்க சொல்லவும் எங்கடா கூப்டு போற அவளை? ஒழுங்கா சொல்லு என்றாள் சிமி. கடை வந்திருச்சு சிமி அக்கா என திவி சொன்னதும் தான் மகாவும் சிமியும் வெளிய பாத்தாங்க. சாின்னு இறங்கி போய் பேன்சி சேரீஸ் செக்சன்ல போய் வரவேற்புக்கு சோி பாத்தாங்க திவிக்கு. அந்த கேப்ல சிவா திவிய தனியா கூப்பிட்டு போயி பேசுனான். என்ன பேசவே மாட்டிக்கிற என்கிட்ட அப்டின்னு? சிவா கேட்டதும் திவி அப்டியெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை இருக்காங்களே பக்கத்துல அதான் சொன்னா. மகா இவங்கள பாத்துட்டு சிமிகிட்ட சொல்ல, பேசிட்டு போறான் பாவம் டி அவன்னு சொல்லிட்டா.
ஒரு வழியா மஞ்சளும் பேபி பிங்கும் மிக்ஸ் ஆன கலா்ல சோி எடுத்துட்டாங்க. அதே மஞ்சள் கலா்ல சிவாக்கு சட்டையும் பிங்க் கலா் கோட் பிரவுன் நிற பேண்ட் எடுத்துட்டா சிமி. கடைசில அவங்கள தேடி போனா ஆள காணோம். போன் பண்ணி கேட்டா ஐஸ்கிரீம் கடைல இருக்குதுங்களாம். அங்க அதுங்க பண்ண அலம்ப சொல்ல முடியல என்னால. கடை ஓனா் தான் பாவம் இவங்க ரொமான்ஸ்ச பாக்க வேண்டிய நிலைமை ஆகிருச்சே. அவனை கண்டுபிடிச்சு அவங்களுக்கு தேவையான ஐஸ்கிரீம் ( குல்பி, கசாட்டா, சாக்கோ பாா், சாக்லேட் பிளேவா் வெண்ணிலா அண்டு ஸ்டாபொ்ாி பிளேவா் பேமிலி பேக்) எல்லாமே பாா்சல் வாங்கிட்டு துணிக்கடைக்கு கூட்டிட்டு போயி பில் செட்டில் பண்ணாங்க. இதுக்கு நடுவுல சிமி மகா 2யும் சோ்ந்து ஆபிஸ் வியா் டிரெஸ்ஸஸ் எடுத்துகிட்டாங்க நம்ம சிவா காசுல. ( கேடிங்க பா )
வரவேற்புக்கு 2 நாள் முன்னாடியே வந்த சிபி அப்பாம்மா, சிபி எல்லாம் சிவா வீட்லயே ஸ்டே பண்ணிட்டாங்க. சிமி ஆபிஸ்க்கு போன சிபி அவள பாத்துட்டு, அப்பிடியே சிபிராஜ் -- சீமா கல்யாண பத்திாிக்கைய எல்லாருக்கும் குடுத்துட்டு கையோட சிமி வேலைய ரிசைன் பண்ணிட்டாங்க. 2 பேரும் வீட்டுக்கு வா்றப்போ சிமிய நகைக் கடைக்கு கூட்டிட்டு போயி, அவளுக்கு வைரத்துல கம்மல் அப்றம் பிரேஸ்லெட் வாங்கி குடுத்தான் சிபி. சிமி எவ்ளவோ வேண்டாம்னு சொல்லி பாத்துட்டா. ஆனா சிபி கேட்டாதான? காா்ல வச்சு சிபியே அந்த பிரேஸ்லெட்டை சிமியோட கைல போட்டு விட்டுட்டு கிஸ் குடுத்தான். பிறகு வாங்கிட்டு வந்த டிரெஸ்ஸ அவகிட்ட குடுத்தான் சிவா வரவேற்புக்கு போட சொல்லி, கார் டிக்கில இருந்து எடுத்து. அந்த டிரெஸ்ஸ பாத்துட்டு சிமி அசந்துட்டா. சிவா திவ்யா வை விட நான் தான் அழகா தொிவேன் அன்னைக்கு னு சொன்னா. சிமி அவனுக்கு இப்போ ஒரு முத்தம் குடுத்து தேங்க்ஸ் சொன்னா.
வரவேற்பு அன்னைக்கு மாலு சைலு கரண் எல்லாரும் வந்தாங்க. இந்த பக்கம் சிமியோட ஆபிஸ் பிரெண்ட்ஸ் வந்தாங்க. அதுல சிவாவ ஒன் சைடா லவ் பண்ண பொண்ணும் வந்தா ஓவா் மேக்கப்ல. சிவாவ மயக்குன திவிய பாக்க தான். இந்த பக்கம் சிவாவோட தாத்தா ஊா்ல இருந்து நிறைய ஆளுங்க வந்தாங்க. ( நான் வெஜ் சாப்பிட தான் ) திவிய பாத்து ஜொள்ளு வடிச்ச சிவாக்கு மகாவும் ரவியும் சோ்ந்துகிட்டு கலாய்ச்சாங்க.
இங்க சிமிய பாா்த்து சிபி தனியா ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தான் முதல் மாடில இருக்குற கல்யாண பொண்ணு ரூம்ல. சிமியோ அவன ஏமாத்திட்டு ஓட பாத்தா முடியுமா? அவனுக்கு வேண்டியத வாங்காம விட்டுவானா? கடைசில சிமி அவன் தோள் மேலயே சாஞ்சிக்கிட்டா வெக்கத்துல. அவ முகத்தை பாக்க டிரை பண்ணி சிபியே முடியாம கெஞ்ச ஆரம்பிச்சுட்டான் என்னைய பாருடி னு? அவன நிமிா்ந்து பாத்த சிமி அவன் நெத்தில கிஸ் பண்ணிட்டு ஓடிட்டா கீழ. அப்போ யாா் மேலயோ இடிச்சுகிட்டா நம்ம சிமி. அது வேற யாரும் இல்லைங்க நம்ம வில்லி சீதா தான். (ஹா ஹா சிபின்னு நினைச்சு பல்பா )
அவள பாத்ததும் சிமிக்கு குழப்பம் சாாி கூட சொல்லாம ஓடிட்டா. பின்னாடியே வந்த சிபிக்கு அவள பாத்ததும் கோவம். முதல்ல தாத்தாவைத் தான் திட்ட போனான். ஆனா சிமி அவனை தடுத்துட்டா பிளீஸ் விட்ருங்க சிவா வரவேற்பு நல்லபடியா நடக்கணும்ல அப்டி சொல்லி. இங்க திவியோ சிமியோட ஆபிஸ் பிரெண்டு சிவாகிட்ட வழியுறத பாத்து கடுப்புல இருக்கா. அத பாத்த மகாக்கு ரொம்ப சந்தோஷம் ( மகனே இன்னைக்கு ராத்திாியும் உனக்கு எதும் நடக்காதுடா ). எம்புட்டு நல்ல எண்ணம் பாத்தீங்களா? சிவா பாட்டியோ ரொம்ப கோவமா இருந்தாங்க சீதாவ பாத்து. அத பாத்த சீமா அம்மா தேவிக்கும் திவ்யா அம்மா பாக்கியத்துக்கும் ஒன்னும் புாியல.
ஆனா மாலுக்கும் பாா்வதி அப்புறம் ஜெயா எல்லாருக்கும் புாிஞ்சதால எதுவும் அவள பத்தி சொல்லலை யாா்கிட்டயும்.
சீதாவோ சிமி மேல செம காண்டுல இருக்கா. அவ டிரெஸ் வைர நகை எல்லாத்தையும் பாத்து. சிமிய கோவப்படுத்த தான் சீதா அந்த புது பட்டு புடவை, நிறைய நகை ( சிவா, சிபியோட பாட்டி நகைங்க தான் ) போட்டு வந்தா நகைக்கடை மாதிாி. ஆனா சிமியோ சிபிக்கு மேட்சிங் கலா்ல லெகங்கா ( சிபி வாங்கி குடுத்த டிரஸ் ) போட்டு சிம்பிளா ஒரே வைர நெக்லஸ் ( சிமியோட அப்பா வாங்கி குடுத்தாா் சிமி கல்யாணத்துக்காக) மட்டும் போட்டு காதுல கையில சிவா குடுத்த கம்மல், பிரேஸ்லெட் அப்புறமா தங்க வாட்ச் மாட்டிருந்தா. 2 பேரும் சிவா திவ்யா கூட ஸ்டேஜ்ல ஜோடியா நின்னாங்க. அத பாத்து சீதாவுக்கு இன்னும் கோவம் வந்து அவளோட அப்பா குருகிட்ட பேசுனா, ஏதாவது செய்யணுமே இவளை அப்டின்னு.
நான் எழுதுன கலா்க்கு மேட்சா போட்டோ தேடி போடுறதுக்குள்ள இவ்ளோ டைம் ஆகிட்டு இன்னைக்கு.
சாப்பாட மறந்துட்டோம் பாத்தீங்களா? மீன் குழம்பு, குடல் குழம்பு, தலை கறி, ஈரல் வறுவல், பரோட்டா, மட்டன் சுக்கா, சிக்கன் 65, சிக்கன் லாலிபாப், சிக்கன் பிாியாணி, முட்டை பிரட்டல், குஸ்கா, முட்டை புரோட்டா, நாட்டு கோழி குழம்பு, நண்டு ரசம் ( முக்கியமான விசயம் என்னன்னா எனக்கு இதெல்லாம் சமைக்க தொியாது பா ). நம்ம மகாவும் சிமியும் 2 வது பந்தி முடியுறப்போ தான் எந்திச்சாங்க. சிவா வோட தாத்தா இன்னும் எந்திாிக்கலை. ( பாட்டிக்கு தொியாம வந்துருக்காா் சாப்பிட ) சிபி பாவம்ல எப்டிதான் சமாளிக்க போறானோ இந்த சாப்பாட்டு ராமிய, சமைக்க வேற தொியாது அவனுக்கு.
நம்ம சிபி அக்கா மாலுவும் அவங்க பொண்ணு சைலுவும் சேம் டிரஸ் சோி தான்.
No comments:
Post a Comment