டேய் இது பக்கா வில்லத்தனம்" அலறினான் சதிஷ்.....
"இருந்துட்டு போட்டும் அவள் எனக்கு கிடைக்க எதை வேணாலும் பண்ணுவேன்" அழுத்தம்மாய் சொண்ணான்....விஜய்......
ஏண்டா இப்படி பண்ற"விஜய்ன்னு ஹீரோ பேரை வச்சிட்டு வில்லன் வேளை பார்க்கிற"பூவே உனக்காக படம் பார்த்திருக்கியா தன்னை விரும்பலையின்னு தெரிஞ்சதும் விஜய் எவ்வளவு உன்னதமான மனசோட ஹீரோயினை விட்டு தரார்....
ஏன்னா ஹீரோயின் வேற பய்யனை விரும்புறாங்க அதனால்ல விட்டுக்குடுப்பார் ஆனா இங்க தான் சாரல் யாரையும் விரும்பலையே அப்பறம் எதுக்கு நான் அவளை விட்டு தரனும் அவ எனக்கே எனக்குன்னு பொறந்தவ அப்பறம் எதுக்கு அவளை விட்டு தரனும்"அவளை விடவும் மாட்டேன் யாருக்கும் விட்டுக்கொடுக்கவும் மாட்டேன்".என விஜய் தீவிரம்மாய் சொண்ணான்.....
"பார் விஜய் சமித்தோட ஃபேரண்ஷிற்க்கு இதுல்ல விருப்பம் இல்லையின்னாலும் அவங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.அதனால் அவங்க எப்படி ப்ரச்சனை வந்தாலும் சந்தோஷம்மா இருப்பாங்க...."ஆனால் சாரல் உன்னை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கலையின்னு சொல்றப்பொண்ணு.இப்போ நீ இப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பன்னா அந்த வெறுப்பு அதிகமாகும் அது உன் கல்யாண வாழ்க்கையை நரகமாக்கி விடும் விஜய்.உன் மேல் இருக்குற அக்கறையிலதான் சொல்றேன்.விஜய் சாரலின் நெருப்பில் பொசுங்கி விடுவானோ என்று பயந்தான் சதிஷ்....
அவன் சதிஷ் பேச்சை கேட்டாதாகவே தெரியவில்லை.பிறகு அவனிடம் "என் மேல் உனக்கு உண்மையிலையே அக்கறை இருந்தா இப்பவ்வே போய் ஒரு நல்ல கல்யாணம் மண்டபமாய் பார்த்து புக் பண்ணு என்றதும் சதிஷ்ற்க்கு"எல்லா விசயத்திலும் தன் நண்பனின் அசாதாரண புத்திக்கூர்மையை கண்டு வியர்ந்துருக்கிறான்.ஆனால் இந்த விஷயத்தில் இவனது பிடிவாதம் பண்ணும் சிறு பாலகனாய் இருக்கிறானே என நொந்து போனான் சதிஷ்....
உன் உண்மையிலையே சாரலை விரும்புறதா இருந்தா சமித்திற்க்கும் சர்மிக்கும் கல்யாணம் பண்ணி வை அது செய்ய கூடியவன் நீ மட்டும் தான்.அதன் பிறகு அவளுக்கு உன் மேல் ஈர்ப்பு வர வாய்ப்பிற்க்கு அதன் பிறகு எல்லாரும் பேசி இந்த நடத்தி வக்கிறது எங்க பொருப்புடா.....
சதிஷ்"சாரல் பிடிவாதக்காரி யார் பேசினாலும் என்னுடனான கல்யாணத்தை அவள் ஒத்துக்கவ்வே மாட்டா எனக்கு அவளை கல்யாணம் செய்து கொள்ளுவதற்க்கான கடைசி வாய்ப்பு இது அதை மிஸ் பண்ண விரும்பலை அழுத்தமாய் தனது முடிவை சொண்ணான் விஜய்........
கடவுளே என்ன சொண்ணாலும் கேட்க்க மாட்டிங்குறானே நீதான் அவன் கல்யாண வாழ்க்கை சந்தோஷம்மா ஆக்கனும் என்று மேலே பார்த்து இரு கைகளையும் கூப்பி ஒரு கும்பிடு போட்டான்.....
"என்னடா எனக்காக வேண்டிக்கிறியா இல்லை சாரல் என்னிடம் இருந்து தப்பிக்கனும் என வேண்டிக்கிறியா" புருவத்தை உயர்த்தி விஜய் சதிஷிடம் கேட்க்க......
சதிஷ் முகத்தை திருப்பிக்கொண்டான்...
பின் அருகில் வந்தவன் அவன் தோளை சுற்றி கையைப்போட்டு"நீ என்ன வேண்டிருப்பேன்னு எனக்கு தெரியும் என்றவன் அவன் தோளை இருக்கி"நண்பேன்டா"என்றான்.......
"நீ லூசுடா "என்றான் சதிஷ்.அதற்க்கு கலகலவென சிரித்தான் விஜய்......
ஆமா லூசு தான் சாரல் மேல.நீ சொண்ணது சரிதான் நான் இப்படி கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணா என் மேல கண்டிப்பா வெறுப்பு வரும் ஆனா விலகி போக மாட்டா."என்னா கொஞ்ச நாள் ஆகும் இதல்லாம் எனக்காக தான் பண்ணினார்ன்னு புருஞ்சுப்பா கண்டிப்பா புருஞ்சுப்பா என்றான் ஆழ்ந்தக்குரலில்....
அப்பறம் இந்த விஷயம் உன் அங்கிளுக்கும் ஆண்டிக்கும் தெரியக்கூடாது.நீ கல்யாணத்தை மட்டும் தான் பேசனும் என்றான் கட்டளையாக.....
சதிஷ் அவனை எண்ணி பெரும் மூச்சை மட்டும் விட முடிந்தது......
சரி நீ சாப்பிட்றதா இருந்தா சாப்பிடு இல்லையின்னா எனக்காக வெயிட் பண்ணு சேர்ந்து சாப்பிடலாம் என்றதற்க்கு....
எனக்கு பசியில்லை....
ஆனா எனக்கு பசிக்கிதே நீ சாப்பிடல நானும் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பண்ண வேறு வழி இன்றி சரி என்றான் சதிஷ்.....
நான் சொல்றதை கேட்க்க மாட்டிங்குறான் என்று முகத்தை உற்றென்ன வைத்துக்கொண்டு விஜயின் அறையை விட்டு வெளியேறினான் சதிஷ்....
அதைப்பார்த்த விஜய்"ரோசக்கார நண்பா உனக்கு பாசம் அதிகம்டா"என்றபடி குளியலறையில் நுளைந்தான் விஜய்.......
விஜய் வர கணேஷ்,சதிஷ் என அனைவரும் அமர மிதுலா பறிமாறினார்.மிதுலாவ்வோ"அப்படி ரெண்டு பேரும் என்னத்த தாண்டா பேசினிங்க சாப்பிட்ற நேரம்மா இது. எவ்வளவு நேரம்டா உங்களது அப்பா காத்துட்டுபார்.இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வரலையின்னா நானே மேலே வந்து ரெண்டு பேரையும் காதை திருகி வக்கனும்னு நினைச்சேன் என்று செல்லம்மாய் கடிந்து கொண்டார் மிதுலா...
அதற்க்கு இருவரும் சிரிக்க "விஜய் சதிஷைப்பார்த்து "ம்ம் சொல்லு என்பதைப்போல் கண்ணாலையே சைகை செய்ய சதிஷ் மிதுலாவிடம்......
உங்களுக்கு மருமகளை கொண்டு வர போறான் அம்மா அதைப்பத்தி தான் பேசிட்டுறுந்தோம் என்றதும் அவனை ஒரு சேரப் புன்னகையுடன் ஏறிட்
டனர் இருவரும்...
நிஜம்மாவா விஜய் என கேட்டார் மிதுலா....
ஆமாம்மா .....
எப்பன்னு சொல்லு உடனே கல்யாணத்தை முடிஞ்சிடலாம் என்றார் கணேஷ்...
சொல்றேன்ப்பா அப்ப போய் அவங்க வீட்டுல்ல போய் பேசுங்க ஆனா நம்மள மாதிரி இல்லை மிடில் கிளாஸ் ஃபேமிலி தான்....
"அதுல்ல என்ன இருக்கு விஜய் என்னோடது எல்லாம் என் மருமகளுக்கு தான் இல்ல என் மகன் நால தான் அவளுக்கு எதுவும் செய்ய முடியாத என்ன இதை விட பெரிய விஷயம் என்ன தெரியும்மா அவள் வாழ்க்கை பூறாவும் என் பய்யனை சந்தோஷம்மா வச்சிக்கிட்டாளே போதும் அது தான் அவ கொண்டு வரப் போற பெரிய சீதனம் என்றார் மிதுலா."அதை ஆமோதிப்பதாய் தலையசைத்தார் கணேஷ்"...
அது மட்டும் நடக்கவே போறது இல்லை என நினைத்த சதிஷ்.மிதுலாவைப்பார்த்து மேம்போக்காய் சிரித்து வைத்தான்......
எப்பன்னு சொல்லு விஜய் நானும் உன் அம்மாவும் போய் பேசிட்டு கல்யாணத்திற்க்கு நாளை குருஞ்சுட்டு வந்துட்றோம்...
பிறகு அனைவரும் சாப்பிட்டு முடிக்க ஹாலிலையே அமர்ந்து பேசினர்.மிதுலா சின்ன வேளை என வெளியே சென்று விட்டார்
அப்போ நான் கல்யாணம் பண்ணுற அளவு தேர்ந்த பிசினஸ் மேனா ஆயிட்டேன்னு ஒத்துக்கிறிங்களா அப்பா.....
பின்னே அந்த வீ ஆரையே ஆட்டி படைக்கிறியே அப்போ நான் ஒத்துக்கிட்டேதான் ஆகனும்.எதற்க்கு விஜய் அவனோட வம்பு வளத்துக்கிட்டு.நமக்கே இன்னும் முடிக்க வேண்டிய பில்டிங்ஸ் இருக்கு ஏகப்பட்ட டீல்ஸ் கையில இருக்கு அதல்லாம் முடிக்க வேண்டாம்மா. கொஞ்ச நாளைக்கு அவனுக்கு கிடைக்கிறதை வச்சுக்கட்டும் விட்டுடு விஜய்....
விஜய்யின் முகம் இறுகியது."அந்த வீ.ஆர் கட்டும் கட்டடம் ஒன்னுக்கும் எத்தனை உயிர் போயிட்ருக்குன்னு தெரியும்மா உங்களுக்கு" பிறகு நிதானம்மாய் அவரிடம் யார் சொண்ணது இதல்லாம் என கேட்டான்....
துரை தான் சொண்ணான் அவனை பார்த்துருப்பான் போல"உங்க ப்ரண்ட்டோட பய்யன் எங்க வழியில குறுக்க வரான்.அவனிடம் சொல்லி வைங்க இல்லையின்னா இந்த வீ ஆரோட சுயரூபத்தை அவனுக்கு காட்ட வேண்டி வரும்ன்னு சொல்லுருக்கான்.அவன் சாக்கடை விஜய் அது மேல் ஏன் கல்லெறியனும் என கணேஷ் சொல்ல......
"அப்பா நான் இது வரைக்கும் அவர் பேரை என்னதுன்னு யோசுச்சதே இல்லை"அமைதியாய் கேட்டான் விஜய் அவர் பெயர் என்னப்பா"....
மறுபடியும் பேரா உள்ளுக்குள் மிரண்டான் சதிஷ்....
வீர ராகவன்......
"ஓ"என்ற விஜய் அமைதியாய் இருந்தான்.....
அவனது அழ்ந்த அமைதிக்கு பின்னால் இருந்த அர்த்தம் கணேஷ்ற்க்கு தெரியாமல் இருக்கலாம் ஆனா சதிஷ்ற்க்கு தெரியும்மே...
"விஜய் உன் அமைதிக்கு பின்னாடி மத்தவங்களுக்கான ஆபத்தைத்தான் பார்க்கிறேன்"மனதில் நினைத்துக்கொண்டான் சதிஷ்........
No comments:
Post a Comment