"சார் மே ஐ கம் இன்" என சுமி மெல்லிய குரலில் கேட்க " யெஸ் கம் இன்" என்று நிமிர்ந்து சொன்னவன் மீண்டும் கீழே குனிந்து அலுவலகக் கோப்புகளை பார்க்க துவங்கினான்...
உள்ளே வந்து அமர்ந்தவள் தொண்டையைக் கணைத்தும், மொபைல் போனில் சவுண்ட் என எவ்வளவு சிக்னல் கொடுத்தாலும் அவன் கீழே குனிந்து இருந்த தலையை எடுப்பதாய் இல்லை.. இதற்கு மேலும் முடியாது என நினைத்தவள் " சார் நீங்க என்னைக் கூப்பிட்டதா சொன்னாங்க" என சொல்ல அவன் நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்...
சுமி இழுத்துப் பிடித்து வைத்து இருந்த பொறுமை எல்லாம் பறந்து போக வேகமாக இருக்கையை விட்டு எழுந்தாள்..
" ஹலோ மிஸ் சுமித்ரா கொஞ்சம் உட்காருங்க.." என சொல்ல அவள் அசராமல் நின்று கொண்டு இருந்தாள்.. இவன் வர சொன்னா வரனும் உட்கார சொன்னா உட்காரனும்... நான் என்ன இவனோட வேலைக்காரியா என மனதினுள் அவனை திட்டிக் கொண்டு இருக்க
" உட்காருனு சொன்னேன்" என்ற அவனது கோபப் பார்வை ஏனோ அவள் யோசனையை தடை செய்து அன்னிச்சையாய் அவளை இருக்கையில் அமர வைத்தது..
" ஏன் இன்னும் ப்ரொஜெக்ட் இன்னும் பாதி பர்சேன்ட் கூட தாண்டல... இந்த வேகத்தில நீங்க போனீங்கனா டெட்லைன் க்குள்ளே முடிக்கிறது ரொம்ப கஷ்டம்... ஏன் இப்படி பொறுப்பே இல்லாம இருக்கீங்க.. கொஞ்சமாவது வொர்க்ல டெடிகேஷனோட இருக்கனும்" என அவன் கோபக்குரலில் சொல்லிக் கொண்டு இருக்க
" சார் என்னோட டீம் மேட் லலிதாவுக்கு டெலிவரி ஆகிருச்சு.... இந்த வொர்கக அவங்களுக்கு தான் அசைன் பண்ணி இருந்தாம்... ஏனா எங்க டீம்ல எனக்கு அடுத்து அவங்களுக்கு தான் அந்த ப்ரோக்ரமிங்கான லாஜிக் தெரியும்.. ஆனால் அவங்களுக்கு சீக்கிரமா டெலிவரி ஆனதாலே டிலே ஆகிடுச்சு.." என சொன்னாள்..
" எனக்கு காரணம் எல்லாம் தேவை இல்லை.. டெட்லைன் க்குள்ளே கம்ப்ளீட் பண்ணி இருக்கனும்.. தட்ஸ் இட்... நீங்க கொஞ்சம் ஓவர் டைம் வொர்க் பண்ணா உங்களுக்கு எதுவும் ஆகிட போறது இல்லைனு நினைக்கிறேன்.... அதனாலே நீங்களே அதை கம்ப்ளீட் பண்ணிடுங்க.. இப்ப நீங்க போலாம்" என சொல்லி முடித்தவன் மீண்டும் அவன் வேலையைப் பார்க்கத் தொடங்கினான்...
வெளியே வந்தவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டு இருந்தது.. என்னை வெறுப்பேத்தி பார்க்குறதே இவனுக்கு வேலையா போச்சு... நான் யாருனு உனக்கு காமிக்குறேன் ஷ்ரவன் என அவள் மனதினுள் பேசிக் கொண்டு இருக்க " ஹே சுமி என்னாச்சு.. ஏன் டல்லா இருக்கே" என ராம் கேட்டான்..
" அதெல்லாம் ஒன்னுமில்லை ராமா.. ஆமாம் நான் சொன்னா மாதிரி பண்ணியா.."
"இல்லையே சுமி எங்க உன் டீம் மேட் வேலை வேலைனு சுத்திட்டு இருக்கா.. எனக்கு டவுட்டு கூட க்ளியர் பண்ண மாட்டேங்கறா அந்த அளவுக்கு பிசியா இருக்கா... என் ஆள நல்லா வேலை வாங்குறியா"
" அட இல்லை ராமா.. எங்க ப்ரொஜெக்ட் டெட்லைன் வரப் போது அதான்.. ஆனால் இனி அனுவுக்கு அதிகமா வேலை இருக்காது.. ப்ரொக்ராமிங் செக்ஷன் பத்தி எனக்கு தான் தெரியும்.. அதனாலே நான் தான் மீதி ப்ரொஜெக்டை முடிக்கனும். நாளையிலே இருந்து உன் ஆளு ஃப்ரீ
ஆகிடுவாங்க.... அதனாலே இன்னைக்கே போய் ப்ர்பேர் பண்ணு கேள்வியை, அப்போ தான் அவள் கிட்டே டவுட் கேக்க வசதியா இருக்கும்" என நமுட்டு சிரிப்புடன் சொல்லிய சுமியை " கொழுப்பு தான் உனக்கு.. பட் தாங்க்ஸ் சுமி" என ராம் சொன்னான்..
" தாங்கஸ்க்கு பதிலா சமோசா வாங்கி கொடு டா பக்கி"
"டபுள் ஒகே சுமி மா" என சிரித்து பேசிக் கொண்டு இருந்தவர்களை தூரத்தில் இருந்து இருவரது விழிகள் சுட்டு எரிப்பதைப் போல் பார்த்துக் கொண்டு இருந்தன..
"அம்மா இனி நான் லேட்டா தான் வீட்டுக்கு வருவேன்.. கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு.... சோ நீ எனக்காக வெய்ட் பண்ணாம சமத்தா தூங்கிடனும்" என சொன்ன மகளை நோக்கி " சரிடி பார்த்து வா வரும் போது.. ஆமாம் என்ன இப்ப எல்லாம் ரொம்ப சீக்கிரமா ஆபிஸ்க்கு கிளம்பிடுறே...ஆச்சர்யமா இருக்குடி எனக்கு"
" எல்லாம் அந்த உராங் உடான் மேனேஜரால தான் மா.. முன்னாடி இருந்த மேனேஜர் ஜாலியா இருப்பாரு.. ஆனால் இவரு அப்படியே அவருக்கு நேரெதிர்.. எல்லாம் என் நேரம் மா.. சரி சரி எனக்கு தோசையை வை.. டைம் ஆகுது ஆபிஸ்க்கு" என்றாள் சுமி..
ஐயோ நான் பதினொரு மணி வரைலாம் ஆபிஸ்ல இருந்தது இல்லையே எல்லாம் இவனாலே தான்.. உராங் உடான் நீ என்னை நல்லா பழி வாங்குற.... உனக்கு ஒரு நாள் இருக்கு.. அட சாப்பிட கூட இல்லையே, வயிறுல இருந்து வேற ஏடாகூடமா சவுண்ட்லாம் கேக்குது.. ஏதாவது போய் கொட்டிக்கிட்டு வருவோம் என எழுந்தவள் பின்னே திரும்ப திடீரென யார் மீதோ மோதினாள்.. மோதிய சில நொடிகளில் அரையடி தூரம் பின்னே சென்றவள் அப்படியே கீழே குனிந்து நின்றாள்...
"ஐ யம் சாரி தெரியாம" என பேசிக் கொண்டு இருந்த குரல் ஷ்ரவனுடையது தான் என கண்டு கொண்டவள் நிமிர்ந்து அவனைப் பார்த்து " இட்ஸ் ஓகே சார்" என்றாள்..
" நான் சாப்பிட போய் இருந்தேன்.. அதான் நீ சாப்பிடலேயேனு உனக்கும் வாங்கிட்டு வந்தேன்" என்று சொன்னவன் அவள் டேபிளின் மீது பார்சலை வைத்துவிட்டு திரும்பி வந்து அவன் அறைக்குள் நுழைந்தான்.. அவன் மனதில் சுமியுடைய நினைவுகள் வலம் வர தொடங்கியது...
💐💐💐💐
அன்று லேப் இல் சைன் வாங்குவதற்காக எல்லோரும் ரெக்கார்ட் நோட்டை ஒரு மேஜையின் மேல் அடுக்கிக் கொண்டு இருந்தனர்.. அப்போது ஏதேச்சையாக திரும்பிய ஷ்ரவனின் கை சுமித்ராவின் மீது பட்டு விட சில நொடிகள் கழித்தே அவன் உணர்ந்தான் அவள் மீது தன் கைப்பட்டுவிட்டது என... அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக திரும்ப அவளோ இரண்டடி தூரம் பின்னே சென்று தலையை கீழே குனிந்து நின்று இருந்தாள்.. "சாரி சாரி தெரியாம கைப்பட்டுடுச்சு" என அவன் குரல் பதற்றமாய் அவளைப் பார்த்து ஒலித்தது.. ஆனால் அவள் எதுவும் பேசாது குனிந்த தலை நிமிராமல் தலையாட்டியது ஏனோ அவன் மனதை கவர்ந்து சென்றது...
அதற்குப் பின் அவளுக்கு தெரியாமல் அவளை சைட் அடிக்கத் தொடங்கினான்... அவளுடைய குறும்புத்தனத்தை ரசித்தது அவன் விழிகள்... பேராசிரியர் கவனிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையைப் போல் தலையாட்டிவிட்டு அவர் போர்ட் பக்கம் திரும்பியதும் சேட்டை செய்வது.. வகுப்பில் உட்கார்ந்து கொண்டே தூங்குவது... அடிக்கடி மொக்கை போடுவது என அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்தான்...
அப்பா பேசிக்கிட்டே இருக்காலே கொஞ்சம் கூட வாயை மூட மாட்டாளா.. மனசுல என்னை நினைக்குறாளோ அதை அப்படியே முகம் காமிச்சு கொடுத்துடுதே.. முகத்தில எப்பவுமே ஒரு சிரிப்பு ஒட்டிக்கிட்டே இருக்கே.. விளையாட்டுத்தனம் அதிகமா இருக்கு.. ப்ரெண்ட்ஸ்காக என்ன வேணாலும் செய்வா போல.. அடாவடி பிடிச்சவ.. ஆனால் அவள் குணத்துக்கும் உடைக்கும் சுத்தமா சம்மந்தமே இல்லை.. காலேஜ்ல ட்ரெஸ் கோட்லாம் இல்லைனு தெரிஞ்சும் கூட அடக்கமா ட்ரெஸ் பண்ணி இருக்கா... முடியை மத்த பொண்ணுங்க மாதிரி வெட்டாம நீட்டா வளர்த்து வெச்சு இருக்கா.. பார்க்க தான் சைலன்ட்டா இருக்கா ஆனால் மத்தவங்க கிட்டே பேசுறதை பார்த்தா சரியான சரவெடி இவள்... ரொம்ப வித்தியாசயமானவளா இருக்கா.. என அவளை கவனிக்கவும் கணிக்கவும் தொடங்கினான்.. அவனை அறியாமலே அவளை மனதினுள் "ஊர்க்காரி" என்று செல்லமாக அழைத்தான்...
வெறுமையாக இருந்த
என் இதயம் இன்று
இடமே இல்லாமல்
நிரம்பி வழிகிறது
உன் நினைவுகளினால்...
💐💐💐💐💐💐
ஷ்ரவனுடைய செல்போன் ஒலிக்க நிகழ் காலத்துக்கு வந்தவன் நினைவு கலைந்து வேலையைப் பார்க்க தொடங்கினான்...
"டேய் உராங் உடான் எனக்கு சாப்பாடு போட்டு வேலை வாங்குறியா.. இரு உன்னைப் பார்த்துக்குறேன்.. எப்போ பார்த்தாலும் என்னை வெறுப்பு ஏத்துறதே உனக்கு வேலையா போச்சு..உன்னாலே நான் அம்மா கூட பேசுற டைம் எல்லாம் கம்மி ஆகிடுச்சு... நீ என்னை பழி வாங்குறதா நினைச்சு இப்படி பண்ணிட்டு இருக்க ஆனால் இதை நான் சேலன்ஜா எடுத்துக்குறேன்.. டெட்லைன்க்கு முன்னாடியே ப்ரொஜெக்ட்டை முடிச்சுக் காட்டுறேன்.. எப்பவும் காலேஜ்ல உனக்கும் எனக்கும் நடுவுல யாருக்கும் தெரியாத அளவுக்கு ஒரு போட்டி ஓடிட்டு இருக்கும்.. அதுல எப்பவும் நான் தான் ஜெயிப்பேன் இந்த தடவையும் நான் ஜெயிச்சு காட்டுறேன் என மும்முரமாய் வேலை செய்தாள்...
அதற்கு பலனாய் ஒரே வாரத்தில் ப்ரொஜெக்ட் கம்ப்ளீடட் சார் என்று சொல்லி அவள் சமர்ப்பிக்க அவனோ ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்று விட்டான்..
"ம் குட் ஜாப்... தீயா வேலை செஞ்சு இருக்கீங்க போல.." என அவன் பாராட்ட "யெஸ் சார் தீயா வேலை செஞ்சு, எப்பவும் போல இந்த சேலன்ஜ்ல நான் ஜெயிச்சுட்டேன்..." என்று சொல்லிச் சென்றவளை யோசனை முடிச்சோடு பார்த்தான்...இவள் இன்னும் காலேஜ்ல எங்களுக்குள்ளே நடந்த அந்த சைலண்ட் வார் ஆ மறக்கவே இல்லையா?
போட்டி இடாமலே
தோல்வியை ஏற்பவர்கள் இந்த
காதலை உள்ளுக்குள்
மறைத்து வைத்து இருக்கம்
ஒருதலை காதலர்கள்...
No comments:
Post a Comment