அங்கே அவள் அப்படி இருக்க இங்கோ ஷ்ரவன் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தான்.. இவள் இன்னும் மாறவே இல்லையா.. லேட்டா வற அந்த பழக்கத்தை மாத்தவே மாட்டா போல இந்த அரை ஆழக்கு என நினைத்தவன் மனதினுள் அவளை முதல் முறையாக பார்த்த நாள் நிழலாடியது...
💐💐💐💐💐💐
ஷ்ரவன் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தான்.. அப்போது லேட்டரல் என்ட்ரி என சில மாணவர்கள் சேர அவர்களுள் ஒருத்தியாக சுமித்ராவும் சேர்ந்தாள்...
அன்று அவள் கல்லூரியில் இணைந்த முதல் நாளே தாமதமாக வந்தாள்... கதவின் அருகே நின்று " எக்ஸ் கியூஸ் மீ சார்" என அவள் சொல்ல, குரல் வந்த திசையை நோக்கி சென்ற ஷ்ரவனின் கண்களுக்கு முதலில் தெரிந்தது அவளின் நீண்ட கூந்தல் தான்.. என்ன முடிடா என யோசித்தவன் அவள் கண்களைப் பார்க்க துரு துருவென இரண்டு மீன்கள் துள்ளிக் கொண்டு இருந்தது அந்த விழிக்குள்.. கோதுமை நிறம்... சராசரியை விட கொஞ்சம் உயரம்.. வட்ட வடிவ முகம்.. என அவனின் மனது அவனை அறியாமல் அவளை அளவெடுத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு திரும்பி கொண்டான்.. நானா ஒரு பெண்ணை இப்படி பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..நமக்கும் பெண்களுக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆச்சே.. என்ன இவளைப் போய் இப்படி சைட் அடிச்சுட்டு இருக்கேன் என தாறுமாறாக ஓடிய யோசனையை கலைத்து வகுப்பில் கவனம் செலுத்தினான்..
நம்ம ஹுரோ இருக்காரே சின்ன வயதில் இருந்தே பெண்களைக் கண்டாலே ஒதுங்கும் குணம் கொண்டவன்... படிப்பில் கெட்டிக்காரனாய் இருந்தான்.. அவன் அவ்வளவு எளிதாக வாயைத் திறந்து பேச மாட்டான்.. சிரித்து பேசுவது என்பது அவன் அகராதியிலே கிடையாது.. அவனுடைய தனிப்பட்ட விஷயங்களை யாரிடமும் பகிர்ந்தும் கொள்ள மாட்டான்.. யாருடைய விஷயத்திலேயும் மூக்கை நுழைக்காமல் தனியாகவே இருப்பான்... ஒன்று முடிவு செய்தால் அதை மாற்றவே மாட்டான்... இப்படிப்பட்ட இந்த ஷ்ரவனை மாற்ற வந்தவள் தான் அவனுக்காக படைக்கப்பட்ட அந்த சுமி...
என்னடா இது ஐந்தாவது செமஸ்டர் வந்தாச்சு கடைசி வர இந்த பழக்கத்தை மாத்திக்கவே மாட்டேங்குறாளே இவள்... எப்பவும் போல இந்த செமஸ்டர் முதல் நாளும் லேட் தானா.. ஆனால் முதல் பீரியடே முடிஞ்சுடுச்சே என்ன இந்த அரை ஆழாக்கு இன்னும் வரலயே.. ஒரு வேளை இன்னைக்கு அவள் காலேஜ்க்கு வர மாட்டாளோ என நினைத்தவன் மனது ஏனோ திடீரென்று பாரமானது.. அவள் முகத்தைப் பார்க்கலனா என்னவோ மாதிரி இருக்குமே அந்த நாள்..
அவளை எப்படி பார்க்காம இருப்பேன்..." என அவன் சோகமாய் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே " எக்ஸ் கியூஸ் மீ சார்" என்ற அவளின் குரல் செவிகளில் விழ மனம் துள்ளிக் குதித்தது...
கண்டதும் காதல் என்று
உணரவில்லை தான்
ஆனால் உன்னை காணாத
பொழுதுகளில் உணர்ந்தேன்
இது காதல் தான் என்று...
செமஸ்டரின் முதல் நாள் லேட்டாக வரும் பழக்கத்தை அவள் கடைசி செமஸ்டர் வரை மாற்றிக் கொள்ளவே இல்லை... இவனும் அவளுக்காக காத்திருப்பதை மாற்றிக் கொள்ளவே இல்லை.. எப்போதும் போல அந்த ராட்சஸி இன்னைக்கும் காக்க வெச்சி லேட்டா தான் தரிசனம் தரா.. என புன்னகையில் மலர்ந்த அவன் இதழ்கள் திடீரென்று இறுகி கடினம் உற்றது.. என் நேசிப்பை புரிஞ்சுக்காதவள நினைச்சுட்டு இருக்கிறது என்னோட பைத்தியக்கார தனம் என தலையை சிலுப்பிக் கொண்டு வேலையைப் பார்க்கத் துவங்கினான்...
சுமி கேன்டீனுள் உட்கார்ந்துக் கொண்டு உதயை சீண்டிக் கொண்டு இருக்க அவனோ வழக்கத்துக்கு மாறாய் அமைதி காத்தான்..
" ராமா இந்த ஒதை அமைதியா இருக்குறதைப் பார்த்தா உனக்கு என்ன தோனுது"
" அமைதியா இருக்கானு தோனுது.. உனக்கு புதுசா வேற ஏதாவது மாதிரி தோனுதா" என அவன் கேட்க " சீ உன் கிட்டே கேட்டேன் பாரு என்னை அடிச்சுக்கனும்... "
" ஐயாவோட டீம் மேட்டை புதுசா வந்தா மேனேஜர் உன் டீம்ல போட்டுட்டாரேனு கவலைப் படுறா மாதிரி எனக்கு தோணுது ராமா.... என்ன உதய் நான் சொல்றது கரெக்ட் தானே" என கேள்வியாய் நோக்க முதலில் அதிர்ந்தவன் பின் சமாளித்துக் கொண்டு " அதெல்லாம் ஒன்னுமில்லையே" என இறங்கிய குரலில் சொல்ல சுமியும் ராமும் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கிவிட்டனர்..
" என் சோகத்தைப் பார்த்தா உங்களுக்கு சிரிப்பா இருக்கா" என அவன் பரிதாபமாய் கேட்க " அச்சோ உதய் கண்ணா முகத்தை மாத்துங்க.. எனக்கு பயங்கரமா சிரிப்பா வருது.. நீ பவித்ராவை சைட் அடிக்கிறேனு முன்னாடியே தெரியும்டா குரங்கு.. ஆனால் எனக்கு தெரிஞ்ச அளவுக்கு கூட உன் ஆளுக்கு தெரியாது.. நீ அவள் முன்னாடி காமிச்சுக்கிட்டதும் இல்லை.. முதலில் அவள் கிட்டே இயல்பா பேசு... உனக்கு அவளைப் பிடிக்கும்னு உணர வை லூசு" என அவள் சொல்ல
" எனக்கு அவளைப் பார்த்தாலே நார்மலா பேச வர மாட்டேங்குது.. டீம் லீடரா வேற போயிட்டேனா.. அதான் அவள் கிட்டே ஸ்டிரிக்டாவே பேசி பழகிட்டேன்.. சில சமயம் பேசலாம்னு போவேன் ஆனால் நாக்கு பரதநாட்டியம் ஆடி பேச முடியாம தவிச்சு கடைசியிலே அந்த முடிவையே கை விட்டுட்டேன்"
" உன் வாயை எல்லாம் என் கிட்டே மட்டும் காட்டு.. போய் அவள் கிட்டேயும் ஒழுங்கா பேசு... உண்மையை சொல்லனும்னா இது உனக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பம்... அவள் கிட்டே டீம் லீடரா பேசும் போது ஒரு கேப் இருக்க தான் செய்யும்.. இப்போ அவள் உன் டீம் இல்லேல சோ நார்மலா உன் ஃபிரெண்ட் கிட்டே பேசுறா மாதிரி பேசு சரியா" என சுமி சொல்ல பூம் பூம் மாடு போல் தலையாட்டினான்..
" சரி உன் பிரச்சனையை தீர்த்துட்டேன் இப்போ ராம் பிரச்சனைக்கு போலாம்" என சுமி ராமின் பக்கம் திரும்ப " எனக்கு முக்கியமான வேலை இருக்கு" என கழன்டு கொள்ள முயன்றவனை தடுத்து அணைப் போட்டனர் சுமியும் உதயும்... மாட்டிக்கிட்டேனா என்ற இயலாமையோடு அவர்களைப் பார்க்க அவர்களோ கேள்வியாய் இவனை நோக்கினார்...
" ஹே ஊமைக் குசும்பா உன்னைப் பத்தி எனக்கு தெரியாதா?.. அது எப்படி எப்போ பார்த்தாலும் டவுட் வந்து அதை தீர்க்க என் டீம் மேட் அனுவைப் பார்க்க நேரா வந்துடுறீங்க.. அவள் டவுட் தீர்த்திட்டு இருக்கும் போது நீ அதை கவனிக்காம அவளை கவனிச்சுட்டு இருக்குறதைப் பார்த்த அப்பவோ எனக்கு டவுட் வந்துடுச்சு" என சுமி சொல்ல " அடப்பாவி இது எவ்ளோ நாளாடா" என உதய் கேட்டான்..
" மிஸ்டர் உதய் அவன் உங்களை விட சீனியர் கிட்டத்தட்ட இரண்டு வருஷமா" என சொல்ல "அட துரோகி" என்றான் உதய் ராமைப் பார்த்து...
" அப்போ சார் மட்டும் துரோகி இல்லையாக்கும்" என சுமி உதயைக் கேட்க அவன் கீழே குனிந்து கொண்டான்..
" சுமி ஆனால் நீ செம ஷார்ப்பு.. கரெக்டா எங்களை கண்டுபிடிச்சுட்டே.. உன்னை மாதிரி ஃப்ரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வெச்சு இருக்கனும்" என்றான் ராம்..
" இப்போ ஐயா எதுக்காக பிட்டு போடுறீங்க" என சுமி கேட்க " எங்கள் லவ்வை நீ தான் சேர்த்து வைக்க வழி சொல்லனும்னு பிட்டு போடுறோம்" என உதய் சொல்ல " டேய் டயலாக் பேசினது அவன்.. நீயும் கூட சேர்ந்துக்குற.. சரியான கேடி" என்றாள் சுமி..
" ராம் சொன்னா என்ன உதய் சொன்னா என்ன ரெண்டு பேரும் ஈருயிர் ஓர் உடல்.. சோ ரெண்டும் ஒன்னு தான்.. சுமி நீ தான் எங்கள் லவ்வை சேர்த்து வைக்கணும்" என உதய் சொல்ல " சரி சரி ஃப்ரெண்டா போயிட்டே செஞ்சு தொலையுறேன்" என சுமி சொல்ல "நண்பேன்டா" என கோரஸாக ராமும் உதயும் சொல்ல வாய்விட்டு சிரித்தாள் சுமி...
அப்போது அவளைக் கடந்து சென்ற ஷ்ரவன் என் சிரிப்பை அழிச்சுட்டு நீ சந்தோஷமா இருக்கியா என குரோதத்துடன் பார்த்து சென்றான்..
உன் சிரிப்பைப்
பார்த்து புன்னகைக்க
கற்றுக் கொண்ட
என் உதடுகள் ஏனோ
இன்று சோகத்தை
சுமந்து நிற்கிறது...
No comments:
Post a Comment