This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 6 April 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 20


Click here to get all parts

ஃகன்ரோல் யுவர் ஷெல்ப் விஜய்.கன்ரோல்.... ஃகன்ரோல்.....அமைதியா இரு கோபப்படதே என தன்னை தானே அமைதி படித்து கொண்டுருந்த விஜயிடம் சதிஷ் வந்தான்.....


விஜய்......


எப்படி எப்படி சதிஷ் இவ்ளோ பேர் வந்தாங்க நான் தான் சொண்னேல்லடா அவனுங்களை வாஜ் பண்ணுடான்னு இப்போ பார் நம்மளோட கேர்லஸ் காரணம்மா எத்தனை பேர் துன்பப்படுறாங்கன்னு என கத்த....


இல்ல விஜய் இப்ப வரைக்கும் அவனுங்க ஆளுங்க எல்லாரும் நம்ம ஆட்களோட கண் பார்வ்வையில் தான் இருக்காங்க.இப்ப வந்தவங்க அதர் ஸ்டேட் ஆளுங்க மாதிரி தெரியுது...


நமக்கு வந்த மணல் லாரியை மடக்கி டிரைவரை அடுச்சுப்போட்டுட்டு லாரியை முள் பத்தைக்குள் நிப்பாட்டிட்டு இவனுங்க அந்த லாரி நம்பர்ரோட எண்னை இதுக்கு மாத்திட்டு வந்துருக்கானுங்க இப்போ அவனுங்க போன லாரியை போலிஸ் பைப்பாஸ்ல பார்த்துருக்காங்க ஆனா யாரும் அதுல்ல இல்லை....


சரி அது முக்கியம் மில்லை இப்போ ஹாஸ் பெட்டல் போலாம் எனவும் அனைவரும் கிளம்பினர்.ஹாஸ் பெட்டல் போனதும் டாக்டரை சந்தித்தான்."டாக்டர் இவங்க எல்லாரும் பெஸ்ட் டீரிட்மென்ட் கொடுங்க எங்க இருந்தாலும் டாக்டர்ஸ்ஸ வரவைங்க எவ்ளோ வேனாலும் செலவாகட்டும் ஆனா ஒருத்தருக்கும் எதுவும் ஆயிடக்கூடாது என மன்றாட....


டோன்ட் வெர்ரி மிஸ்டர் விஜய்.அது எங்களோட பொறுப்பு என்றார்...


பிறகு போலிஸ்,ப்ரஸ் ,அடிப்பட்டவர்களின் உறவுகள் என ஹாஸ்பெட்டல் ஆட்களால் நிரம்பி இருந்தது.அனைவரையும் சதிஷ் தான் சமாளித்து கொண்டுருந்தான்....


இரவு முழுதும் விஜய் கொட்ட கொட்ட முழுத்துருந்தான்.சதிஷ் தான் அவனிடம்"விஜய் நீ வீட்டுக்கு போடா நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்...


ம்கும் நான் போல இருக்கேன்.என்னால்ல தான் இவங்களுக்கு இப்படி ஒரு நிலம்மை என்றவனின் குரலில் வானளவு வருத்தம்...


சரியாயிடுய் விஜய்."விஜய் சாப்பிட எதாவது வாங்கிட்டு வரட்டும்மா நீ மதியம் சாப்பிட்டது....


இல்லைடா எனக்கு வேணாம்...


இந்த நேரம் பார்த்து கணேஷூம் மிதுலாவும் முக்கிய உறவு திருமணம் என்று போய் விட்டுருந்தனர்.மிதுலா இருந்துருந்தாள் விஜய்யை கொஞ்சம் தேற்றி இருப்பார்.....


நான் மிதுலா ஆண்ட்டியை வர வைக்கட்டும்மா."என்று கேட்டதற்க்கு"அவங்களயும் ஏன் டென்ஷன் ஆக்கனும் என சொல்லி விட்டான்.....


"சரிடா கார்குல்ல உட்கார் இல்லையின்னா ஹாஸ் பெட்டலுக்குள் வந்து உட்கார் பனி கொட்டுதுடா உடம்புக்கு ஏதும் வந்துட போகுது விஜய்......


அவனை கசப்புடன் பார்த்தான்."அவங்களுக்கு வந்ததை விடவ்வா வந்துட போது.உடம்பு கையெல்லாம் ரத்தம் கழுவ திறன் இன்றி அமர்ந்துருந்தான். அதைப்பார்க்க பார்க்க கோபவெறி எரிமலையாய் வெடித்து சிதறியது. இருந்தும் கோபத்தை அடக்கி கொண்டான்." புத்தி சாலியின் மிகப்பெரிய பலவீனம் கோபம் என்பது விஜய்யின் எண்ணம்.அதனால் நிதானமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கனும். எதிரி எப்படிபட்டவனு நிர்ணனைக்கனும்.அவன மாதிரி இப்படி கீழ் தரமான வேலைகளை செய்யக்கூடாது.இந்த ஒரு விஷயத்துல என்னை மிரட்டிருக்கான்.இனி நான் ஒவ்வொரு அடியிலும் மிரட்டனும். அவனை நிர்முலம்மா ஆக்கனும். அவனே ஏண்டா இவன் வழியில் குறுக்கட்டம்முனும் நினைச்சு நொந்து,நடுங்கி ஒதுங்கி போனும் என தனக்கு தானே சில அறிவுரைகளை சொல்லிக்கொண்டு தன்னையே அமைதி படுத்திக்கொண்டிருந்தான்...


விஜய் சொல்றதை கேள் பனி கொட்டுதுடா போய் கார்க்குள்ள உட்கார் பனி விழுகுது பார் என்று அவனை வற்புறுத்தி காருக்குள் அமர வைத்தான்....


மணி இரவு இரண்டு மணி பனி மழைப்போல் தூவிக்கொண்டிருந்தது. "இரு விஜய் போய் அவங்க எல்லாரையும் பார்த்துட்டு வரேன் என சதிஷ் ஹாஸ் பெட்டலுக்குள் போனான்....


இவன் இவர்களை நினைத்து இவன் தூங்காமல் இருக்க சாரலோ விஜய்யை நினைத்து கவலை கொண்டு தூக்கமில்லாமல் உலாத்திக்கொண்டு இருந்தாள்." என்ன ப்ரச்சனை என தெரியல்ல,போன் பண்ணி கேட்கலாம்னு நினைத்தாள் சர்மியின் டப்பா செல்லில் தான் அவனது நம்பரை வாங்கி வைத்தருந்தாள். இந்த நேரம் பார்த்து அதுவும் மக்கர் பண்ணியது. அவன் மீது இருந்த கோபத்தாள் அவனது நம்பரை வாங்க வில்லை.அந்த கொடும் கோபத்தை தான்டியும் அவன் முகத்தில் அத்தனைப்பேருக்கும் தன்னால் தான் இந்நிலை என்ற அவனது வருத்தம் அவர்களுடம் பேசிக்கொண்டுருந்தாலும் அவன் முகத்தில் தெரிந்தது. அது ஏனோ அவளை வாட்டியது. அவன் மீது கோபத்தையும் எரிச்சலையும் காட்டத்தான் நினைக்கிறாள் ஆனால் அதையும் மீறி அவன் முகத்தில் சிறு வருத்ததையும் கண்டாள் கூட காதலையும் நேசத்தையும் அவளையறியாமலையே வழிய விட்டு விடுகிறாள்.அது விஜய்யை இவளுடன் அதிகம் ஒட்ட வைக்கிறது என்பது இன்று வரை தெரியாது சாரலுக்கே....


ஒரு வேளை நியூஸ் பார்த்திருந்தாள் கூட என்ன என தெரிந்துருக்கும் ஆனால் இந்த பதட்டத்தில் எங்க டீவியை போட்டு பார்ப்பது.....


காலையில் விடியல் வந்த உடனே அவர்கள் ஒவ்வொருவரையும் பார்த்தான். ஆறுதல் வார்த்தைகளையும் தேறுதல் வார்த்தைகளையும் சொண்ணான். பிறகு சதிஷிடம்.."நம்ம ஹோட்டல்ல இருந்து எல்லாருக்கும், சாப்பாடு வரை வை இவங்க எல்லாரும் குணமான பிறகு தான் டிஸ்டார்ஜ் ஆக்கனும் அது வரைக்கும் ஒவ்வொரு தேவையும் என்னன்னு பார்த்து செய். "அவங்க குடும்பத்துக்கும் சேர்த்து இவங்களை நம்பித்தான் குடும்பம் இருக்கு அவங்க தேவையும் என்னதுன்னு தெரிஞ்சுக்க சரியா.நம்மாளால உடம்புல்ல காயம் வந்துடுச்சு மனசுலையும் வந்துடக்கூடாது ஓ கே... 


காலையிலை சீக்கரம்மே ஹாஸ்பெட்டல் கிளம்பினாள். "என்னக்கா இவ்ளோ சீக்கிரம்மே கிளம்பிட்ட...


"என்னதுன்னு தெரியலை மனசை போட்டு என்னம்மோ செய்யுது.நான் அப்படியே கோவிலுக்கு போயிட்டு ஹாஸ் பெட்டல் போயிறேன் சரியா டாடா என்றவள் கிளம்பி விட்டாள்....


நீயூஸ் கேள்வி பட்டு காலையிலையே தங்கள் சக தொழில் நண்பர்கள் அவனை தேடி வந்துருந்தனர்.நாங்க எந்த உதவியும் செய்ம காத்துருக்கோம் என சொண்ணவர்களை நன்றி சொல்லி அனுப்பி வைத்தான். சில அரசியல் வாதிகளும் மறைமுகமாக உதவ காத்துருக்கிறோம் என்றனர். அவர்களுக்கும் இது விஜய்,வீ ஆர் சம்மந்தப்பட்ட மோதலே என நினைத்தனர். சிலர் விஜய்யின் நட்பையும் வீ ஆரின் மீதான கோபத்தையும் இதில் பயன் படுத்திக்கலாம் என நினைத்தனர். ஆனால் இதில் எனக்கு சம்மந்தம் இல்லாதவர்களுக்கு வந்த இந்நிலை இனி யாருக்கும் வரக்கூடாது எண்ணியவன் அனைவரையும் நாசுக்காக "தேவைப்பட்டால் சொல்லி அனுப்புறோம் என அனுப்பி வைத்தான்.....


சில நியூஸ் ஆட்களும் வந்து விஜய்யை சந்திக்க முயன்றனர்.ஆனால் யாரையும் கிட்ட நெருங்க விடாமல் செய்துருந்தான் சதிஷ்...


அது சாரல் வேளைப்பார்க்கும் ஹாஸ்பெட்டல் தான். அவனைப்பத்தி நினைக்கவே கூடாது என எண்ணுவாள் ஆனால் அவனை தவிர எந்த எண்ணம்மும் வராது. அவனைத்தான் நினைத்துருப்பாள். அப்படியே தான் ஹாஸ்பெட்டலுக்கு வந்தாள்.....


விஜய் காபி....


வேணாம்....


டீ....


வேணாம்.....


வேற ஷர்ட் போட்டுக்கோ.... 


வேணாம்......


சாப்பாடு......


வேணாம்.......


சாரல்.......


வேணாம்.. 


என்றவனை பார்த்து சிரித்தான் சதிஷ்.அவனும் பேச்சு வேகத்துல்ல சொல்லி விட்டதை எண்ணி மெலிதாய் இதழ்களை விரித்தான்.விஜய் தன்னால் தான் இவங்களுக்கு இந்த நிலமை என எண்ணி கில்டியாக பீல் பண்ண அவனை இலகுவாக்க சின்னதாய் ஒரு விளையாட்டு."சாரல் என்ற பெயரைத்தவிர எந்த நபராலும் அவனை இலகுவாக்கிட முடியும்மா என்ன......


சரி இரு நான் உனக்கு வேற ஷர்ட்,சாப்பாடல்லாம் வாங்கிட்டு வரேன் என்றவன் போய் விட்டான்......


அவன் போக அப்போ தான் நுழைந்தாள் சாரல்.ஹாஸ் பெட்டல் ஒரே கூட்டம்மாக இருந்தது என்னதுன்னு விசாரித்தாள் இன்னது என பதில் வர.விஜய் சம்மதபட்டது என தெரிய வந்ததும் பயம் நெஞ்சில் ஏறியது.இவ்ளோ பெரிய ப்ரச்சனை பண்ணும் அளவு அவனுக்கு எதிரியா.அப்போ அவனது கெப்பா சிட்டி எவ்வளவு பெரியதா இருக்கும்.இது வரை அதைப்பற்றி அவள் நினைக்கவேவில்லை.நான் தான் அவனை என்பின்னாடியே சுத்துனது நால குறைச்சு எடைப்போட்டுட்டனா என்றவளுக்கு அங்கு அடிப்பட்டு கிடந்தவங்களை பார்க்கும் பொழுது பயத்தில் உடல் சில்லிட்டது.....


அப்போ அவன் இங்க தானே இருப்பான் என நினைத்தவள் வெளியே வந்து பார்த்தாள்.விஜய்யை தன் கண்களை உருட்டி தேடி பார்த்தாள் அவன் காருக்குள் அமர்ந்துருந்ததாள்.அவளால் பார்க்க முடியவில்லை.ஆனால் சில போலிஸ் நேற்று இரவு அவனுடன்,பார்த்த ஆட்கள் எல்லாரும் இல்லை ஆனால் பத்து பேர் இருந்தனர்....


இவனுங்கள விட்டுட்டு வீட்டுக்கு ஏதும் போயிருப்பான்.இந்த"தாமரை அக்காக்கூட சொல்லலை.அப்போ தான் நினைவு வந்தது.இன்னைக்கு இருந்து அவங்களுக்கு பகல் நேர வேலை என்பதே.இப்போ லீவ் யாருக்கும் கொடுக்கவில்லை.இத்தனை பேர் அட்மிட் ஆகிருந்ததாள் லீவில் போன அத்தனைப்பேரும் வரவைக்கப்பட்டுருந்தனர்....


வேளை அதிகம் என்பதாள் அவளை அழைத்தனர்.மனம் விஜய்யை சுத்தியே இருந்தாலும் அவனை எப்படியாவது பார்த்துடனும் என நினைத்துக்கொண்டாள்.....


சதிஷ் வந்தான்.விஜய் இந்த இதை மாத்திக்க அப்பறம் இதை சாப்பிடு என்றான்.சதிஷின் உடைகளும் ரத்தம்மாய் இருந்ததாள்.வேற உடை மாத்தி வந்துருந்தான்.


"விஜய் எனக்கு எதுவும் வேணாம் நீ எல்லாத்தையும் எடுத்துட்டு போ.."..


"போடா இவனே நீ இப்படி உட்காந்துருந்தாள் எல்லாம் சரியா ஆயிடும்மா.ஆனால்."அந்த ரத்தகறைகளை பார்க்க பார்க்கதானே அவனுள் எதையும் எவனையும் விடாதே என்ற எண்ணம் அந்த கரையைப்போல் அழுத்தமாய் பதிந்துள்ளது.....


சொண்ணக்கேளுடா இதை மாத்திக்க.....


விஜய் அப்படியே அசையாமல் அமர்ந்துருந்தான்."இரு யார் சொண்ண நீ கேட்பேன்னு எனக்கு தெரியும்" என்றவன் ஹாஸ் பெட்டலுக்குள் நுளைந்தான்.....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.