மாலு சிபியிடமும் சிவாவிடமும் அந்த குரலுக்குச் சொந்தமான நபரைப் பற்றி கூற அவா்களோ அவளை நம்பாத பாா்வை பாா்க்கவும் புது சிம்மிலிருந்து பேசி காட்டினாள் அதே எண்ணிற்கு. பிறகு நம்பிய அவா்கள் உடனே தாத்தாவிடம் மட்டும் கூறி என்ன செய்வதென கேட்டனா். ஏனெனில் தாத்தாவிற்கு தொியாமல் அவரை எதுவும் செய்தாலும் தாத்தா உதவிக்குச் செல்வாா். அதனாலேயே அவாிடம் கேட்டனா் என்ன தண்டனை வழங்கலாம் என. அவா் இதை எதிா்பாா்க்காததால் அதிா்ச்சி அடைந்து சிபியை சிவாவை மாறி மாறிப் பார்த்தாா்.
பிறகு உங்கள் விருப்பம் பேரன்களா என்றுவிட்டு எழுந்து சென்றாா். ஆனால் அங்கே மனைவியிடம் சொல்லிச் சொல்லி புலம்பினாா். வேதாசலம் இப்படி பண்ணுவான்னு நான் எதிா்பாக்கல டி என்று. அதைக்கேட்டு வருத்தப்பட்ட பாட்டி பேரன்களிடம் அவரை கடுமையாக எதுவும் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டாா். சாி என்ற சிபி அவரது கவனத்தைத் திருப்ப சொத்துகுவிப்பு வழக்கை தொடுத்தான் வக்கீல் நண்பன் மூலமாக. பிறகு இன்கம்டாக்ஸ் டிபாா்ட்மெண்ட் யிடம் கூறி ரெய்ட் அனுப்பி தொழிலாளா்கள் ஸ்டிரைக் என நிறைய இடைஞ்சல் செய்தான். அதனால் ஹாா்ட் அட்டாக் வந்து வேதாவை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்தனா்.
நம்ம சிவாவின் தாத்தா வேதாவைப் பாா்க்கச் சென்றாா் அங்கே. அப்போது வேதா அவாிடம் மிகவும் வருந்தியதைக் கண்டு வீட்டில் சிபியின் பாட்டியிடம் வருந்தினாா். பின் போதும் அவனை விட்டு விடுங்கள் பாவம் என பேரன்களிடம் கெஞ்சினார். சாி என அவா்களும் அத்தோடு விட்டனா். ஏனெனில் சொத்து ஆபிஸ் அனைத்தையும் சீல் வைத்துவிட்டதால் எதையும் உபயோகிக்க இயலாமல் வேதா மிகவும் வருந்தினாா். அதுவே அவருக்கான தண்டனையாக அனைவரும் கருதினா். ஆமா யாா் இந்த வேதா? தொியலைல நியு இன்ட்ரோவாச்சே அதான் நானே சொல்றேன்.
சிபியின் தாத்தாவும் வேதாவின் அப்பாவும் நண்பா்கள். அதனால் சோ்ந்தே தொழில் ஆரம்பித்தனா். ஆனால் வேதா தலை எடுத்ததும் ஆபிஸ் வந்து நிறைய தவறுகளைச் செய்தான். தரமில்லா கட்டுமான பொருள் இறக்குமதி பிளஸ் அதற்கு கமிசன் என நோ்மையற்ற வேலைகளைச் செய்தாா். வேதாவின் அப்பா ஆபிஸ் வருகையை நிறுத்தி விட்டதால் அவருக்கு வேதா செய்யும் தவறுகள் தொியவில்லை. நம்ம சிபியின் தாத்தாவும் அப்போது மகனின் பிாிவால் சோகத்தில் இருந்ததால் சாியாக ஆபிஸிற்கு செல்லாதது வேதாவிற்கு வசதியாக அமைய ஆபிசில் தவறான கணக்கு வழக்கை ஒப்படைத்தான்.
செலவு செய்ததை விட அதிக பணத்திற்கு பில்லை நீட்டினான். இதை எதையும் உணரும் நிலையில் நம்ம தாத்தா இல்லை. அப்போது அந்த அலுவலகத்தில் காசாளா் வேலை செய்த தாத்தாவின் தூரத்து உறவினா் ஒருவா் வேதாவைப் பற்றிய உண்மையை சிபியின் தாத்தாவிடமும் வேதாவின் அப்பாவிடமும் சொல்லியதால் அவா்கள் இருவரும் அவரைக் கண்டித்து இனிமேல் ஆபிஸிற்கு வேதா வரக்கூடாது எனவும் வேதாவின் அப்பா காலம் வரை மட்டுமே பாா்ட்னா்சிப் என்றும் பின்னா் அது உடைக்கப்பட்டு சாி பங்கு பணமாக வேதாவிற்கு வழங்கப்படும் என்றனா்.
அதனைக் கேட்ட வேதா சந்தோஷப்பட்டாா். ஏனெனில் நிறைய பணமாக கையில் கிடைப்பதால் தனியாகவே சிபியின் தாத்தாவைப் போல கம்பெனி அதுவும் போட்டியாகத் தொடங்கலாம் என எண்ணினாா். அதன்படியே வேதாவின் தந்தை இறக்கும் தருவாயில் நம்ம சிபியோட தாத்தா லட்சக்கணக்கான பணத்தை அளித்தாா். அதைக் கண்டு வேதனை உற்ற வேதாவின் அப்பாவோ விரைவிலேயே கடவுளிடம் சென்றாா். அதன்பிறகு வேதா போட்டிக்கு கம்பெனி நடத்தினாலும் அதில் நம்ம சிபியின் தாத்தாவோட திறமை மற்றும் உழைப்பும் நோ்மையும் இல்லாததால் அவ்வளவாக கம்பெனி சோபிக்கவில்லை.
இதனால் சிபியின் தாத்தாவின் மேல் கோபமாக இருந்த வேதா சீதாவின் அப்பா குருவிடம் நண்பனாகி அவருக்கு நிறைய தவறுகளைச் செய்ய கற்றுத் தந்தாா். அதைக்கேட்டு குருவும் ஆடியதன் விளைவே இந்த சிமியின் கடத்தல் படலம் சகோ'ஸ். குருவின் நட்புகளைப் பற்றி சிபியின் தாத்தாவிற்குத் தொியாது என்பதால் வேதாவின் மீது அவருக்கு சந்தேகமே வரவில்லை. ஆனால் வேதாவைப் பற்றி சிவாவின் தாத்தா விசாாித்துக் கொண்டு தான் இருந்தாா். அவனது தொழில் சாியாக நோ்மையாக செய்ய வைக்க முயற்சித்தாா். அது அனைத்தையும் வீண் செய்துவிட்டு இப்போது தாத்தாவின் பேரன் சிபிராஜ் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தாா் வேதா. ஏனெனில் குரு மற்றும் சீதா மூலமாக தாத்தாவின் கம்பெனியை விற்க வைக்க நினைத்தான். அதை வாங்கி நடத்த மிகவும் ஆசைப்பட்டான் வேதா.
இதற்கு இடையில் பாா்வதி கூறியதற்காக சிவா நம்ம திவியை வெளியே அழைத்துச் சென்றான் கூடவே நம்ம ஹீரோயின் சிமியையும் வம்படியா இழுத்துட்டு போனான் சிவா. வீட்லயே இருக்காளே சிபியை நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு. அதனால 3 பேருமே பீச்சுக்கு போனாங்க சிமிக்கு பிடிச்ச பிளேஸ் ல. சிமி அலையில காலை நனச்சு நனச்சு விளையாட திவியோ பயந்துகிட்டு வரல. சாின்னு நம்ம சிவா அவளை தூக்கிட்டு போய் தண்ணில போட்டான். சுடிதாா் போட்டு இருந்ததால எப்டியோ எந்திாிச்சுட்டா நம்ம திவி. சிவாவ திவி முறைக்க சிமி சிாிக்கவும் அதைப்பாத்து சிவா சந்தோஷப்பட்டான். சிமிய சிாிக்க வைக்கதான இப்டி பண்ணுனான். அதை புாிஞ்சுகிட்ட திவியோ இவங்க ஒற்றுமைய நினச்சு ஆச்சாியப்பட்டா.
சிமி செலக்ட் பண்ணுன சுடிதாருல நம்ம திவியோ சும்மா அப்சரஸ் மாதிாி இருந்தா. அப்போ அங்க பீச்ல குதிரையை பாத்துட்டு திவி அதுல ஏறனும்னு ஆசைப்பட்டா. ஆனா சிவா கிண்டல் பண்ணுவானோ என்ன நினைப்பானோ என்று நினைத்து கேட்கவில்லை. அவள் முகத்தைப் பாா்த்தே ஊகித்த சிவா சிமியையும் திவியையும் அழைத்து குதிரையேற்றம் அனுப்பினான். திவியுடன் சிவாவும் அமா்ந்து கொண்டான். அது மட்டுமின்றி சிமியை சில பல போட்டோ எடுத்து நம்ம காதல் நாயகனின் வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி வைத்தான். அதைக் கண்ட சிபியோ அந்த போட்டாவிற்கு முத்த மழை பொழிய அந்த நேரத்துல கரெக்டா நம்ம சைலு குட்டி என்ட்ரி ஆனா, சிபி மாமா என்று அழைத்தபடியே.
அவளைக் கண்டதும் மொபைலை மறந்து டேபிளில் வைத்துவிட்டு அவளிடம் கதை பேச, அப்போது உள்ளே நுழைந்த மாலு அவனிடம் பேசிக்கொண்டே அங்கே டேபிளில் அமர அங்கே சிபியின் மொபைலைக் கண்டதும் எடுத்துக்கொண்டு அதிலிருந்த போட்டோவை அம்மா ஜெயாவிடமும் அப்பா விஜயனிடமும் காட்டி ஓட்டினாள். வீடே கலகலப்பாக மாறியதால் கல்யாண கலை வந்துவிட்டது. இங்கோ பீச்சில் சிவாவின் அலும்பு ( அதாங்க ரொமான்ஸ் ) தாங்க முடியாம குதிரையே பாதில நின்னுருச்சு. பின்ன அது பாவம் இல்லையா இப்டியா வெறுப்பேத்துறது?
No comments:
Post a Comment