This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 28 March 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 17


Click here to get all parts


சாரல் அப்படி ஒரு அழுகை முத்தம் கொடூரம்மான செயல் என விஜய் நினைக்கும் அளவு அப்படி முகத்தை மூடி குமுறி குமுறி அழுதாள் சாரல்.அவனும் என்ன செய்வான் அவனுள் இருந்த அவளின் தாக்கம் அவளது அலட்சியத்தாள் முத்தம்மாக வெளி வந்துட்டது...



அவள் அழுகை ஏதோ செய்ய "அவளை சாரல் என அவள் தோள் தொடப்போக அவன் கையை பட்டென்ன தட்டி விட்டாள்"என்னை தொடாதிங்க நானே உங்களிடம் வழிய வந்தாள் என்னை என்ன வேணாலும் செய்யலாம்னு நினைச்சிட்டிங்க அப்படி தானே என ஆழுக....


அப்படியெல்லாம் இல்லை சாரல் என தன்னிலை விளக்கம் கொடுக்க முயல"போதும் யாரும் உங்ககிட்ட விளக்கம் குடுங்கன்னு கேட்கலை இப்போ என்னை வீட்டுல்ல விட்றிங்களா இல்லை நான் ஆட்டோவில் போட்டும்மா என கேட்க்க மெளனமாய் விஜய் காரை கிளப்பினான்....




வீட்டை நெருங்கும் போது தான் அழுகையை சிரம்ம பட்டு அடக்கினாள்.வீடு வர இறங்கி கொண்டாள்.அவனும் இறங்கதான் நினைத்தான் ஆனால் இறங்க வில்லை.அதை இன்னும் தொந்தரவ்வாய் நினைப்பாள் என நினைத்தவன் அவளை"சாரல் என அழைத்தான்.....



அவள் நின்றாள் ஆனால் அவனைப்பார்க்கவில்லை.சாரி என்றான்...



அவளோ உள்ளுக்குள் பொறுமினாள்."சாரி யாருக்கு வேணும் இவன் சாரி செய்யிரதல்லாம் செஞ்சிட்டு சாரி சொல்றான் என நினைக்கும் பொழுது பின்ன இருந்து விஜய்யின் குரல் ஒலித்தது...



"ஆனாலும் செம ஸ்விட் என்றவனை திரும்பி கொல வெறியோடு முறைக்க அவனோ புன்னகை மன்னனாய் அவளை பார்த்துருக்க"அவனோ இன்னும் வெறியேற்றினான்."இன்னொரு முறை ப்ளிஸ்...என்னோட ஷர்ட் பட்டன் முழுதும் அந்தாலும் பராவாயில்லை என அவளைப்பார்த்து கண்ணடிக்க"இப்போ அவனை கொலையே செய்யும் வெறி அவனை கண்களாலையே எறித்தாள்...



அதைப்பார்த்தவன்"ஐயோ இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாலும் என்னை கண்ணாலையே எரிச்சுடுவா என நினைத்தவன் எஸ்கேப் என்று சொல்லி விட்டு காரை எடுத்துக்கொண்டு ஓடி விட்டான்.....



என்னக்கா மாமாவோட ரொமாண்ஸ் முடிஞ்சதா வரட்டா என கேட்டபடி வந்தாள் சர்மி.....



அமா அது ஒன்னு தான் குறச்சல் என மனதுக்குள் குமைந்தாள் சாரல்....



அப்பொழுது தான் அவளது உதட்டைப்பார்த்தாள் சர்மி விஜய்யின் முரட்டு முத்தத்தில் ரத்தம் கசியாத குறையாய் சிவந்து இருந்தது.."என்னக்கா உதடல்லாம் சிவந்து கிடக்கு ஏ.....



"என்னது"என அதிர்ந்தவள் தனது கையால் ஒரு முறை அழுத்தித்துடைத்துக்கொண்டாள். என்ன சொல்வது என தடுமாற வாயில் வந்ததை சொன்னாள்."அது சர்மி எனக்கு....என..க்கு..பஞ்சு மிட்டாய் ரொம்ப பிடிக்கும்ல அதான் அது சாப்பிட்டேன் அதான் உதடு சிவந்து போச்சு என ஒரு வாறு சமாளிக்க சர்மி அவளை விடவில்லை.....



பஞ்சு மிட்டாயா எனக்கும் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஏன்க்கா வாங்கறல்ல என கேடக்க"இவளுக்குமா என எண்ணிய சாரலின் நிலை தான் பரிதாபம்மாக இருந்தது.....



மறு நாள் காலையில் சர்மி சாரலிடம்"அக்கா எனக்கு இன்னைக்கு சீக்கிரம் கம்யூட்டர் கிளாஸ் முடிஞ்சுறும் நீ எனக்காக பஸ்டாண்டில் வெயிட் பண்ணு நம்ம சேர்ந்தே வீட்டுக்கு வந்துடலாம்...



ஆனா எனக்கு முடியும்மான்னு தெரியலை.நைட் டுயூட்டி பார்க்க தாமரை அக்கா வந்தா தான் நான் கிளம்பி வர முடியும்.அப்படி நான் வரமுடியலைன்னா நீ கிளம்பிடு சரியா....



சரி நான் உன் நம்பருக்கு கால் பண்றேன்.அந்த டப்பா செல் ஒர்க் ஆகுதான்னு பார்க்குறேன் என ஓடி விட்டாள் சர்மி.காலையில் சமையலில் இருந்தாள் சாரல்.அப்பொழுது தான் அரவிந்த் அங்கு வந்தான்...



அக்கா கிளம்பட்டும்மா டிபன் பாக்ஸ தா.....



ம்ம்..நீயும் வா ரெண்டு இட்லி சாப்பிடு....



காலேஜ் பஸ் வந்துடும்க்கா.....



வராதுடா இன்னும் நேரம் இருக்குடா நீ வந்து ரெண்டு இட்லியை சாப்பிடு என்றவள் அவனுக்கு தட்டில் இட்லியை வைத்து கொடுக்க அவசர அவசரமாய் சாப்பிட்டு கொண்டுருந்தவனின் உடையை அப்பொழுது தான் கவனித்தாள்.....



போட்டதையே போட்றானோ என நினைத்தவள் அவனுக்கு முதலில் நல்ல உடைகளா நாளு எடுக்கனும் என நினனத்துக்கொண்டாள்.....



மாலை சீக்கரம்மாவே நைட் டூயூட்டி பார்க்கும் தாமரை அக்கா வந்து விட சாரல் அன்று சீக்கிரம்மே கிளம்பினாள்.சாரலுக்கு தாமரை என்றாள் தனி ப்ரியம்.அன்பாக பேசுவாள்.அவருக்கு கல்யாணம் ஆனாலும் தன் வயதை ஒத்த தோழி போலவ்வே பழகுவார்.அன்பான அக்கறை,அறிவுரை என தாமரையிடம் வரும் சாரலுக்கு அதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொள்வாள்....



என்னக்கா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட....



உன் மாமா சீக்கிரம் வந்துட்டார்.அதான் ஓடி வந்துட்டேன்.உன்னைய வேற சீக்கிரம் அனுப்பி வக்கலாம்னு தான் வந்தான்.அப்பொழுது தான் அவளின் கழுத்தில் இருந்த செயினை பார்த்தாள் தாமரை....




என்னது இது சாரல் இவ்ளோ பெரிய செயின் நான் பார்க்கவ்வே இல்லை சூப்பரா வேற இருக்கு.எப்ப எடுத்த சொல்லவ்வே இல்லை....



அது வந்துக்கா நான் எடுக்கலை போட்டுவிட்டாங்க என்றாள்.....



யாரு.....



அது வந்து சொல்லலாம்மா என நினைக்க பிறகு"கல்யாணம் நிச்சியம் ஆயிருக்கு என்றதும் வியந்து போனாள் தாமரை....



என்னடி சொல்ற யாரு,எப்ப எதுவும் சொல்லலை நீ என வருத்தம்மாய் கேட்க்க...



சொல்லக்கூடாதுன்னு நினைக்கலைக்கா திடிர்ன்னு நடந்துருச்சு,அப்பறம் உங்களிடமும் பேச நேரம் கிடைக்கலையே அதான் சொல்லலை.....



சரி யாரு இந்த ஸ்விட்டான சாரலை கல்யாணம் பன்னப்போற அந்த பய்யனை யார்ன்னு தெரிஞ்சுக்கலாம்மா என கேட்க்க.....




அவனைப்பத்தி சொண்ணதும் அக்காவோட ரியாக்சன் எப்படி இருக்கும் என எண்ணியவள்"விஜய்..க்கா" என்றாள்....



ஆக்டர் விஜய்யா என தாமரை கேலி பேச "அக்கா என சிணுக்கினாள் சாரல்....



அப்பறம் யார்ன்னு சொல்லு இப்பொதைக்கு நம்ம ஊர்ல்ல விஜய்ன்னா இப்போதைக்கு ஹீரோ ரேஞ்சுல்ல இருக்குற விஜய் கணேஷ் அவரா என அப்போதும் கேலியாகவே தாமரைக்கேட்க்க சாரல் தலையை ஆட்டினாள்......



அதைப்பார்த்த தாமரை அதையும் விளையாடதே சாரல் யார்ன்னு சொல்லு...




நான் விளையாடலக்கா நிஜம்மாவ்வே அவர்தான் பாருங்க என்றவள் அன்று விஜய் வீட்டினர் தங்கள் வீட்டிற்க்கு வந்த போது சர்மி விஜய் ,அரவிந்த் சாரல் என எல்லாரையும் சேர்த்து வைத்து ஒரு செல்பி எடுத்தாள் அதை தான் தாமரையிடம் காமித்தாள்....



இப்பொழுது தாமரைக்கு மயக்கம்மே வர மாதிரி இருந்தது ஒரு நொடி....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.