This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday 6 April 2019

Uma maheshwari's இணைந்து வாழ்வோம் (லிவ் இன்) 4


Click here to get all parts

ஓங்கிய அவளது கரத்தை தன் கரம் கொண்டு கீழே இறக்கினான்... அவனது இந்த செயல் அவளுக்குள் கோபத்தை உண்டு பண்ண அவள் முகம் கோபச் சிவப்பை பூசிக் கொண்டது..


" ஹே ஹவ் டேர் யூ.. ஹவ் கேன் யூ டச் மீ.." என்று சீற ஆரம்பித்தாள்..


" calm down first... நாம கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா?" என்று நிதானமாக அவன் கேட்க இவளுக்குள் கோபத் தீ மடமடவென பற்றிக் கொண்டது.. எவ்வளவு சாவகாசமா பேசுறான் பாரு... திமிரு பிடிச்சவன் என மனதினுள் கருவிக் கொண்டே பேச ஆரம்பித்தாள்..


"ஹலோ எக்ஸ்கியூஸ் மீ.. புதுசா பார்க்குற பொண்ணு கிட்டே இப்படி தான் பேசுவியா? பிஹேவ் பண்ணுவியா? மூஞ்சைப் பார்த்தா அமுல் பேபி மாதிரி தான் இருக்கு.. ஆனால் நீ  பேசுறதை பார்த்தா தான் தெரியுது அமுல் பேபியவே நீ  கரெக்ட் பண்ணிடுவனு... "


" ஹலோ நான் ஒன்னும் புதுசா பார்த்த பொண்ணு கிட்டே பேசல.. ஏற்கெனவே பார்த்த பொண்ணு கிட்டே தான் பேசுறேன்.. உன் பஞ்ச் டயலாக்  கேட்க சகிக்கல.. வேற ஏதாவது நல்லா ரைமிங்கா ட்ரை பண்ணு... " 


அவள் குழப்பமாகி நாம இன்னைக்கு தான் சென்னைக்கு வந்தோம் அவன் எப்படி முன்னாடியே நம்மள பார்த்து இருப்பான் என யோசித்தபடி  " எங்கே என்னை பார்த்தீங்க..?" என்றாள்..


" நீ  நேத்து காலையில கீர்த்தி வீட்டைத் தேடி சுத்திட்டு இருந்தே இல்லையா அப்போ தான் நான் உன்னைப் பார்த்தேன்.." என்ற அவனது பதிலில் குழப்பம் தெளிந்து சிறிய புன்னகையுடன் பேசத் தொடங்கினாள்...


" ஓ அங்க தான் உங்க வீடு இருக்குதா?.. கீர்த்தி உங்களோட ப்ரெண்டா.. அவள் பேரை எப்படித் தெரியும்..  "


" ம் முதலிலே இருந்தது  ஆனால் இப்போ இல்லை.. என் ப்ரெண்ட் அசோக்னு ஒருத்தன் கூட  தான்  அடையார் கெஸ்ட் அவுஸ்ல தங்கி இருந்தேன்..   இன்னைக்கு காலையில அவனோட  குடும்பம் சென்னைக்கு   ஷிப்ட் ஆயிட்டாங்க... சோ புது வீட்டை பார்த்து செட் பண்ணிட்டு இங்கே  வந்து என்னோட திங்க்ஸ் எடுக்கலாம்னு வந்த அப்போ தான்  உன்னைப் பார்த்தேன்.. சரி கீர்த்தி ப்ரெண்ட் ஆச்சே பாவம் ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சா இப்படி கோபப்படுற.... ஒன் மினிட் நான் கீர்த்திக்கு போன் பண்ணி தரேன்.. நீ அவள் கிட்டே பேசிட்டு டிசைட் பண்ணு.. நாம உட்கார்ந்து பேசலாமா இல்லை வேணாமானு.." என சொல்லியவன் போனை எடுத்து கீர்த்தியுடன் பேசிவிட்டு அவளிடம் கொடுத்தான்.. 


எல்லா விவரத்தையும் கீர்த்தியிடம் சொன்னாள் லிவிங் ரிலேஷன்ஷிப் என்ற ஒற்றை வார்த்தையை தவிர்த்து ஒரே வீட்டில் இருக்க நம்பிக்கையானவனா என்றே கேட்டாள்..


அதைக் கேட்ட கீர்த்தி " செம டி... நானே இப்போ உனக்கு ஆன்லைன்ல தான் வீடு பார்த்துட்டு இருந்தேன்.. அதுக்குள்ள உனக்கு வீடு கிடைச்சுருச்சு.. நீ அவனை முழுசா நம்பலாம்.. he is a gentle man. actually எனக்கு அவனை ரொம்ப பிடிச்சு போனதுனாலே ப்ரோபஸ் பண்ணிட்டேன்.. பட் அவன் வேணாம்னு genuineஆ சொல்லிட்டு எப்பவும் போல என் கிட்டே ப்ரெண்ட்லியா பேசுனான்.. நீ தனியா வீடு எடுத்து தங்குறது விட அவன் கூடவே தங்குறது தான் பெஸ்ட் " என்றாள் கீர்த்தி..


அதைக் கேட்டு இவளது நெற்றி சுருங்கி புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டது தான் யோசிக்கிறேன் என்பதைக் காட்ட.. " தனியா ரூம் எடுத்து தங்கினா அதுக்கே நாம 15,000 செலவு பண்றா மாதிரி ஆகும்.. மீதி 5000 வெச்சு நாம நினைச்சது எதுவும் பண்ண முடியாது.. என் சமையலை நானே சாப்பிட்டா செத்து போயிடுவேன்... டெய்லி ஆர்டர் பண்ணி சாப்பிட , ரெண்ட்ல இருந்து மிச்சம் பிடிச்ச பணத்தை யூஸ் பண்ணிக்கலாம்..  இவனும் நல்ல பையன்னு தான் கீர்த்தி சொல்றா... ஓ.கே நமக்கும் தனியா இருக்குறது கஷ்டமா தான் இருக்கும்.. ஒரு ப்ரெண்ட் கூட இருந்தா நல்லா தான் இருக்கும்..  ஆனால் அவன் எப்படி எடுத்த உடனே லிவ் இன்னு ஆரம்பிக்கலாம் அது தப்பு தானே.." என அவளது எண்ண ஓடையை தடை செய்தது அவன் வார்த்தைகள்..


" உட்கார்ந்து பேச இப்பயாவது ஓ.கே வா.. இல்லை இன்னும் என்னை நம்பலயா.. " என அவன் கேட்க "இல்லை" என தலையசைத்தவள் அவனின் அருகில் உட்கார்ந்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்..


"ஏன் என் கிட்டே எடுத்த உடனே லிவ் இன் ரிலேஷன்ஷிப்னு கேட்டீங்க.. வீட்டை ஷேர் பண்ணிக்கலாமேனு கேட்டு இருக்கலாம்ல"


" உன்னை பார்த்த உடனே என் மைண்ட்ல

C8H11NO2+C10H12N2O+C43H66N12O12S2  chemical  reaction நடந்தது.. "


" ஹலோ என்ன இது நம்பரையும் alphabets ஐயும் கலந்தடிச்சு ஏதோ சொல்லிட்டு இருக்கே மேன்.."


" இதுக்கு பேரு தான் லவ் ஃபார்முலா டியர்... என் மூளை உன்னை காதலிக்கிறேனு சொல்லுச்சு"


" வாட் என்ன உலற..  காதல்ன்றது மனசு சம்மந்தப்பட்ட விஷயம் தானே"


" நோ பேபி மா இது முழுக்க முழுக்க மூளை சம்மந்தப்பட்ட விஷயம்.. மூளையில நடக்குற வேதியியல் மாற்றம் தான் காதல் வரக் காரணம்.. உன்னைப் பார்த்த உடனே என் மூளையில dopamine அப்படின்ற chemical உருவாச்சு... என்னாலே அதை உணர முடிஞ்சுது.. இது தான் காதல் வரக் காரணமான கெமிக்கல்" என அவன் தலையில் மூளை இருக்கும் இடத்தைக் காட்டிச் சொல்ல அவள் குழப்பத்தினூடே


" ஓ.கே அப்ப நீ  என்னை லவ் ப்ரோபஸ் பண்ணி இருக்கலாம்ல?.. y லிவ் இன்?" 


" ஓ அப்போ மேடம்க்கு நான் லவ் ப்ரோபஸ் பண்ணலனு வருத்தமா" என்றபடி அவளது கண்ணத்தை தட்ட " கேட்டதுக்கு முதலிலே பதில் சொல்லு" என அவள் கோபமாக அதட்டினாள்.. உடனே அவன் நீண்ட பிரசங்கத்திற்காக தன்னுடைய குரலை கணைத்து சரிசெய்து கொண்டான்... 


" லவ்ல மொத்தம் மூணு ஸ்டேஜ் இருக்கு மா.. அந்த மூனு ஸ்டேஜ்ம் முழுசா satisfy ஆனா தானே நான் லவ் பண்றேனு சொல்ல முடியும்.. எனக்கு இப்போ ஆரம்பிச்சது first stage தான்.. அதான் பார்த்த உடனே ஒரு ஈர்ப்பு.."


" ஓ அப்போ மீதி இரண்டு ஸ்டேஜ் என்ன என்ன?" அவள் விழி விரித்து கதைக் கேட்க அவளை ரசித்தபடி " நான் இப்போ சைன்ஸ் பேச போறேன்.. மவளே உன்னைப் பார்த்துட்டே இருப்பேன்.. தூங்குனா தலையிலேயே கொட்டு விழும்" என எச்சரித்தவன் பேசத் தொடங்கினான்..


" செகண்ட் ஸ்டேஜ் அப்போ seratonin ஒரூ கெமிக்கல் உருவாகும்...அது அட்டென்ஷன் க்ரியேட் பண்றதுக்காக உருவாகுற கெமிக்கல்.. இந்த ஸ்டேஜ்ல நாம ஒரு நல்ல இமேஜ் கிரியேட் பண்ணி அவங்க அட்டென்ஷன் கிடைக்க ட்ரை பண்ணுவோம்.. எனக்கு இந்த phase சுத்தமா பிடிக்காது.. because நிறைய பேர் இதுல நடிக்கத் தான் செய்வாங்க... அவங்களோட good part ஆ மட்டும் தான் காமிப்பாங்க.. அது மட்டும் வாழ்க்கைக்கு பத்தாதுல.. அவங்களோட வொர்ஸ்ட் பார்ட்டையும் ஏத்துக்கிட்டு லைப்பை ஸ்டார்ட் பண்றது தான் என்னைப் பொறுத்தவரை பெஸ்ட்.. சோ கூட இருந்து ஒருத்தவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணலாம்..  இந்த பார்ட் தான் தேர்ட் ஸ்டேஜ் பேரு  attachment இது  oxytocinன்ற கெமிக்கல் மூலமா உருவாகுது.. இந்த மூணு ஸ்டேஜ்ல பாஸ் பண்றவங்களோட காதல் தான் ஜெயிக்குது.. ஆனால் அந்த காதல் கொஞ்ச காலத்துலேயே வெறுத்தும் போயிடுது இந்த காலத்துல... அப்புறம் வெறும் கமிட்மென்ட்காக மட்டும்  வாழ்ந்துட்டு இருக்காங்க.. இந்த காவிய காதல் concept மேலலாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. இதெல்லாம் கதை புக்லயும் சினிமாவுலயும் வேணா நடக்கும்.. பட் நிஜத்தில அதே மாதிரி லைப் பார்ட்னர் கிடைப்பாங்கனு நாம எதிர்பார்க்கக்கூடாது.. நிஜத்தில ப்ராக்டிகலா இருக்கணும்...  பார்த்த உடனே காதல் வசப்பட்டு ஐ லவ் யூ னு சொல்லி பின்னாடி திரிஞ்சி அது கடைசியில செட் ஆகாம பிரிஞ்சு ப்ரேக் அப் ஆகி அதுனாலே ஏற்படுற வலி இருக்கே அது ஆக்ஸிடென்ட் ஆனா நம்ம உடம்புல உருவாகிற  வலிக்கு சமம்..  இதெல்லாம் brain ல இருக்குற acc அப்படின்ற இடத்துல இருந்து தான் நமக்கு அந்த வலி  ஏற்படுது.. அப்படி வலிக்கும்னு தெரிஞ்சே நான் போய் பாழங்கிணத்துல விழ மாட்டேன்.. அதை விட லிவ் டூ கெதரா இருந்து இரண்டு பேரோட உணர்வுகளும் மதிக்கப்படுதானு பார்த்து காதல் வரது எவ்வளவோ பெட்டர்... இரண்டு பேருக்கும் பிடிச்சு இருந்தா we can continue our relationship... எனக்கு கல்யாணம் மேலே இன்னும் ஒரு அடிப்படை நம்பிக்கை வரல... அப்படி நம்பிக்கை வரா மாதிரி நம்ம ரிலேஷன்ஷிப் அமைஞ்சா நாம அந்த மேரெஜ் பார்ட்க்குள்ளே என்டர் ஆகலாம்.. உனக்கும் என் மேலே லவ்னு ஒன்னு வந்தா we can start our life as a live in partner .. அதுவரை நாமே ஃப்ரெண்ட்ஸா இருக்கலாம்.. நம்ம உறவுக்குள்ளே  எந்த கமிட்மென்ட்ஸ்ம் வேணாம்... நோ மென்டல் ஸ்ட்ரெஸ் ஓ.கே. " என அவன் நீண்டதாய் பிரசங்கம் பண்ண அவள் ஆவென பார்த்தாள்... இவன் சொல்றதெல்லாம் உண்மை தான்.. ஆளைப் பார்த்தா தப்பானவன் மாதிரி தெரியல.. அப்படி தப்பா நடந்துக்க ட்ரை பண்ணாலும் நம்ம கராத்தே நமக்கு ஹெல்ப் பண்ணும்... இப்போதைக்கு ப்ரெண்டா இருக்கலாம்னு தானே சொல்றான்.. எனக்கு காதல் வந்ததுனா மீதி விஷயத்தைப் பத்தி அப்புறம் யோசிச்சுக்கலாம் என முடிவெடுத்தவள் அவனிடம் தன் சம்மதத்தை தெரிவித்தாள்..


" நான் ஒரு உண்மையை சொல்லட்டுமா.. இரண்டு நிமிஷம் கூட க்ளாஸை கவனிக்க மாட்டேன்.. தூங்கிடுவேன்.. ஆனால் நீ இவ்வளவு பேசியும் எனக்கு தூக்கம் வரல.. பிகாஸ் நீ பேசுறது வாழ்க்கையோட உண்மைகளைப் பத்தி.. எனக்கு உன்னோட எண்ணவோட்டம் பிடிச்சு இருக்கு.. அந்த ஓட்டத்துல நானும் பங்கெடுத்துக்க விரும்புறேன் ஒரு ப்ரெண்டா.. லவ் அப்படினு ஒன்னு உன் மேலே வந்தா லிவ் இன் கான்செப்ட்க்குள்ளே போலாம்...    எனக்கும் இந்த மேரேஜ் மேலேலாம் இன்ட்ரெஸ்ட் இல்லை.. அதனாலே நான் உன்னை இந்த கமிட்மென்ட்ஸ்க்குள்ளே இழுத்துவிட மாட்டேன்.. let us live together" என சொல்ல அவன் முகத்தில் திருப்தியின் சின்னமாய் ஒரு புன்னகை அரும்பியது..


வேதியியல் மாற்றம் 

   நிகழ்ந்து உன்னுள் கலந்த

என்னை பிரித்து எடுக்க

   இன்னும் எந்த ஆய்வும்

கண்டுபிடிக்கப்படவில்லை..


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.