உதய், "டேய் ராம் நீ மெயில் பார்த்தியா ஆபிஸ் டூர் அரேஜ் பண்ணி இருக்காங்க... இடம் ,கூர்க்னு டிசைட் பண்ணி இருக்காங்க.. நாமளும் போலாமா ?"
ராம், " நீங்க எல்லாம் வந்தா நான் வருவேன்.."
உதய், " அனு வரேனு சொன்னாளாமாடா.. இப்போ சார் வருவீங்க தானே..."
ராம், " நான் ரெடி டா.. வண்டியை கூர்குக்கு விடுறா பசுபதி"
உதய், " சீ நாட்டாமை பட டயலாக்கை நாசம் பண்ணாதடா குரங்கு... என்ன சுமி அமைதியா இருக்க.. நீயும் வர தானே"
சுமி, " எனக்கு அவ்வளவா இன்ட்ரெஸ்ட் இல்லை.. நீங்க போயிட்டு வாங்க.." என சொல்ல ராமும் உதயும் குட்டிக் கரணம் எல்லாம் போட்டு கூர்குக்கு வர சம்மதிக்க வைத்தார்கள்...
கூர்க்கை நோக்கி அவர்கள் பேருந்து மூலமாக செல்ல முடிவெடுத்தார்கள்.. எப்போதும் கோட்டும் சூட்டும் என பார்மல் உடையில் இருப்பவன் டீஷர்ட்டில் வந்தான்.. அதுவும் அவளுக்கு பிடித்த டீஷர்ட் கல்லூரியில் அவன் அந்த டீஷர்ட்டை போடும் போது எல்லாம் அவள் மனது ரெக்கை கட்டி பறக்கும்... இவன் இன்னுமா இந்த டீஷர்ட்டை பத்திரமா வெச்சு இருக்கான் என ஆச்சர்யமாய் அவன் முகத்தைப் பார்த்தாள்... ஆனால் அவனோ ஒரு வெற்றுப் பார்வையை அவள் மீது செலுத்திவிட்டு பஸ்ஸில் ஏறிக் கொண்டான்....
இவள் அமர்ந்து இருந்த சீட்டுக்கு ஒரு சீட்டு தள்ளி எதிர்பக்கமாய் அவன் அமர்ந்தான்.. இவளுக்கு அவனை சைட் அடிக்க அது வசதியாய் அமைந்தது....
பஸ் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் ட்ருத் அன்ட் டேர் கேம் விளையாட ஆரம்பித்தனர்.. அதில் இவளை இவளது காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்ல சொன்னார்கள்..அப்போது ஷ்ரவனின் கண்கள் ஆர்வமாய் அவளை நோக்கியது... முதலில் அந்த கேள்வியை கேட்டு திகைத்தாலும் பின்பு சமாளித்துக் கொண்டு " காதல் இருந்தா தானே அதோட வாழ்க்கையைப் பற்றி சொல்ல முடியும்.. சோ நெக்ஸ்ட் கேள்வி" என்றாள்.. அப்போ உன்னோட க்ரஷைப் பத்தி சொல்லு என கேட்க " க்ரஷ்ம் இல்லை ப்ரஷ்ம் இல்லை.. எனக்கு டயர்டா இருக்கு நான் தூங்கப் போறேன்" என சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டாள்... " நீ சரியான சாமியார் டி" என சொல்லிவிட்டு மற்றவர்கள் விளையாட்டை தொடர்ந்து விளையாட இவளோ மனதுக்குள்
"நான் சாமியாரா போங்கடி... நான் ஷ்ரவனோட பக்தையா இருந்தவள்" என மனதினுள் நினைத்தவள் " இந்த காதலை யாரு கிட்டேயும் சொல்ல முடியாத படி மனசுலேயே மறைச்சு வைச்சு இருக்குற நிலைமைக்கு ஆளாக்கிட்டியே கடவுளே... அதுசரி அந்த காதலுக்கு உரிமையானவன் கிட்டேயே சொல்லாத போது எப்படி மத்தவங்க கிட்டே சொல்ல முடியும்" என விரக்தியாய் சிரித்தவள் தன் காதல் வாழ்க்கையைப் பற்றி நினைக்கத் துவங்கினாள்...
💐💐💐💐💐💐💐
இந்த சார் என்ன அந்த ஷ்ரவன் கிட்டே பேசிட்டு இருக்கார் என இரண்டு பென்ச் தள்ளி அமர்ந்து இருந்த ஷ்ரவனின் அருகில் நின்று பேசிக் கொண்டு இருந்த சாரை இவளும் கவனிக்க ஆரம்பித்தாள்... அவர் எப்படி செய்வது என விளக்கம் கொடுக்க இவளும் கேட்டு கொண்டு இருந்தாள்.. அவர் பேசி முடிக்க இவள் ஏதேச்சையாக திரும்பும் போது அவனும் திரும்பினான்...
அவள் விழிகளோடு அவனது விழிகள் மோத சில கணம் தன்னை மறந்து அந்த விழியை உற்றுப் பார்த்தாள்..
என்னை அறியாமலேயே
என் நெஞ்சில்
துளைப் போட்டது
உன் துப்பாக்கி கண்கள்...
ஏதோ புதிதாக ஒன்றை அவள் விழிகள் அவளுக்கு காட்டியது.... அதில் அவன் முகம் தெரியவில்லை.... அவன் விழிகள் தெரியவில்லை... ஆனால் என்னவென்று சொல்ல தெரியாத ஒன்றை அவன் விழிகளில் கண்டாள்.. திடீரென சுயநினைவுக்கு வந்தவள்.. படக்கென்று தலையைத் திருப்பிக் கொண்டாள்..
அவள் அதற்குப் பிறகு அவன் விழிகளை சந்திக்க முடியாமல் திணறினாள்... எப்போதும் லொட லொடவென பேசிக் கொண்டு இருப்பவள் அவன் கடந்து செல்லும் போது மட்டும் தன்னையறியாமல் அமைதி ஆனாள்... அவன் பார்த்தாலே தலையை குனிந்தாள்..
குழந்தையாக இருந்த என்னை
பெண்ணாக உணர
செய்தது நீ தானே...
டிவியில் ஷ்ரவன் என்ற பெயர் வந்தால் அவள் மனது ஷ்ரவனை ஓடிச் சென்றது.. ஆனால் அவள் அதெல்லாம் ஏன் என்று யோசிக்கவில்லை.. ஷ்ரவனைப் பிடித்து திட்டி கொண்டு இருந்தாள்.. டேய் ஷ்ரவன் உன்னாலே தான் டா நான் நார்மலா இருக்க முடியல என அமைதியாய் யோசித்துக் கொண்டு இருந்த சுமியின் அருகே வந்து விஷ்வா அமர்ந்தான்..
" என்ன சுமி உன் வாலுத்தனத்தை எல்லாம் சுருட்டி வெச்சுட்டு அமைதியா இருக்கே..என்ன ஆச்சு உனக்கு " என விஷ்வா கேட்க "அதெல்லாம் ஒன்னும் இல்லபா.. சும்மா அமைதியா இருந்தா எப்படி இருக்கும்னு ட்ரை பண்ணி பார்த்தேன்.." என்றாள்...
" ஓ அப்படிங்களா சரிங்க மேடம்" என விஷ்வா சிரிக்க " இவன் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் எவ்வளவு ஹேப்பியா சிரிக்கிறான்.. இவன் வீட்டுல பாசம்னு யாருமே காட்டினதே இல்லை.. ஊருக்கு போகவே மாட்டான் ஹாஸ்டலிலே அடைஞ்சு கிடக்கிறான்.. ஆனால் அவன் வெளியிலே யாரு கிட்டேயும் தன்னோட கஷ்டத்தை சொல்லி பரிதாபத்தை தேடிக்கல.. என் கிட்டே மட்டும் தான் நம்பி சொன்னான்.. அந்த நம்பிக்கையை காப்பாத்தி இவனுக்கு ஆதரவா ஒரு உறவா நாம இறுதி வரைக்கும் இருக்கனும்" என மனதினுள் நினைத்துக் கொண்டு இருக்க " என்ன பகல் கனவு காண்ற" என்ற விஷ்வாவின் குரலில் இயல்புக்கு திரும்பினாள்...
சுமி" கனவுலாம் காணல.. ஆமாம் ஷ்ரவன் உன்னோட ரூம் மேட் தானே..."
" ஆமாம் என் ரூம் மேட் தான் சுமி... ஏன் கேக்குற"
" இல்லை மத்த ரூம் மேட்ஸ் மாதிரி இவனும் உனக்கு தொல்லை தரானா.. அப்படி இருந்தா சொல்லு தூக்கிறலாம்..
" அப்படி எல்லாம் இல்லை சுமி.. ரொம்ப நல்ல பையன்.. எந்த தொந்தரவும் தர மாட்டான்.. அவன் உண்டு அவன் வேலை உண்டுனு இருப்பான்"
" ஓ நல்லது.. ஆமாம் பையன் எந்த ஊரு. அவனுக்கு பெஸ்ட் ப்ரண்ட்ஸ்னு யாரும் இல்லையா"
" சேலம் தான்.... இருக்கான் இருக்கான் ஏ செக்ஷன்ல ஆனந்த்னு ஒரு பையன்..."
" ஓ சரி சரி வா க்ளாஸ்க்கு போலாம் ப்ரீ பீரியெட் முடிஞ்சுடுச்சு"
" ஓகே சுமி மா".. என்று வகுப்பிற்குள் நுழைந்தார்கள்...
முதல் பென்ச்சில் உட்கார்ந்து க்ளாஸை கவனித்துக் கொண்டு இருந்த அவள் ஏதோ தோன்ற திடீரென திரும்பினாள் அவளுக்கு ஷ்ரவனின் உருவம் தெரிய டக்கென்று முகத்தை திரும்பிக் கொண்டாள்..
நிலை கொள்ளாமல்
தான் தவிக்கிறேன்
நிலை கொண்டு
உன் பார்வை
என் மீது விழுந்ததால்...
அது என்ன நம்ம திரும்புனாலே முதலிலே அவன் முகம் தான் தெரியுது.. ஒரு வேளை அவனும் நம்மள சைட் அடிக்கிறானோ.. சீசீ வாய்ப்பே இல்லை.. அந்த உராங் உடான் ஆவது பொண்ணுங்களை பார்க்குறதாவது.. இட் இஸ் இம்பாஸிபில்... என யோசனை செய்துக் கொண்டு இருந்தவளை பார்த்த விஷ்வா ' சுமி சாப்பாட்டை திறந்து முப்பது நிமிஷம் ஆச்சு இன்னும் ஒரு வாய் கூட உள்ளே போல அப்படி என்ன யோசனை" என கேட்க
" இதெல்லாம் ஒன்னு இல்லை விஷீ.. ஆமாம் அந்த ஷ்ரவன் இருக்கானே பொண்ணுங்க கூட பேசி நான் பார்த்ததே இல்லை.. அவன் ஏன் எப்பவுமே ரொம்ப டெரராவே இருக்கான்"
" அதுவா அவனுக்கு பொண்ணுங்கனாலே பிடிக்காது.. சின்ன வயசிலே ஒரு பொண்ணு கிட்டே சண்டை போட்டு அந்த பொண்ணை அடிச்சேபுட்டான்.. அந்த பொண்ணு மேலே இருந்த காண்டுல ஒட்டு மொத்த பொண்ணுங்க கிட்டேயும் பேசுறதையே விட்டுட்டான்"
" என்னன்னா கேட்கவே காமெடியா இருக்கு... ஒரு பொண்ணு மேலே இருக்க கோபத்துனாலே எல்லா பொண்ணுங்க மேலேயும் கோபப்படுவானா.. ரொம்ப சில்லியா இருக்கு..."
" அவன் அப்படி தான்மா ஒன் டைம் கோபப்பட்டு ஒரு டிசிஷன் எடுத்தான்னு வெச்சிக்கோ.. அதை கடைசிவரை யாருக்காகவும் மாத்திக்க மாட்டேன்... ஆமாம் மேடம் இப்போலாம் அடிக்கடி ஷ்ரவனைப் பத்தி கேக்குறீங்களே ஏனு தெரிஞ்சுக்கலாமா"
" சும்மா தானா" என வேகமாய் தலையை குனிந்து கொண்டாள்.. " சும்மா னா சரி தான்" என்று அவனும் அவளை கவனித்தவாறே உண்டான்...
அனிதா இந்த கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் அழகா இருக்குல எனக்கு பிடிச்ச லாவண்டர் கலர்..
ரொம்ப அழகா இருக்குடி என பேசிக் கொண்டே இரண்டு கம்ப்யூட்டர் தள்ளி அமர்ந்து இருந்த ஷ்ரவனைப் பார்க்க அவன் டொக் டொக்கு என கம்ப்யூட்டரில் மும்முரமாய் தட்டிக் கொண்டு இருந்தான்..
என்னமோ பைனல் எக்ஸாம் மாதிரி லேப் பண்ணிட்டு இருக்கான் பாரு.... ரொம்ப தான் டீ டிக்காஷனோட இருக்கான் இவன்.. என நினைத்துக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் அமர்ந்து இருந்த விஷ்வா " சுமி அந்த டீஷர்ட் இப்போ தான் புதுசா வாங்குனேன்.. ஆனால் எனக்கு முன்னாடியே அந்த தடியன் எடுத்து போட்டுட்டான்" என ராஜைப் பார்த்துக் குறைபட்டுக் கொண்டு இருந்தான்...
"அடேய் இதுக்கு போய் ஏன் ஃபீல் பண்ற.. முதலிலே உன் பொருளை உன் கிட்டே கேட்டு மத்தவங்க எடுக்கனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிடு"
" ஹ்ம்ம் சரி சுமி.. அப்பா இந்த தடவை புது டீஷர்ட் நிறைய எடுத்துக் கொடுத்தாரு"
" ஹ்ம்ம் பார்த்தேனே எல்லோ கலர் டீஷர்ட் அந்த வெயிட் கலர் டீஷர்ட் டிசைன் செம" என பேசிக் கொண்டே லேப்பை செய்து முடித்தாள்..
அடுத்து ஒரு வாரம் கழித்து அவளுக்கு பிடித்த லாவண்டர் கலரில் ஒரு டீஷர்ட் போட்டு வந்தான் ஷ்ரவன்.. " வாவ் செமயா இருக்கான்... டேய் உராங் உடான் எப்போ பார்த்தாலும் ஃபார்மல்ஸ்லயே பார்த்துட்டு உன்னை டீஷர்ட்ல பார்க்கும் போது செம மாஸா இருக்கே... அதும் லாவண்டர் கலர் ஷர்ட் உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு" என மனதுக்குள் பாராட்டி கொண்டாள்...
அடுத்தடுத்து வந்த தினங்களில் அவன் மஞ்சள் கலர் டீஷர்ட், வெள்ளை கலரில் அதே மாதிரி டிசைன் கொண்ட டீஷர்ட் என போட்டு வர அட இது நம்ம விஷ்வா கிட்டே பேசிட்டு இருந்த ஷர்ட்ஸ் மாதிரியே போடுறானே... ஒரு வேளை நம்ம பேசுறதை கவனிச்சு இருப்பானோ.. சீ சீ கோ இன்ஸிடன்டா இருக்கும்.. இதைப் போய் இவ்ளோ யோசிக்குறேனே.. போய் வேற வேலையைப் பாரு டி என மனதுக்குள் பேசிக் கொண்டாள்...
ப்ரீ அவர்ல எல்லோரும் க்ளாஸை விட்டு வெளியே சென்றுவிட அவள் தனக்கு தூக்கம் வருகிறது நீங்க போங்கடி நான் படுத்துக்குறேன் என சொல்லிவிட்டு பென்ச்சில் படுத்து தூங்கிவிட்டாள்.. தூங்கியவள் ஏதோ தோன்ற கண்ணைத் திறந்து பார்க்க அதில் ஷ்ரவனின் உருவம் தெரிய இவனுக்கு இதே வேலையை போச்சு கனவில கூட நிம்மதியா விட மாட்டேங்குறான்.. எப்போ பார்த்தாலும் கனவுல வந்து டார்ச்சர் பண்றான் என நினைத்தவள் விருட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்...
அவள் பார்த்தது ஷ்ரவனை தான் இரண்டு பென்ச் தள்ளி தான் அவன் அமர்ந்து இருக்கிறான்.. இது கனவில்லை நிஜம் தான் என உணர்ந்தவள் சட்டென எழுந்து நல்ல பிள்ளையாய் உட்கார்ந்து கொண்டாள்.. அவளின் மனம் அப்போது தான் கேள்வி கேட்டது இப்போலாம் ஷ்ரவன் ஏன் என் கனவில வரான்.. எங்கே பார்த்தாலும் அவன் உருவம் தெரியுது.. அவனைப் பார்த்து அதிகமா யோசிக்கிறனே ஏன்.. என அவளின் எல்லா கேள்விக்கும் பதிலாய் காதல் என்ற வார்த்தை தோன்ற அவளின் மனதில் இதம் பரவியது..
என்னை அறியாமல்
என் கண்கள் உன்னையே
ரசிக்கும் போது தான்
அறிந்து கொண்டேன்
என் காதலின் ஆழத்தை...
ஆனால் அவளால் அந்த இதத்தை முழுதாய் ரசிக்க முடியவில்லை.. இதயத்தில் பல கேள்விகள் யோசனைகள் தோன்ற குழம்பினாள்... "இந்த ஷ்ரவன்க்கு தான் பொண்ணுங்கனாலே பிடிக்காதே.. நம்மளை எப்படி லவ் பண்ணுவான்.. நம்ம மனசுல இருக்கிற காதல் வெளியிலே தெரிஞ்சுட கூடாது... அவன் லவ் பண்ணலனா என்ன என் மனசில இருக்கிற இந்த காதல் ஒன்னும் அழிஞ்சு போகாது.. ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் அவன் கிட்டே என் காதலை ஏத்துக்கோனு சொல்லி ஒரு சிம்பதிய க்ரியேட் பண்ணிலாம் லவ் வர வெச்சிடக் கூடாது.. ஏன்னா பரிதாபப்பட்டு வர காதல் இதயத்தையே பரிதாப நிலைக்கு கொண்டு போய் விட்டுடும்... அவனுக்கா தான் என் மேலே லவ் தோணனும்.. ஆனால் அதுக்காகலாம் அவனுக்கு பிடிக்கனும்னு சொல்லி என் கேரக்டரை நான் சேன்ஜ் பண்ணிக்க மாட்டேன்.... எப்பவும் போல இயல்பா இருக்கிற என்னை தான் அவனுக்குப் பிடிக்கனும் என மனதினுள் நினைத்துக் கொண்டாள்.. அதற்குப் பின்பு வந்த நாட்களில் அவளே தன்னையறியாமல் அவன் முன்பு புது சுமியாக மாறிப் போனாள்... அவளை அறியாமலேயே வெட்கம் வந்தது.. அவனைப் பார்க்க முடியாமல் தயக்கம் அவளை கட்டிப் போட்டது.. அவளுக்குள் காதல் தோன்றிய அந்த அழகான நொடியில் இருந்து அவளை சுற்றி எல்லாமே புதிதாய் தெரிவதுப் போல் இருந்தது.. முசுடான உராங் உடான் சிரிப்பதைப் போல் இருந்தது.. அவன் செய்யும் ஒவ்வொரு செய்கையும் தனக்காக என அவள் உள்மனம் சொல்லியது... அவன் தன்னை கவனிப்பது போல் தோன்றியது... மனம் லேசாகிப் பறப்பதைப் போல் தோன்றியது... இப்படி அவள் மனம் நினைத்துக் கொண்டு இருக்க மூளையோ எச்சரித்தது.. "அடியே சுமி கொஞ்சமாவது நிகழ்காலத்துக்கு வாடி இது எல்லாமே உன் பிரம்மை அவன்லாம் உன்னைப் பார்க்க கூட மாட்டான்.. கொஞ்சம் உன் கற்பனை திறமையை அடக்கி வை" என மூளை சொல்ல அதை சமத்தாக கேட்டுக் கொண்டாள்... அவள் மனதினில் முளைத்த காதல் யாருக்கும் தெரியாமல் வேகமாக வளர்ந்து கொண்டே சென்றது...
இந்த காதலில் எல்லாம்
நான் தொலைய மாட்டேன்
என்று கர்வமாக இருந்த
போது தான் நீ வந்து
தொலைத்தாய் என் மனதினுள்...
No comments:
Post a Comment