அம்மா அம்மா எனும் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் மாலு பாட்டி வா லஷ்மி முனியம்மா எங்கே ?உன்னை எதுக்கு இந்த உச்சிவேளையில அனுப்பிருக்கா ? கல்யாணம் நிச்சியம் பண்ண பொண்ணை இப்படி தனியா அனுப்புவாளோ என அங்கலாய்க்க பேச்சு குரல் கேட்டு நித்ரா தேவியுடன்(தூக்கம்) டூயட்ல இருந்த நம்ம பாலு தாத்தா கண் விழித்தார்
அது ஒண்ணுமில்லமா நீங்க காஞ்ச கருவேப்பிலை புதினா பச்சை மிளகாய் இதெல்லாம் கேட்டு இருந்தீங்களாம் அதை குடுத்துட்டு உங்களை பாத்துட்டு வர சொல்லிச்சு எதோ சமையல்குறிப்பு தரேன்னு சொல்லி இருந்தீங்களாம் நியாபகமா கேட்டு வாங்கிட்டு வர சொல்லிச்சு
ஆமாம் அம்மா இந்த காஞ்ச இலைய வெச்சுக்கிட்டு நீங்க என்ன செய்ய போறீங்க காய் விக்கிற நாங்களே விக்காம போச்சுனா இத தூக்கிதான் போடுவோம் என சொல்ல
சித்த இருடி நல்ல உச்சி வேளையில வந்திருக்க சில்லுனு ஒரு சொம்பு மோர் கொண்டு வரேன் குடிச்சுட்டு பேசலாம் சரியா ? தாத்தா சாரே உங்களுக்கு மோர் என மாலுபாட்டி கேட்க இது என்ன கேள்வி போ போய் சீக்கிரம் கொண்டா என விரட்டினார் பாலு தாத்தா (தாத்தாவுக்கு வாயில வாஸ்து சரி இல்ல)
முறைத்துக்கொண்டே உள்ளே சென்ற மாலுபாட்டி மோருடன் வரவும் லஷ்மியின் வருங்கால கணவனான சின்னான் தர்பூஷணி பழங்களுடன் வரவும் சரியாக இருந்தது
வாடாப்பா தலை வந்து இவளோ நேரம் ஆகியும் வாலை காணோமே நு நினைச்சேன் என பாலுதாத்தா சின்னானை நோக்கி பால் போட ஏன் தாத்தா அந்த காலத்துல நீங்க செய்யாததையா நான் செஞ்சிட்டேன் என சிக்ஸர் அடித்தான் நான் என்னத்த செஞ்சேனு நீ வந்து பாத்த என தாத்தா கெத்து காட்ட எல்லாம் உங்களை பத்தி பாட்டி கதை கதையா சொல்லிருக்கு என கீளீன் போல்டாக்கினான்
அப்போது மோருடன் வந்த மாலு பாட்டியயை ஏண்டி என்னை பத்தி எல்லார்கிட்டையும் குறை சொல்லலேனா உனக்கு பொழுதே போகாதே என தாத்தா எகிற உங்களைபத்தி ஊருக்கே தெரியுமே நான் வேற தனியா சொல்லணுமாக்கும் என அசால்டாக அயரடித்தார் மாலு பாட்டி
வாடா சின்னான் என்ன சேதி என்ற மாலு பாட்டியின் கேள்விக்கு தலையை சொறிந்து கொண்டே சின்னான் அம்மா தர்பூஷணியும் தேங்காயும் கொண்டு வந்திருக்கேன் அம்மா நாளைக்கு எனக்கு அந்த கூட்டு வெச்சு குடுங்கமா என கேட்க அதுக்கென்ன டா பண்ணிட்டா போச்சு என தலையாட்டினார் மாலு பாட்டி சரி மோரக்குடி எனவும் சொல்ல மறக்கவில்லை
மோரக்குடித்த பின் சின்னான் சென்றுவிட அம்மா இது என்னம்மா வித்தியாசமா மோருல பச்சைகலர்ல பொடிமாரி எதோ போட்டிருந்தீங்களே குடிக்க நல்லா இருந்திச்சிமா என்ன பொடிமா இது என கேட்க இது மோருல போடுற மசாலாபொடிமா இது அரைக்க தான் நான் காஞ்ச கருவேப்பிலை புதினா பச்சை மிளகாய் இதெல்லாம் கேட்டேன் என சொன்னார் மாலு பாட்டி
எனக்கும் இதை அரைக்க சொல்லிதரீங்களாம்மா என லட்சுமி கேக்க அதுக்கென்னடி இப்போ அரைக்கதான் போறேன் பக்கத்துலைருந்து பக்குவத்தை கத்துகோ-மாலு பாட்டி
அட பகவானே நான் அனுபவிக்கற கொடுமை என்னோட முடியாதா ? இன்னும் ஊருல யாரையெல்லாம் இந்த கிழவி கெடுக்க போறானு தெரியலையே இவளுக்கே இன்னும் ஒழுங்கா சமைக்க வராது இதுல இந்தம்மா டியூஷன் வேற எடுக்குது எல்லாம் கலி கொடுமை என பாலுதாத்தா கமெண்ட் அடிக்க அதுக்கப்புறம் நாலு நாளைக்கு பாட்டி தாத்தா கண்ணுக்கு தெரியவேஇல்ல ஹான் நீங்க நினைக்கற மாரி ஒண்ணும்மில்ல பாட்டி தாத்தா மூஞ்சில குத்துன குத்துல மூஞ்சி எதிருல நிக்கிறவங்க கண்ணுல தெரியாத அளவுக்கு வீங்கி போச்சு அவ்வளவு தான் சமாச்சாரம்
சரி வாங்க பாட்டியோட கைவண்ணத்தை பாப்போம்
மோர் மசாலாபொடி
கருவேப்பிலை புதினா (நல்லா காஞ்சது ) தலா 100 கிராம் அளவு
பச்சை மிளகாய் -(நல்லா காஞ்சது )- சுவைக்கு
உப்பு - சுவைக்கு
பெருங்காயம் 1 சிட்டிகை
ஓமம் , சீரகம் - தலா 1 டீஸ்பூன்
சுக்கு - சுவைக்கு
எல்லாத்தையும் மிக்ஸில போட்டு நல்லா மையா அரைச்சு வெச்சுக்க வேண்டியது இது எவளோ நாள் ஆனாலும் கெட்டு போகாது ஆனா ஈரம் படக்கூடாது
நாளைக்கு தர்பூஷணி தோல் கூட்டு வைக்க சொல்லி தர போறாங்களாம் மறக்காம நோட் பண்ணிக்கங்க ஏன் சின்னானுக்கு இது ரொம்ப பிடிக்கும் அதுனால நைசா அதை கத்துக்க நம்ம லட்சுமியும் வருவா பாருங்களேன்
No comments:
Post a Comment