எனில் உயிரில்
பாதி அவன்...
என்னை தன்னில்
சரி பாதியாக
மாற்றி கொண்டவன்
அவன்....
என்னில் பாதியான
என் உதிரம்
கொண்டு என் மகளை
ஈன்று எடுக்க காரணம்
அவன்.....
எனக்கு எல்லாம் ஆனவன்
அவன்.....
எனது உணர்வுக்களுக்கு
மதிப்பு அளிப்பவன்....
மாதத்தில் மூன்று நாட்கள்
எனக்கு தாயாக
இருப்பவன்....
எனது மடியில் எனது
முதல் குழந்தையாக
துயில்பவன்.....
என்னை அவன் முதல்
குழந்தையாக எண்ணி
காப்பவன்...
எனது கள்வன்...
எனது காதலன்...
எனது கணவன்....
எனது யாவும் ஆனவன்.......
No comments:
Post a Comment