"அம்மா அம்மா சீக்கிரமா போனும் மா.. இன்னைக்கு புதுசா வேற ஒரு மேனேஜர் வரப் போறாங்க மா.. முதல் நாளே லேட்டா போனா வரலாறு நம்மளை தப்பா பேசாதா? சீக்கிரமா எனக்கு சாப்பாட்டை எடுத்துட்டு வா.. " என அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவர் தட்டில் தோசையோடு வந்தார்..
" அப்பா இந்த அம்மாவுக்கு ஒரு செவிட்டு மெஷினை வாங்கிக் கொடுப்பா... நான் சாப்பாடுன்னு கேட்டா தோசையை எடுத்துட்டு வந்து வைக்கிறாங்க.. எனக்கு தான் தோசையே பிடிக்காதுனு தெரியும்ல.. அப்புறம் ஏன் மம்மி தோசையை வைக்கிறே.. போ போய் சாப்பாட்டை கொண்டா.... " என சொல்லிக் கொண்டு இருந்தவளை கண்டிப்பாய் பார்த்தார் அவள் அன்னை சரஸ்வதி..
" ஏன்டி சாப்பாடு ரெடியாக கொஞ்சம் லேட்டாகும்... ஒழுங்காக தோசையை சாப்பிடு அப்போ தான் சீக்கிரமா கிளம்ப முடியும்" என சொல்ல
"அம்மா உனக்கு தெரியாதா நான் என்ன ஆனாலும் தோசை இட்லி இதை எல்லாம் தொட கூடமாட்டேனு..
இந்த உலகத்துல அரிசியே விளையாது வெறும் தோசை இட்லி னு சொன்னா கூட பட்டினியா இருப்பவனே தவிர இதை தொட மாட்டேன்....'
" ஏன்டி லூசு மாதிரி லாஜிக்கே இல்லாம பேசுற.. அரிசிய இருந்து தானே தோசை இட்லியே பண்ண முடியும்"
" மா அதெல்லாம் கண்டுக்காத.. பசியில இப்படி தான் டங்க்லாம் ஸ்லிப் ஆகும்.. இப்படி ஏன் கிட்டே நல்லா வியாக்கியனம் பேசுற டைம்ல போய் சாப்பாட்டை ரெடி பண்ணு"
" ஹே ஆபிஸ்க்கு லேட் ஆகிரும் டி"
" பரவாயில்லை சோறு ரெடி ஆன உடனே சாப்பிட்டுட்டே போறேன்... லேட்டானாலும் பரவாயில்லை" என சட்டமாய் அமர்ந்து இருந்த மகளை முறைத்துக் கொண்டே போனார்..
" நைனா நைனா எனக்கு ஒரு சந்தேகம்.. இவங்க எனக்கு அம்மாவா இல்லை மாமியாரா? " என சீரியசாய் அவள் கேட்க அவரோ ஜல்லிக்கட்டையில் அடி வாங்கப் போகிறோம் என்பதை அறியாமல்...
" எனக்கு தெரிஞ்சு அவள் முறைச்சுட்டு போறதை பார்த்தா மாமியாரா தான் இருப்பானு நினைக்கிறேன்" என தாடையை சொறிந்துக் கொண்டே சொன்னவரின் மீது கரண்டி பறந்து வந்தது..
" ஐயோ டாடி இந்த மம்மிக்கு சரியான பாம்பு காது.. ஆமாம் எப்படி பா கரெக்டா உங்கள் மேலே த்ரோ அடிச்சாங்க.. அம்மாவுக்கு திறமை கொஞ்சம் அதிகம் தான்.. மம்மி சன்டே குட்டி பசங்க கூட கிரிக்கெட் விளையாடுவேன்ல. அதுல உன்னையும் போலரா சேர்த்துக்கிறேன்.. கண்டிப்பா எங்க டீம் தான் வின் ஆகும்..." என சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் போனவள் அங்கே அவள் தாய் குளிரும் அளவுக்கு ஐஸ் வைத்துவிட்டு வந்தாள்..
கொஞ்ச நேரத்தில் சாப்பாடு ரெடியாகிவிட அதை சாப்பிட்டு முடித்தவள் ஜெட் வேகத்தில் அலுவலகத்துக்கு கிளம்பினாள்.. ஆனால் அவள் நேரம் பஸ்ஸை தவற விட்டுவிட்டாள்... அடுத்த பேருந்துக்கு காத்திருந்தவள் கூட்டம் நிரம்பி வந்த நான்கு பேருந்துகளை வேண்டும் என்றே தவறவிட்டாள்... கடைசியில் ஐந்தாவது பேருந்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சின்னபின்னமாகி மதியமே அலுவலகத்தை வந்து அடைந்தாள்..
அங்கே ராமும் உதய்யும் பதட்டமாய் இவளுக்காக காத்துக் கொண்டு இருந்தனர்..
" சுமி நேத்து அவ்ளோ சொல்லி அனுப்புனோம்ல.. அப்படி இருந்தும் ஏன் இவ்வளவு லேட்டா வர.."
" சாரி ராம் பஸ் கூட்டமா வந்துச்சு அதான்"
" சுமி நீ ஏறி இருந்தா தானே அந்த பஸ் கூட்டமா ஆகி இருந்து இருக்கனும்.. நீ ஏறாமலேயே பஸ் கூட்டமா வந்து இருக்குனா.. இட்ஸ் மெடிக்கல் மிராக்கில்" என உதய் சொல்ல அவனை முறைத்தவள் " டேய் தடியா என்னை குண்டுனு சொல்றியா..?" என அவனுடன் மல்லுக்கு நின்றாள்...
" அம்மா தாயே புது மேனேஜர் கிட்டே முதல்லே போய் உன்னை இன்ட்ரோ கொடு.. அப்புறமே இவனை கழுவி ஊத்து... அந்த மனுஷன் பார்க்கவே டெரர் பீஸா இருக்காரு.. சிரிக்கவே மாட்டேங்குறாரு.. முதல் நாளே போய் அவர் கிட்டே வாங்கி கட்டிக்கணும்னு உன் தலையிலே எழுதி இருக்கு.. இன்னும் லேட் பண்ணாம முதலிலே அவர் கேபின்க்கு போ" என ராம் சொல்ல அவள் உள்ளுணர்வுக்கு கூட புரிந்துவிட்டது இன்று சனீஸ்வரன் ரவுண்ட் கட்டி அடிக்கப் போகிறார் என்று...
கேபினுக்கு செல்ல நடந்து கொண்டு இருந்தவளின் மனதினில் ராம் சொன்ன வார்த்தைகள் ஓட "அவன் சொல்றதை எல்லாம் வெச்சு பார்க்கும் போது புதுசா வந்த மேனேஜர் சரியான உராங் உடானோ தான் இருப்பார் போல" என மனதினுள் நினைத்தவள் திடீரென்று சடென் ப்ரேக் போட்டு நின்றாள்.
அவனைத் தவிர நான் யாரையும் உராங் உடான்னு சொன்னது இல்லையே புதுசா வந்த மேனேஜரை எப்படி நான் என்னையறியாம உராங் உடானு சொல்லிட்டேன் என அதிர்ச்சி கலந்த குழப்பத்துடனேயே அந்த மேனேஜர் கேபினுக்குள் நுழைய அவளுக்கு விடை கிடைத்தது..
முதலில் கனவா நிஜமா என திகைத்தவள் கையை கிள்ள நிஜமாகவே அவளுக்கு வலித்தது.. ஆம் கனவு இல்லை இது நிஜம் தான் என் எதிரினில் அமர்ந்து இருப்பவன் என் உராங்குடானே தான்...
ம்ம் முன்னாடி பார்த்தா மாதிரியே இப்பவும் இருக்கான்.. ஆனால் என்ன லைட்டா தாடி வச்சு இன்னும் அழகா ஆகிட்டான்.. என்ன இவன் இங்கே உக்கார்ந்துட்டு இருக்கான்.. அப்போ இவன் தான் புது மேனேஜரா என அவளின் யோசனைகள் எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் ஓட அதற்கு ப்ரேக் போட்டு நிறுத்தியது அவனின் குரல், "மிஸ்.சுமித்ரா இது தான் ஆபிஸ்க்கு வர டைம்மா?.. இனி ஒரு தரம் இப்படி நடந்தா அமைதியா சொல்லிட்டு இருக்க மாட்டேன் என் ஆக்ஷனே வேற மாதிரி இருக்கும்.. ரிப்போர்டிங் டைம்க்குள்ள ஆபிஸ்க்குள்ளே இருக்கணும்" என அவன் கடினமான குரலில் சொல்ல இவள் மௌனமாய் தலையை ஆட்டினாள்..
அவள் முகம் சுருங்கியதைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ இயல்பான குரலை வரவழைத்து "நான் தான் உங்களோட புது மேனேஜர்... பேரு ஷ்ரவன்.. இனி டெய்லி நீங்க என் கிட்டே வந்து உங்கள் டீமோட ப்ரொஜெக்ட் ரிப்போர்ட்டை ஈவினிங் அப்டேட் பண்ணனும்.. ஓகே இப்போ நீங்க போலாம்" என அவன் சொல்ல இவள் இயந்திரமாய் அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்...
என்னை யாருனு தெரியாத மாதிரி நடந்துக்குறானே.. அட்லீஸ்ட் ஒரு க்ளாஸ்மேட்ன்ற முறையிலாவது என் கிட்டே பேசி இருக்கலாம்ல.... அதுசரி அந்த காலேஜ்ல இருக்கும் போதே நம்ம கிட்டே ஒரு தடவை கூட பேசாம இருந்தவன் இப்போ மட்டும் பேசிட போறோனாக்கும்... நமக்கு மட்டும் தான் அவனைப் பத்தின நியாபகம் லாம் இருக்கு.. ஆனால் அந்த உராங் உடானுக்கு தான் எதுவும் நியாபகம் இல்லை.. என விரக்தி சிரிப்பை உதிர்த்த படி அவள் கேபினுக்குள் வந்தவளின் கண்கள் கண்ணீர் மடையைத் திறந்தது.....
தேங்கிய உன் நினைவுகள் தான்
தேங்காமல் என் கண்ணீரை
என் கண்ணீரை
வெளியேற்ற வைக்கிறது...
நீண்ட நேரம் அழுதவள் பின்னர் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாள்.. "என்ன ஆனாலும் சரி அழுது தன்னை பலவீனப்படுத்திக் கொள்ளாமல் சிரித்தபடி இருக்க வேண்டும்" என்ற அவளின் முடிவு நினைவு வர தன்னை தேற்றிக் கொண்டு பழைய சுமியாக முகத்தில் புன்னகையை ஒட்டிக் கொண்டாள்.. ஆனால் இனி வரும் நாட்களில் புன்னகைக்க கூட மறந்து விடுவோம் என்பதை அறியாமல்..
என்னை விட்டு சோகம்
செல்லாவிட்டாலும் பரவாயில்லை
என் இதழில் இருக்கும்
புன்னகையை ஒரு போதும்
செல்லவிட மாட்டேன்...
No comments:
Post a Comment