This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Wednesday, 13 March 2019

பாலுதாத்தா மாலு பாட்டியின் ஆரோக்கியம் காப்போம் -12


Click here to get all parts



மால்ஸ் மால்ஸ் நம்ம வத்சு வந்திருக்கா பாரு என வாசலிலிருந்தபடியே குரல் கொடுத்தார் பாலு தாத்தா .


ஹாய் மில்க் தாத்தா என வம்பிழுத்தபடி சௌமியாவும் வர போச்சுடா ரெண்டு வாலும் இன்னைக்கு ஒண்ணா வந்திருக்கு என்ன நடக்க போகுதோ தெரியலையே என பாலுதாத்தா மைண்ட் வாய்ஸில் பேச  ..


பாலு தாத்தா நீங்க மட்டும் மைண்ட் வாய்ஸில் எங்க ரெண்டு பேரையும்  திட்டினது மால்ஸ் பாட்டிக்கு தெரிஞ்சது அப்புறம் ஒரே இடிமழை மின்னல் தான் பாத்துக்கங்க என வத்சு மிரட்ட  பாலுதாத்தாவின் கண்களில் பீதி தெரிந்தது 


அதெல்லாம் ஒண்ணுமில்ல தாத்தா சாரே இந்த சில்லு வண்டுங்க மிரட்டுரத்துக்கெல்லாம் பயப்படலாமா ? அதுங்க கிடக்குது நீங்க இந்த குடம்புளி சர்பத்தை குடிங்க என சொன்ன படி கையில் குடம்புளி சர்பத் பாத்திரமும் டம்பளருமாய் காட்சி தந்த மாலு பாட்டி பாலு தாத்தாவின் கண்களுக்கு தேவதையாய் தெரிந்தார் 


மாலு பாட்டியின் இந்த அந்தர் பல்ட்டியால் சௌமியாவும்,வத்சுவும் மயங்கி விழாத குறைதான் போங்க(பின்னே டெய்லி பாலு தாத்தா மால்ஸ் பாட்டியும் சண்டை போட்டா போரடிக்காதா சும்மா ஒரு மாற்றத்துக்குகாக இன்னைக்கு மால்ஸ் பாட்டி பாலு தாத்தாக்கு ஐஸ் வெக்கிறாங்க)


என்னங்கடியம்மா முழிக்கறேள் என மாலு பாட்டி வினவ சரி விடு மால்ஸ் குழந்தைகள் தானே என சிபாரிசுக்கு வந்த பாலுதாத்தா  அவாளுக்கும் குடம்புளி சர்பத்த குடுமா என சொன்னார் 


மாலு பாட்டி குடுத்த குடம்புளி சர்பத்தை வாங்கி குடித்த வத்சுவும் சௌமியாவும் சூப்பர் பாட்டி எங்களுக்கும் சொல்லி குடுங்களேன் நு கேக்க அதுக்கென்னடியம்மா செய்முறை சொல்லறேன் எழுதிக்கோங்கோ என சொன்னார்


செய்முறைய அம்ட்டும் சொன்னா பத்தாது மால்ஸ் அதோட பயன்களையும் சொல்லிடுமா என்றார் பாலுதாத்தா சரி வாங்க குடம்புளி சர்பத் செய்முறையையும் அதோட பயன்களையும்  பாப்போம்


குடம்புளி சர்பத் செய்முறை


 குடம்புளியை ஒரு கைப்பிடியளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, இதைப் பிசைந்து கரைசல் எடுக்க வேண்டும்


ஒரு டம்ளர் கரைசலுக்கு முக்கால் டம்ளர் வெல்லம் வீதம் பொடி பண்ணி போட்டு அடுப்புல சிம்முல போட்டு வெச்சிடுங்க 


இன்னொரு பக்கம் ஜீரகத்தை வறுத்து (வாசனைக்கு) பொடி பண்ணி அடுப்புல வெச்சிருக்கற சர்பத் கரைசல்ல கலந்திடுங்க நல்லா கொதிக்க விட்டு பாகு சர்பத் பதம் வந்ததும்  இறக்கி உப்பை கலந்து ஆறின உடன் காஞ்ச பாட்டிலுல ஊத்தி எடுத்து வெச்சிக்கணும் தேவையான போது கொஞ்சமா தண்ணீல கலந்து குடிச்சா சும்மா அள்ளும் 


குடம்புளிபயன்கள்:

குடம்புளி சமையலில் பொதுவாகச் சுவை கூட்டவும் செரிமானத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது பழத்தோலினின்று தயாரிக்கப்படும் ஒருவித சாறு வாதம் மற்றும் வயிறு உபாதைகளுக்கு மருந்தாகும் ஹோமியோபதி மருத்துவத்தில் குடம்புளியினின்று தயாரிக்கப்படும் மருந்து வயிற்றுப்போக்கினைச் சரிப்படுத்தும் மருந்தாகும். மரத்தின் பட்டைகளினின்று பெறப்படும் மஞ்சள்நிற கோந்தானது மருத்துவத்தில் பயன்படுகின்றது.


 உடல் தசைகளை வலுவாக்குவதோடு சர்க்கரை வியாதியை நிவர்த்தி செய்யும் தன்மையையும் குடம்புளி கொண்டுள்ளது. இதில் அடங்கியுள்ள ஹைட்டிராக்சி சிட்ரிக் அமிலம் இதயம் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும் தன்மை படைத்தது. இரத்தத்திலுள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் குடம்புளி உகந்தது. கால்நடைகளின் வாய் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் குடம்புளி மருந்தாகும். உலர்ந்த பழத்தின் சதைப்பகுதியானது தங்கம் மற்றும் வெள்ளியைத் துலக்குவதற்கு பயன்படுகிறது. 


மேலும் ரப்பர் பாலை கெட்டியாக்குவதற்கும் குடம்புளி பயன்படுகிறது. கொடம்புளி உண்டு வந்தால் மாதவிடாய்க் கோளாறுகள், தீராத தலைவலி முதலியவையும் குணமாகும். கேரள மாநிலத்தில் இதை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள் இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இந்த மாற்றம் தடுக்கப்படுவதால் கார்போஹைட்ரேட் ஆக்ஸிடையாகி கிளைகோஜெனாக உடலில் சேமிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் விளைவால் பசி குறைந்து இயல்பாகவே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். 


மேலும் இந்த ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை சுரப்பை அதிகரித்து பசியை குறைக்கவும் செய்து விடுகிறது. செரோடோனின் ஒரு இயற்கையான முறையில் பசியை குறைக்க பயன்படுகிறது. இதனால் எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம்.

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.