"டேய் ஷ்ரவன் லேட்டரல் என்ட்ரிலயே அதிகமா மார்க் எடுத்தது சுமி தான் டா.. 7.5 வாங்கி இருக்கா.. சீனியர்ல லேட்டரல் ஒருத்தவங்க கூட 6 க்கு மேல வாங்கினது இல்லை.. செம டேலண்ட்ல அந்த பொண்ணு.."
" ஹ்ம்ம் டா ஆமாம் க்ளாஸ் ப்ரொஃபர்ஸ் எல்லோருமே இவள் முகத்தைப் பார்த்து தான் க்ளாஸ் எடுக்கிறாங்க.. ப்ராக்டிகலா அவளுக்கு நிறைய தெரியுது.. " என கிருஷ்ணாவிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்..
" பாரேன் எப்பவுமே டவுட்டுனா உன்னைக் கூப்பிடுவாங்க... இப்ப லேப் ல அவளை தான் கூப்பிடுறாங்க " என கிருஷ்ணா சொல்ல இவன் ஆம் என்பது போல் தலையாட்டி கொண்டு இருந்தான்..
"ஷ்ரவன் நீ கொடுத்துட்டு போன ல கனெக்ஷன் அதுக்கு அவுட்புட் வரல.. நம்ம பேட்ச்க்கு கொஞ்சம் வந்து மறுபடியும் செக் பண்ணு பா ப்ளீஸ் .. " என சொல்ல "கிருஷ்ணா என் பேட்ச்ல நான் கனெக்ஷன் கொடுத்துட்டு அப்புறம் வந்து உங்கள் பேட்ச்ல பார்க்குறேன்" என சொல்லி சென்றவன் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவுட்புட் வரவே இல்லை.. என்ன செய்வது என்று அவன் கையை பிசைந்து கொண்டு இருக்கும் போது " சுமி மட்டும் தான் அவுட்புட் எடுத்து இருக்கா.. நான் அவளைப் போய் கூப்பிடவா" என அனிதா கேட்க அவனிடமிருந்து சிறு தலையாட்டல் மட்டுமே பதிலாக வந்தது..
" இவனுக்கு பேசவே வராதா.. நான் இவன் பேட்ச்மேட் தானே ஒரு தடவையாவது என் கிட்டே பேசி இருக்கானா.. சரியானவன்" என திட்டியபடியே அனிதா சுமியை கூப்பிட்டு வர சென்றாள்..
சுமி வந்த இரண்டே நிமிடங்களில் அவுட்புட் வர அவன் ஆச்சர்யமாய் பார்த்தான்.. எப்படி இவளுக்கு மட்டும் அவுட்புட் வந்தது ம்ம் திறமைசாலி தான் என அவளுக்கு மனதினுள் செர்டிபிக்கேட் கொடுத்தான்..
முதலாம் வருடம் எல்லா லேப் எக்ஸாமிலும் முதலாய் முடித்துவிட்டு ஷ்ரவன் தான் வெளியே வருவான்.. ஆனால் இரண்டாம் வருடத்தில் எப்போது சுமி வந்தாளோ அவன் அப்போதில் இருந்து இரண்டாம் ஆளாய் ஆனான்...
இந்த எக்ஸாம்ல எப்படியாவது முதல் ஆளாய் முடிச்சுட்டு வெளியே போயிடனும் என மும்முரமாய் வேலை செய்து அரை மணி நேரத்திலேயே முடித்து சாரிடம் சென்றான்.. ஆனால் அவரோ கொஞ்ச நேரம் காத்திருக்க செல்ல அமைதியாய் சென்று உட்கார்ந்தான்.. அந்த லேப் இரண்டு அறையை கொண்டு இருக்க இன்னொரு அறையில் சுமி இருந்தாள்.. அதனால் இவன் "அவள் இந்நேரம் முடித்து இருப்பாளா "என யோசித்துக் கொண்டு இருக்கும் போதே அவள் அந்த அறையை விட்டு வெளியே வந்து லேப்பை விட்டு சென்றாள்..
"அடேய் சார் நான் கொடுக்க வந்த அப்போ அப்புறம் கொடுனு சொல்லிட்டு அந்த ரூம்க்குள்ளே போயி அவள் கிட்டே மட்டும் முதலிலே பேப்பரை வாங்கிட்டு அனுப்புறீயா" என வாத்தியாரை திட்டியபடி பேப்பர் கொடுத்துவிட்டு வெளியே வந்தான்...
அவள் ரெக்கார்ட் நோட்டை கீழே உட்கார்ந்து தேடிக் கொண்டு இருக்க இவன் அவளுக்கெதிராய் வந்து நின்றான்.. இவள் அவன் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதுப் போல் அந்த காட்சி அமைய அவள் படக்கென்று எழுந்துக் கொள்ள இவன் தன்னையறியாமல் சிரித்தான்... அவள் அதனைக் கவனிக்காமல் ரெக்கார்ட் நோட்டை எடுத்துக் கொண்டு வேகமாய் நடக்க சரியான ஊர்க்காரி என அவன் மனது சொல்ல இதழ்கள் மேலும் புன்னகையை சிந்தியது..
மிஸ். ஊர்க்காரி நீ செர்க்யூட் லேப்ல வேணா என்னை ஜெயிக்கலாம்.. ஆனால் ப்ரொக்ராமிங்ல என்னை ஜெயிக்க முடியாது.. உனக்கு ப்ரோக்ரிமிங்கே சுத்தமா பிடிக்காதுனு எனக்கு தெரியும்.... நெக்ஸ்ட் லேப்ல உன்னைப் பார்த்துக்குறேன் என மனதினுள் சபதம் எடுத்துக் கொண்டான்.. ஆனால் அங்கேயும் மறுபடி மொக்கை தான் வாங்கப் போகிறான் என்பதை அறியாமல்...
ப்ரொக்ராமிங் லேப் எக்ஸாம்ல இவர்கள் இருவருக்கும் பக்கத்து பக்கத்து கம்ப்யூட்டர்கள் கொடுக்கப்பட்டது... இவளுக்கு வந்த ப்ரொக்ராம் கொஞ்சம் கடினமாக இருந்தது... அதுவும் இல்லாமல் அவள் லேப்பில் அதை செய்து பார்த்தது கூட.கிடையாது.... அது அவுட்புட் எப்படி இருக்கும் என அவள் எவ்வளவு யோசித்தாலும் ஞாபகமே வரவும் இல்லை.. ஐயயோ கிழிஞ்சுது அவுட்புட் தெரியாம எப்படி ப்ராக்ராமை எழுதி அதை கம்ப்யூட்டர்ல என்டர் பண்ணி முடிஞ்சுது... நம்ம இன்னைக்கு அம்பேல் தான்... என்ன செய்யலாம் என கொஞ்ச நேரம் யோசனை செய்து கொண்டு இருந்தாள்..
இவனோ வேகமாய் கம்ப்யூட்டரை தட்டிக் கொண்டு இருக்க அவள் கடுப்பானாள்... அடப்பாவி நான் இன்னும் ப்ரோக்ராமே எழுதல இவன் அதுக்குள்ளே லொட்டு லொட்டுனு தட்ட ஸ்டார்ட் பண்ணிட்டான்.... என யேசித்தவள் டக்கென லாஜிக் தோன்ற ப்ரோக்ராமை எழுதினாள்.. அவளுக்கு அவுட்புட்டும் வந்துவிட்டது.. ஆனால் அது தான் சரியான அவுட்புட்டா என்று இவளுக்கு தெரியவில்லை ( ஏற்கெனவே ஒரு முறை செய்துப் பார்த்தால் தானே அது சரியா என்று தெரிந்து இருக்கும்).... சாரைக் கூப்பிட்டு அவுட்புட்டை காமிச்சு அவர் தப்புனு சொல்லிட்டு போயிட்டா மொக்கை வாங்கின மாதிரி இருக்குமே என யோசனை செய்தவாறே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்..
இங்கோ ஷ்ரவன் சாரைக் கூப்பிட்டு அவுட்புட்டை காண்பிக்க கொஞ்சம் வேற மாதிரி கொண்டு வா அவுட்புட் இன்னும் கொஞ்சம் பக்காவா வரணும் என அவர் சொல்லிவிட்டு திரும்ப "இது தான் சான்ஸ் அவரையே கூப்பிட்டு கேட்டுடுவோம்" என சுமி தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பக்கத்தில் நின்று இருந்த சாரைக் கூப்பிட அவர் அவளுடைய அவுட்புட்டை பார்த்து கரெக்கட்னு சைன் போட்டுவிட்டு போனார்...
"அப்போ இது தான் அவுட்புட்டா இது தெரியாம அவரைக் கூப்பிட பயந்து வேடிக்கை பார்த்துட்டு இருந்துட்டேனே" என அவள் வாய்விட்டே சொல்ல ஷ்ரவனின் காதுகளில் அது விழுந்தது..
அடிப்பாவி அவுட்புட்டே தெரியாம தான் ப்ரோக்ராமை எழுதுனியா என்பது போல் அவளைப் பார்க்க அவள் கீழே குனிந்து கொண்டாள்... இந்த முறையும் அவள் முதலாவதாய் முடித்து வெளியே வர இவன் சார் சொன்ன தவறுகளை சரிசெய்து அவுட்புட் காண்பித்து இரண்டாம் ஆளாய் வெளியே வந்தான்...
ராட்சஸி என்னை தோற்கடிக்கிறதுக்குனே ரெடியா இருக்கா.. ஆனால் உன் கிட்டே தோற்கிறது கூட சுகமா தான் இருக்கு என மனதினில் நினைத்துக் கொண்டான்..
உன்னிடம் தோற்பதற்காகவே
தினம் தினம் சண்டை
போட்டு அந்த தோல்வி தரும்
இன்பத்தை ரசித்து
கொண்டு இருக்கிறேன்...
No comments:
Post a Comment