"டேய் டேய் தடியா அது என் சமோசா என் கிட்டே கொடு டா"..
" ஐயோ சுமி கேன்டீன்ல வெச்சு ஒரு டீம் லீடோரட மானத்தை வாங்காதே அங்க இருக்குற என் டீம் மேட்ஸ் எல்லாருமே இங்கே தான் பாக்குறாங்க கத்தாதே டி...."
" அது எப்படி அநியாயத்தை எதிர்த்து என்னாலே கத்தாம இருக்க முடியும்.. ஏற்கெனவே நாலு சமோசாவை உள்ளே தள்ளிட்டு, இப்போ என் பிளேட்ல இருக்குறதையும் ஆட்டைய போட நினைக்குறியா தடியா.. உனக்கே நியாயமயா இருக்கா இதெல்லாம்.... அடேய் ராமா இந்த தப்பை தட்டி கேட்க மாட்டியா நீ?"
" சுமி நீயாச்சு இல்லை.. உதய் ஆச்சு நான் நடுவுல தலையிட்டு உங்கள் கிட்டே நோஸ் கட் வாங்கிக்க விரும்பல, என்னை ஆளை விட்டுடுங்க" என ராம் சொல்லிவிட்டு சாப்பிடுவதில் கவனமாக இருக்க சுமி கடுப்பானாள்..
" அடேய் சோத்து மாடு உன்னை சப்போட்டுக்கு கூப்பிட்டேன் பாரு.. அதுக்கு என்னை சப்போட்டாவாலேயே அடிச்சுக்கனும்" என ராமை பார்த்து முறைத்தவள் என் சமோசவா என் கிட்டு கொடுடா என உதயின் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டாள்..
இவர்களின் கூத்தை வெகு தூரத்தில் இருந்தே கவனித்த அந்த கம்பெனியின் மேனேஜர் சிரித்தபடியே அவர்களின் அருகில் வந்து அமர்ந்து கொண்டார்...
" மேனேஜர் சார் நீங்களாவது அநியாயத்தை தட்டி கேளுங்களேன.... இந்த உதய் என்னோட சமோசாவ அபேஸ் பண்ணிட்டான்" என வாயில் அரைத்தவாறே அவரிடம் புகாரிட்டுக் கொண்டு இருந்தாள் சுமி...
" உதய் என்ன இருந்தாலும் நீ பண்ணுனது தப்பு ஒரு சின்ன பொண்ணை இப்படியா ஏமாத்துறது..." என உதயிடம் சொன்னவர் சுமியிடம் திரும்பி " இப்போ ஓகே வா சுமி நியாயத்தை நிலை நாட்டிட்டேனா? " என அவர் சகேட்க " டபுள் ஓகே சார்" என்றாள் அவள் புன்முன்றுவலோடு...
" உங்கள் மூனு பேரை பார்த்தா டீம் லீடர்ஸ் மாதிரியா இருக்கு சரியான வாலுங்க.. நீங்கள் மூனு பேரு சேர்ந்தாலே வாலாட்ட ஆரம்பிச்சுடுறீங்க.. ஆனால் என்ன இனி உங்கள் வாலுத்தனத்தை என்னாலே பார்க்க முடியாது.. எனக்கு பதிலா இன்னும் நாலு நாளிலே புது மானேஜர் வரப் போறாங்க.. இனி உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் கேய்ஸ்" என சொல்லியவரை கவலையுடன் பார்த்தனர் மூன்று பேரும்...
"சார் ப்ளீஸ் எங்களை விட்டு போகாதீங்க... " என மூன்று பேரும் கோரசாய் சொல்ல, அவர்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்று விட்டார் அவர்...
"அடியே சுமிரவன் எவ்ளோ பெரிய நாவலிஸ்ட் தெரியுமா.. அவங்க புக்கை படிக்க கொடுத்து வெச்சு இருக்கணும்.. அவங்க ஒவ்வொரு கதையும் அவ்வளவு அருமையா இருக்கும் கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என உதய் சொல்ல " சாரி அதைப் பத்தி நீங்க கழுதை கிட்டே தான் கேட்கணும் வாசனை தெரிஞ்சுதா இல்லயானு... நான் ஒரு மானிடப் பிறப்பு அதனாலே எனக்கு அதைப் பத்தி தெரியாது தெரியவும் வேணாம்... ஆனால் நீங்க ரெண்டு பேரும் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு... அது என்னன்னா நம்ம மூனு பேரும் உட்கார்ந்து ஜாலியா அரட்டை அடிச்சுட்டு சாப்பிடுற இந்த டைம்ல யாருக்கும் பர்மிஷன் இல்லை.. அந்த சுமிரவனுக்கும் தான்.. காட் இட்" என உத்தரவிட்டு சொல்ல " தங்கள் உத்தரவு மகாராணி அப்படியே ஆகட்டும்..." என்று பணிவாய் சொல்லி சிரித்தபடி அவர்களின் அரட்டையை தொடர்ந்தனர்...
💐💐💐💐💐💐
ராம், உதய், சுமி மூன்று பேரும் இந்த அலுவலகத்தில் சேர்ந்த நாளில் இருந்து இன்று வரை இணைப்பிரியா தோழமைகளாய் உருவெடுத்தவர்கள்..
உதய் எப்பொழுதும் பேசிக் கொண்டே இருப்பான்.. அவன் ஆபிஸ்க்கு வேலை செய்ய வருகிறானோ இல்லையோ சுமியை வம்பு இழுப்பதற்காகவே ஆபிஸ்க்கு வருவான்.. தங்கை இல்லாத அவனின் குறையை தீர்த்தி வைப்பதறக்காகவே சுமி வந்தாள்.... அவளை வெறுப்பேற்றி கடுப்பேற்றி அவள் மீது இருக்கும் அன்பை உணர்த்துவான்.. சில சமயம் அந்த அன்பு பேரன்பாக மாறி இருவரும் குடுமியைப் பிடித்து சண்டை இடுவதாக உருவெடுக்கும் போது ஆபத் பாண்டவனாக மாறி இருவரது தலையும் உடையாமல் ராம் காப்பாற்றுவான்..
ராம் இயல்பிலேயே கொஞ்சம் அமைதி.. ஆனால் இவர்களுடன் சேர்ந்தால் மட்டும் அவனுடைய அமைதியையே கொஞ்சம் அமைதியாக்கி பேச ஆரம்பித்து விடுவான்.. இருவரது குழந்தைத் தனமான சண்டையையும் பொறுப்பாக பேசி தீர்த்து வைப்பான்... சில சமயம் பேசாமல் ஒதுங்கிவிடுவான்.. பேசினால் அவன் மண்டையும் சேர்ந்தே உடையும் என்ற முன்னெச்சரிக்கையோடு....
இவர்கள் மூவரும் நண்பர்களாக சேர்ந்தது சுமியினால் தான்.. இந்த அலுவலகத்திற்கு அவர்கள் நேர்முக தேர்வுக்கு வரும் பொழுது மூவரும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்...
அப்போது நேர்முகத் தேர்வு முடித்து வெளியே வந்த பையனிடம் என்ன கேள்வி கேட்டார்கள் என சூழ்ந்து இருந்தவர்கள் கேட்க அவன் "போன் வேலை செய்யலனு எந்த டைம் கண்டுபிடிப்பீங்கனு கேட்டார்" என்று சொன்னான்...
போன் வேலை செய்யாத டைம் அப்போ கண்டுபிடிப்பேன் இதை வேற கேள்வினு கேக்குறான் லூசுப் பையன் என சலித்த படி சுமி சொல்ல பக்கத்தில் அமர்ந்து இருந்த உதய் நக்கலாக சிரித்தான் ஆனால் ராமோ அவளை ஆச்சர்யமாய் பார்த்தான்..
அடடா மைன்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசி தொலைச்சுட்டோமே என சுமி உதட்டைக் கடித்து கொண்டாள்.. செம காமெடி என உதய் சிரித்துக் கொண்டே சொல்ல, "இல்ல பா அவள் கரெக்டா தான் சொன்னா போன் வேலை செய்யலனு எப்படி கண்டுபிடிப்பீங்கனு கேட்டா டெக்னிகல் டெர்ம் ல பதில் சொல்லலாம்.. ஆனால் எந்த டைம்னு கேட்டா இவங்க சொன்ன பதிலை தான் சொல்லனும்.. இது நம்மளோட கேட்குற திறமையை டெஸ்ட் பண்ற கேள்வி இப்போ வெளியே வந்துட்டு இருக்காலே அந்த பொண்ணு கிட்டே கூட இதே கேள்வியை தான் கேட்டு இருப்பாங்க" என ராம் சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவளும் அதே கேள்வியை தான் கேட்டாங்க என மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தாள்..
இருவரும் ஆச்சர்யமாய் ராமைப் பார்க்க அவன் "இதே கேள்வியை தான் நம்ம கிட்டேயும் கேப்பாங்க.. சோ இவங்க சொன்ன பதிலையே நம்ம மூனு பேரும் சொன்னா.. வேலை கன்ஃபார்ம்" என சொன்னவனின் வாக்கு அப்படியே பலித்தது.. அன்று வந்தவர்களிலேயே இவர்கள் மூன்று பேர் மட்டுமே தேர்வு பெற்றார்கள்... அப்போது ஆரம்பித்த இவர்களின் நட்பின் அத்தியாயம் இன்னும் முடியாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.....
சந்தோஷத்தை தேடி
நான் செல்லவில்லை
அதுவாகவே தேடி வந்தது
நட்பு என்னும் வடிவில்...
No comments:
Post a Comment