பாலு தாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் -11
வாடா சங்கு வா எங்கே இந்த சந்தியா காலத்துல வாக்கிங்கா? நானும் வரேன் சித்த பொறு என சொல்லிய வாரே உள்ளே சென்று சட்டை அணிந்து கொண்டு வந்தார் பாலுதாத்தா வாங்க அண்ணா மன்னி வரலையா ? என கேட்டபடி வந்தார் மாலுபாட்டி அவளுக்கு கால்வலிமா அதன் வரலை நாளைக்கு காலேல டிபனுக்கு இட்லி மாவு வாங்கிண்டு வர சொன்னா அதான் அப்படியே கடையில போய் இட்லி மாவு வாங்கிண்டு வரலாம் நு பொறப்பட்டேன் வழில இவனையும் பாத்துட்டு போலாம் நு வந்தேன் என சொன்னார் சங்கு தாத்தா
அண்ணா கடை மாவெல்லாம் வேண்டாம் இங்க நானே ஆத்துல அரைச்ச இட்லி மாவு மிக்ஸ் இருக்கு அத தரேன் ஆத்துக்கு எடுத்துண்டு போங்க என சொன்னார் மாலு பாட்டி என்னது இட்லி மாவு மிக்ஸா புதுசா இருக்கே என வியந்த சங்கு தாத்தா பாலு நீ குடுத்து வெச்சவன் டா உனக்கு மாலு மாதிரி பொண்டாட்டி கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கனும் நீ என சொல்ல
சந்தோசத்தில் சின்ன பெண் மாதிரி குதித்து கொண்டு உள்ளே ஓடினார் மாலு பாட்டி வேறஎதுக்கு சங்கு தாத்தாவுக்கு இட்லி மிக்ஸ் எடுத்துகிட்டு வரத்துக்குதான்
மால்ஸ் பாத்து போடி தாண்டி குதிக்காதே கை கால் உடைஞ்சா நான் தான் அவஸ்த்தை படணும் உன்னோட என பாலு தாத்தா குரல் கொடுக்க வழக்கம் போல கரண்டி பறந்து வந்தது பாலு தாத்தாவை நோக்கி சற்றே நகர்ந்து கரண்டி அடியில் இருந்து தப்பித்த பாலு தாத்தா ஏண்டா சங்கு எதுக்கு உனக்கு இந்த கொலைவெறி இந்த கிழவி கொடுத்த மிக்ஸ எடுத்துட்டு போய் சமைச்சு போட்டு எதாவது ஆச்சு ? அப்புறம் என்ன சொல்லாதே ஏதோ பழகின பாவத்துக்காக சொல்றேன் தயவு செஞ்சு எஸ்கேப் ஆயிடு என சொல்ல அதை கேட்ட வண்ணம் அங்கே வந்த மாலு பாட்டி கோபத்தில் திட்டிய வார்த்தைகளை கேட்டு காதில் ரத்தம் வந்தது பாலு தாத்தாவுக்கு (எவ்வளவு பட்டாலும் பாலு தாத்தா திருந்த மாட்டாரோ)பதிலுக்கு பேச வாய திறக்கலாம் நு நினைச்சார் அப்புறம் மாலு பாட்டி கோவிச்சுகிட்டு பொறந்த வீட்டுக்கு பொட்டிய கட்டிட்டா சோத்துக்கு என்ன பண்ணறது ஸோ எப்பவும் போல எல்லாம் கேட்டுட்டு அமைதியா இருந்துட்டார் இதுக்கு நடுவுல இவங்க சண்டை போட ஆரம்பிச்சதுமே சங்குதாத்தா இட்லி மிக்ஸோட வீட்டுக்கு எஸ்கேப்
சரி வாங்க இட்லி மிக்ஸ் ரெசிபிய கமெண்ட் பாக்ஸ்ல பாப்போம்
இட்லி அரிசி -மூன்றரை ஆழாக்கு
அவல் -ஒன்றரை ஆழாக்கு
முழு வெள்ளை உளுந்து -ஒரு ஆழாக்கு
வெந்தியம் -ஒரு ஸ்பூன்
எல்லாத்தையும் களைஞ்சு நல்ல நிழல்ல காய போட்டுட்டுங்க நல்லா காஞ்ச பிறகு மில்லுல கொடுத்து மைய அரைச்சுக்கங்க இப்போ மிக்ஸ் ரெடி .
காலேல இட்லி செய்யண்ணுமின்னா முதநாள்ராத்திரி தேவையான அளவில் மிக்ஸ் எடுத்துகிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சம்மா தண்ணி சேத்து இட்லி மாவு பதம் வர வரைக்கும் கட்டி இல்லாம கரைச்சு மூடிவெச்சுக்கங்க (மிக்ஸில எல்லாத்தையும் போட்டு வைப்பர் மோடுல ஓடவிட்டா ரொம்ப சுலபம் ) மாவு காலேல பாத்தா பொங்கி இருக்கும் அவ்ளோதான் தேவைக்கு இட்லி வார்த்து என் ஜாய் பண்ணலாம்.
No comments:
Post a Comment