உதய், "ஹே நான் கொஞ்சம் பிஸி மேன்.. கம்மிட்லாம் ஆகிட்டேன்... அதனாலே என்னை டிஸ்டர்ப் செய்யாத.. உனக்கு நான் 12.30 க்கு அப்பாயின்மென்ட் தரேன்.. சோ நான் லஞ்ச் சாப்பிட வர கொஞ்சம் லேட் ஆகும்"
ராம், " எல்லாம் என் நேரம்டா.. கமிட் ஆகிட்டேனு ரொம்ப பீத்திக்காத நானும் கமிட் ஆவேன் அப்போ உன்னை கவனிச்சுக்குறேன் "
இதுக்கு மேலே இவனுங்களை பேச விட்டா அடிச்சுக்க ஸ்டார்ட் பண்ணிடுவாங்க என சுமியின் மைன்ட் வாய்ஸ் குரல் கொடுக்க
சுமி, "ஐயோ பாய்ஸ் நீங்கள் சண்டை போடுறதை பார்த்தாலே எனக்கு சிப்பு சிப்பா வருது.. சரி உதய் பா நாங்கள் கொட்டிக்க போறோம்.. நீ 12.30 க்கு வந்து ஜாயின் பண்ணிக்கோ... வா போலாம் ராம்" என அவன் கையைப் பிடித்துக் கொண்டு இழுத்துச் சென்றாள்.. அப்போது வெளியே வந்த ஷ்ரவன் அவள் ராமை கைப்பிடித்து இழுத்துக் கூட்டி சென்ற காட்சியைப் பார்க்க அவன் கை முஷ்டி இறுகியது..
கேன்டீனில் சுமி உணவை வாயில் கொறித்தபடி ராமிடம் பேச ஆரம்பித்தாள்.. " ஏன் ராம் நம்ம ப்ளான் ஒன்னு கூடவா ஒர்க் அவுட் ஆகல.."
" ஆமாம் சுமி " என்றான் சோகமாய்...
" அச்சோ முகத்தை தூக்கி வைச்சுக்காத டா குரங்கு.. இரு உன் ஆளு சாப்பிட தான் வந்துட்டு இருக்கா.. இங்கே கூப்பிட்டு உட்கார வைக்கலாம்"
" அனு எங்கே கூட சாப்பிட ஜாயின் பண்ணிக்கோயேன்" என்று சுமி சொல்ல அவளும் பேருக்கென்று சிநேகமாய் ஒரு புன்னகை பூத்துவிட்டு உட்கார்ந்தாள்...
" ஒன் மினிட் எனக்கு கால் வருது நீங்க பேசிட்டு இருங்க" என்று சுமி அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்...
எதிரே ஷ்ரவனைப் பார்க்க அவன் கோபமாய் ஒரு பார்வையை வீசினான்.. அவளுக்கு என்னவென்றே புரியவில்லை.. ஒரு வேளை நாம் சொன்ன கவிதையில் தான் கோபமாக இருக்கிறானோ.. அவனுக்கு நம்மளை பிடிக்காத அப்போ அவனைப் பத்தி நம்ம கவிதை சொல்லியிருக்கக்கூடாது என்று அவள் தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.. " சுமித்ரா சாப்பிட்டு முடிச்சுட்டீங்கனா.. என் கேபின்க்கு வாங்க" என்றான் சற்றே கோபமான குரலில்..
" நான் சாப்பிட்டேன் சார்.. வரேன்" என அவனுடனே கேபினுக்கு வந்தாள்... உள்ளே நுழைந்தவனோ பட படவென பொறிய ஆரம்பித்துவிட்டான்...
"மிஸ். சுமித்ரா ஏன் வேலையிலே கொஞ்சம் கூட கவனமாவே இருக்க மாட்டேங்குறீங்க.. இது எப்போவோ முடிக்க வேண்டிய ப்ரொஜெக்ட் ஏன் இவ்ளோ டிலே ஆகுது"
" சார் நான் தான் உங்க கிட்டே ஒன் வீக் பர்மிஷன் கேட்டு இருந்தனே முடிக்க"
" கேட்டு தான் இருந்தீங்க.. ஆனால் நீங்க வொர்க் டைம்ல மத்தவங்க கூட அடிக்கிற கூத்தைப் பார்த்த முடிக்கிற மாதிரி தெரியல.... அதான் கூப்பிட்டு உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்..."
" சார் உங்கள் வார்த்தை அளவுக்கு மீறி போகுது.. பார்த்து பேசுங்க.. நான் யாரு கூடயும் குத்து அடிக்கல"
" பொய் சுமித்ரா, வாயை தொறந்தாலே பொய்.. நீ அந்த ராம் கூட கூத்து அடிக்கிறதை நான் பார்க்கலனு நினைச்சியா.. எல்லாம் எனக்கு தெரியும்.. ஆபிஸ்க்கு லவ் பண்ணனும்னு வராம கொஞ்சமாவது வேலையும் செய்யனும்னு வாங்க" என்று சொன்னதும் சுமி கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டாள்..
" ஷ்ரவன் ஷட் அப்.. இதுக்கு மேலே பேசுனே மரியாதை கெட்டுடும்.. ஆமாம் நான் லவ் பண்ணா உனக்கு என்ன வந்துச்சு.. இதோ இந்த ப்ரொஜெக்ட் மூனு நாளுக்குள்ள முடிஞ்சு உங்கள் டேபிள்க்கு வரும்.. நீங்க எனக்கு மேனேஜர் மட்டும் தான்.. பர்செனலா என் கிட்டே கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.. நான் வரேன்" என்று சொல்லி வெளியே வந்தவளின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது...
எனக்கு மழை பிடிக்குமென
அறிந்த நீ என் கண்களில்
மழை பொழிய வைத்துவிட்டாய்
மேகத்தை சேர்த்து பொழிய
செய்திருந்தாள் ரசித்திருப்பேன்
சோகத்தை சேர்த்து அல்லவா
பொழிய செய்து இருக்கிறாய்
அதை நான் எப்படி ரசிப்பது...
அங்கோ அவன் எரிமலையாய் குமுறிக் கொண்டு இருந்தான்.... நான் யாரு னு எப்படி சுமி உன்னாலே கேட்க முடிஞ்சுது . இதையே தான் விஷ்வா விஷயத்திலேயும் கேட்ட.. ஏன் சுமி.. நான் உனக்கு யாரோ தானா என நொந்து அமர்ந்து இருந்தவனின் கண்களில் சுமித்ரா கல்லூரியில் இதே வார்த்தையை சொன்ன அந்த நாளின் நினைவை காட்சிப்படுத்தியது....
💐💐💐💐💐💐
"என்னடா ஷ்ரவன் கோவமா இருக்கா மாதிரி இருக்கு" என அவன் அருகில் அமர்ந்தவாறு ஆனந்த் கேட்டான்... நம்ம முகத்தில எந்த ரியாக்ஷனை கொடுக்கலனாலும் சரியா என் மனசில இருக்குறதை கண்டுபிடிச்சுடுறானே... என ஆச்சர்யப்பட்டான்...
"இல்லடா, விஷ்வா ரூம்ல எப்போ பார்த்தாலும் சுமி கிட்டேயே தான் பேசிட்டு இருக்கான்... எனக்கு அதைப் பார்க்கும் போதுலாம் கடுப்பாகுதுடா.. இது வரை அவள் என் கிட்டே ஒரு வார்த்தை கூட பேசுனது இல்லை.. நானா போய் பேசலாம்னு ட்ரை பண்ணும் போது அவள் தலையை குனிஞ்சுடுவாளா.. எனக்கு எதுவுமே பேச வராது.. அமைதியா வந்துடுவேன்.. ஆனால் இந்த விஷ்வா கிட்டே மட்டும் அரை மணி நேரத்திற்கு மேலே பேசிட்டு இருக்கா.. எனக்கு ரொம்ப கடுப்பாகுது டா..."
" டேய் டேய் டென்ஷன் ஆகாத.. சுமி விஷ்வா கிட்டே உன்னைப் பத்தி சொல்லி இருக்கக்கூட வாய்ப்பு இருக்கு.. அதனாலே அவன் கிட்டே போட்டு வாங்க ட்ரை பண்ணு.."
" ம்ம் சரிடா.." என யோசித்தவாறே ஷ்ரவன் பதிலளித்தான்...
" டேய் விஷ்வா சுமி உன்னை லவ் பண்றாளா" என ஷ்ரவன் விஷ்வாவிடம் கேட்க அவன் முதலில் அதிர்ந்து அதெல்லாம் இல்லை டா நானும் அவளும் பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் அவ்ளோ தான் என்றான் விஷ்வா....
அதைக் கேட்டு ஷ்ரவன் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது.. அப்போ சுமி விஷ்வாவை லவ் பண்ணல.. நம்ம போய் சுமி கிட்டே ஃபேர்வேல் அன்னைக்கு ப்ரொபோஸ் பண்ணிடலாம் என முடிவு செய்தான்... நம்ம காதலை சொன்னால் அவள் முகம் எப்படி வெட்கப்படும் என மனதினுள் கற்பனை செய்ய ஆரம்பித்தவனுக்கு தெரியாது ஃபேர்வெல்லில் சுமியின் கோபமான முகத்தைத் தான் பார்க்க நேரும் என...
வாவ் சாரில செம அழகா இருக்கா.. அவளுக்கு மேட்சிங் டிரெஸ் தான் நானும் போட்டு இருக்கேன்.. எனக்கு தெரியும் சுமி நீ லாவண்டர் கலர்ல தான் சாரி ஃபேர்வெல்க்கு கட்டுவேனு. அதனாலே தான் நானும் லாவண்டர் கலர் ஷர்ட்டும் வேஷ்டியும் போட்டேன் என மனதினுள் அவளைப் பாராட்டிக் கொண்டு இருக்க முகத்தினுள் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவன் முன் வந்து நின்றாள்..
"ஷ்ரவன் நீ விஷ்வா கிட்டே நான் அவனை லவ் பண்றனானு கேட்டியா??.. ஹவ் டேர் யூ.. ஆமாம் நீ யாரு என் பர்செனல் விஷயத்துல தலையிட.. எந்த இடத்துல நீ இருக்கனுமோ அந்த இடத்துல இருக்குறது தான் உனக்கு நல்லது.." என்று பொறிந்துவிட்டு வேகமாய் சென்றுவிட்டாள்...
அவன் அப்படியே சிலையென அதே இடத்தில் நின்றுவிட்டான்.. அப்போ சுமி என்னை லவ் பண்ணலயா.. நானா தான் அவள் லவ் பண்றானு கற்பனை பண்ணிகிட்டனா... நான் யாருனு கேட்டுட்டாளே என இடிந்து போய்விட்டான்..
உனக்கு பிடிக்காத
எல்லாவற்றையும் சேர்த்து
நானும் வெறுத்தேன்
இப்போது என்னையும் சேர்த்து...
"டேய் ஷ்ரவன் இப்போ எதுக்கு டா இப்படி இருக்கே.. நார்மலா ஆகுடா.. ஷேவ் கூட பண்ணாம சுத்திட்டு இருக்கே.. இந்த எக்ஸாம்ல உன் மார்க்லாம் கம்மியா வந்து இருக்கு டிபார்ட்மென்ட் டாப்பரா இருந்தவன்டா நீ.. ஆனால் இன்னும் கேம்பஸ்ல கூட ப்ளேஸ் ஆகல.. போதும்டா ஷ்ரவன் இந்த பீலிங்சை விட்டு வெளியே வந்துட்டு ஒழுங்கா கேரியர் மேல கவனம் செலுத்த ஆரம்பி... நீ இந்த சின்ன விஷயத்துக்குலாம் தோத்து ஒடிஞ்சு போயிடக்கூடாது நின்னு ஜெயிச்சு காமி டா" என்ற ஆனந்தின் வார்த்தைகளை அவன் மனது ஏற்றுக் கொண்டது..
அதற்குப் பின் சுமியை அவன் பார்க்கவே இல்லை.. கடின உழைப்பை போட்டு நல்ல வேலையைப் பெற்றவன் பார்ட் டைமில் எம்.பி.ஏ படித்துவிட்டு மேனேஜராக பதவியேற்றான்.. ஆனாலும் அவன் மனதின் ஓரத்தில் சுமியின் நினைவுகள் ஒட்டிக் கொண்டு இருக்க அவளுக்காக இந்த கம்பெனியில் மேனேஜர் பதவியேற்றான்.. இவ்வளவும் அவளுக்காக அவன் செய்ய அவள் நீ யார் என்ற வார்த்தையை திரும்ப கேட்டுவிட்டாளே.. அவள் மனசில் கொஞ்சம் கூட நான் இல்லையா.. என எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தான்...
இங்கோ சுமி கண்ணீர் குளத்தில் மூழ்கிப் போய் கொண்டு இருந்தாள்.. ஏன் ஷ்ரவன் என் மனசில நீ தான் இருக்கேனு தெரியாம ஒவ்வொரு தடவையும் காயப்படுத்திற.. நீ இருக்க வேண்டிய இடத்தில ராமை சொன்னா எனக்கு கோவம் வராதா... எப்போ தான்டா என் காதலை புரிஞ்சுக்கப் போற நான் மட்டும் தான் உன்னை காதலிக்கிறேன்... ஆனால் நீ என்னை காதலிக்கவே இல்லை... அந்த வைஷ்ணவியை தான நீ காதலிக்கிற அப்ப எப்படி என்னை காதலிப்ப நீ என விரக்தியாய் சிரித்தாள்..
செல்லாய் என் மனதை
அரிப்பதும் நீ தான்
சொல்லால் என் மனதை
அடிப்பதும் நீ தான்...
💐💐💐💐💐💐
கூர்க் ட்ரிப்பை முடித்துவிட்டு கடைசி செமஸ்டருக்கான வகுப்புகள் நடக்க தொடங்கியது.. அப்போது சுமி ஷ்ரவனை திரும்பி சைட் அடிக்க அதே சமயம் வைஷ்ணவியும் அவளை சைட் அடித்துக் கொண்டு இருந்தாள்... சுமி வைஷ்ணவியை சுட்டு எரிப்பதுப் போல் பார்க்க அவளோ சட்டை செய்யாமல் ஷ்ரவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்..
பாடத்தில் சந்தேகம் என ஷ்ரவனையே சுற்றி வந்துக் கொண்டு இருந்தாள் வைஷ்ணவி... அவள் அவனிடம் வழிவதைப் பார்க்கும் போது எல்லாம் சுமி எரிச்சல் அடைந்தாள்.. அவள் கடுப்பாகி இருடி உனக்கு நான் என்ட் கார்டு போடுறேன் என வைஷ்ணவியின் முன்னால் சுமி நின்றாள்... " வைஷ்ணவி நீ பண்றது சுத்தமா நல்லா இல்லை.. எதுக்கு ஷ்ரவனைப் பார்க்குறா.. அவன் கிட்டே வழியிற"
" நான் ஷ்ரவனைப் பார்த்தா உனக்கு என்ன"
" எனக்கு என்ன ஏதுனுலாம் நீ கேட்கக்கூடாது.. ஷ்ரவனை இனி பார்க்கக்கூடாது புரிஞ்சுதா.."
" அதான் ஏன்னு கேட்குறேன்.. நீ ஷ்ரவனை லவ் பண்றியா"
" அதுக்குலாம் பதில் சொல்ல முடியாது.."
" எனக்கு ஷ்ரவனைப் பிடிக்கும் அவனுக்கும் என்னைப் பிடிக்கும்.. நாங்க பேசிப்போம்.. உனக்கு என்ன வந்தது.." என்று வைஷ்ணவி சொல்ல
" காமெடி பண்ணாத ஷ்ரவனுக்கு உன்னைப் பிடிக்குமா.. அதுக்கு சான்சே இல்லை.. வீணா மனசுல ஆசையை வளர்த்துக்குட்டு அப்புறம் கஷ்டப்படாதேனு தான் நான் வந்து சொன்னேன்.. அப்புறம் உன் இஷ்டம்"
" பார்த்துரலாம் ஷ்ரவனுக்கு உன்னை பிடிக்குதா.. இல்லை என்னைப் பிடிக்குதானு.."
" பார்த்தரலாம் டி" என்றாள் வைஷ்ணவி..
சில நாட்களிலேயே ஃபேர்வேல் வர அன்று எல்லோரையும் மேடைக்கு அழைத்து சில கேள்விகள் கேட்டு வாலுத்தனம் செய்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள்..... அப்போது ஷ்ரவனை மேடைக்கு அழைத்து அவனுடைய crush யாரு என்று கேட்க சுமியோ ஆவலோடு அவன் முகத்தைப் பார்த்தாள் ஆனால் ஷ்ரவனோ வைஷ்ணவி என்று பதிலளித்தான்...
அவ்வளவு தான் சுமியின் கண்ணீர் வெளிவர தயாராகியது... பக்கத்தில் அமர்ந்து இருந்த வைஷ்ணவியோ அவளை நக்கலாய் பார்த்து சிரித்த படி ஆசையை வளர்த்துக்கிட்டு கஷ்டப்பட்டது நான் இல்லை சுமி நீ தான் என்றாள்...
அவள் மனமோ அப்போ எல்லாம் என் கற்பனை தானா?.. அவன் என்னை காதலிக்கலாயா என தவித்துக் கொண்டு இருந்த நொடி விஷ்வா "சுமி நீ என்னை லவ் பண்றீயானு ஷ்ரவன் கேட்டான்... எனக்கு சிரிப்பா வந்துருச்சு" என்று சொல்ல அவளுக்கு உறுதியே ஆகிவிட்டது ஷ்ரவன் தன்னை காதலிக்கவே இல்லை என்று...
என் மனதில் வேறு யாரோ
இருக்கிறார்களோ என்ற
சந்தேகம் எப்போது
உனக்கு வந்ததோ,
அப்போதே என் சந்தேகம் தீர்ந்தது
உன் மனதில் நான்
இல்லை என்று...
டேய் ஷ்ரவன் நான் உன்னை தான் டா காதலிச்சேன்... நீ எப்படி விஷ்வாவை காதலிக்கிறியானு கேட்ப அப்போ நான் உன் மனசில இல்லவே இல்லையாடா என தோன்றிய அடுத்த நொடி ஷ்ரவனின் முன்னால் நின்றாள் பட படவென அவனைத் திட்டி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்... அவள் சோக உருவமாய் திரிய ஷ்ரவனோ படிப்பதிலும் கேம்பஸில் ப்ளேஸ் ஆவதும் நண்பர்களுடன் இயல்பாய் இருப்பதையும் அவள் காண நேர அவன் தன்னை காதலிக்கவே இல்லை என்பதாய் அவள் மனம் நினைத்தது....
நீ என்னை ஏமாற்றவில்லை
நான் தான் என்னை
ஏமாற்றிக் கொண்டேன்
இல்லாத உன் அன்பை
இருப்பதாய் நினைத்து...
இனியும் சோக சித்திரமாய் திரிய கூடாது எப்போதும் இருக்கும் சுமியாய் இருக்க வேண்டும் என மனதினில் உறுதி எடுத்துக் கொண்டாள்.. அவன் கொடுத்து சென்ற நினைவுகளை எண்ணி கண்ணீர் வடிப்பதை விட அந்த நினைவை மீட்டிப் பார்த்து சந்தோஷம் கொள்ள வேண்டும் என நினைத்தாள்.. அதன்படியே நடக்கவும் செய்தாள்... ஆனால் அவன் வந்ததில் இருந்து அவள் உறுதி கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்டம் கண்டு இன்று மொத்தமாய் உடைந்தே போய்விட்டது கண்ணீரில்...
விட்டு செல்ல நினைத்ததுமில்லை
விட்டு விலக துடித்ததுமில்லை
ஆனால் விதியின் விளையாட்டால்
விலகி நிற்கிறேன் இன்று
யாரோ ஒருத்தியாய்...
No comments:
Post a Comment