This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 5 April 2019

Uma maheshwari's இணைந்து வாழ்வோம் (லிவ் இன்) 3


Click here to get all parts


ஐயோ என்ன இது எந்தப் பக்கம் போனாலும்  சுத்தி சுத்தி ஒரே இடத்துல வந்து நிக்குறேன் என்று முதலில் குழம்பியவள் பிறகு ஆறு சுற்று முடித்துவிட்டு ஏழாவது சுற்றில்  

கீர்த்தியின் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டாள்... 


இவள் வாசலில் நின்று காலிங் பெல் அடிக்க கதவைத் திறந்துக் கொண்டு கீர்த்தி வந்தாள்.. அவளைக் கண்டதும் கீர்த்தி  ஆசையாகக் கட்டிக் கொண்டு உள்ளே கூட்டிச் சென்றாள்.. அந்த வீடு இரண்டு பேர் தங்குவதற்கு தாரளமாகவே இருந்தது.. பின் தான் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் வைத்துவிட்டு வந்து சோபாவில் அமர அவளுக்கு டீயை கொண்டு வந்து கொடுத்தாள் கீர்த்தி..


" தேங்க்ஸ் கீர்த்தி... வீடு செமயா இருக்கு.. இன்டீரியர் டிசைனரே கலக்கிட்டீங்க போங்க.. நான் இன்னும் கொஞ்ச நாளிலே புதுசா ஒரு வீடு கட்டிடுவேன்.. அதுக்கு டிசைனர் நீ தான்.."


" செம செம என் பெஸ்ட் ப்ரெண்டுக்கு பண்ணி கொடுக்காமலயா?.."


" ஆனால் பணம்லாம் கொடுக்க மாட்டேன் டி.."


" பரவாயில்ல டி பணமா தர வேணாம்.. paytm ல டிரான்ஸ்பர் பண்ணிடு... ஆமா நீ யாரையாவது  லவ் பண்றீயா தியா?"


" லவ்வா நானா?.. உனக்கு தான் தெரியும்ல என்னைக் கண்டாலே பசங்க தெறிச்சு ஓடிடுவானுங்கனு.. அப்புறம் இந்த லவ்லாம் எப்படி?.. "


" அப்ப லிவின் ரிலேஷன்ஷிப்?"


" இல்லை டி.. கல்யாணத்து மேலேயே ஏனோ நம்பிக்கை இல்லை.. அப்படி எனக்கு நம்பிக்கை வர வைக்கிற ஒரு ஆளு வந்தா அவரைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டு என் லைப்பை ஸ்டார்ட் பண்ணுவேன்.."


" ம் அப்போ உனக்கு லிவின் ரிலேஷன்ஷிப்  தான் செட் ஆகும்... சீக்கிரம் அப்படி ஒரு பார்ட்னர் கிடைக்க வாழ்த்துக்கள்"


" தேங்க்ஸ் மா.. நீ லவ் ஏதாவது?"


" ம் யெஸ் லவ் பண்றேன் டி .. இப்போ அவன் பெங்களூர்ல வொர்க் பண்றான்.."


" சூப்பர் டி.. ஆளு எப்படி இருப்பாரு"


" செல்லம் என் ஆளைப் பத்தி அப்புறமா சொல்லட்டுமா.. எனக்கு ஒரு ப்ரோஜெக்ட் வொர்க் இருக்குடா.. டூ டேஸ்க்குள்ளே கம்ப்ளீட் பண்ணனும்.. அதனாலே என் ஆளு போன் பண்ணா கூட எடுக்குறது இல்லை.. ஒரே பிஸி தான்.. சாரி டி கோச்சிக்காத.. இந்த ரெண்டு நாள் உன் கிட்டே சரியா பேசாம இருந்தா... "


" அடச் சீ.. லூசு.. இதுக்கு எதுக்கு சாரி. முதலிலே போய் வேலையைப் பாரு.. நான் போய் தூங்கப் போறேன்.. எனக்கு டையர்டா இருக்கு. ஆல் தெ பெஸ்ட் டியர்" என சொல்லிவிட்டு தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் வந்தவள் தான் , அடுத்த நாள் காலையில் தான் வெளியே வந்தாள்...


புத்தம் புது மலராய் ஆபிஸ்க்கு கிளம்பி வந்த தியாவைப் பார்த்து "ஆல் தி பெஸ்ட் டி..  என்றாள் கீர்த்தி...  அலுவலகத்தின் முதல் நாளை தன்னம்பிக்கையோடு  கடத்தியவளின் மனதினுள் சிறிதாய் சோர்வு ஏற்பட அதைப் போக்குவதற்காக காலையில் பார்த்த  பூங்காவிற்கு செல்ல முடிவு எடுத்தாள் அதற்கு முன் பஸ் ஸ்டாப்பில் இறங்கி மாத பஸ்பாசை வரிசையில் நின்று வாங்கிக் கொண்டாள்..


ஆள்நடமாட்டம் இல்லாமல் அந்த பூங்கா அமைதியாய் இருக்க ஒரு பெரிய மரத்தை தேர்ந்து எடுத்து அதற்கு  கீழ் அமர்ந்தாள்.. கைப்பையில் இருந்து நோட்பேடையும் பேனாவையும் எடுத்தவள் சீரியசாக வாய்விட்டே  கணக்குப் போட ஆரம்பித்தாள்..


"அப்பா கொடுத்தது 20,000 கீர்த்திக்கு வாடகை 2000 தரணும்.. மீதி 8000 அதுல இருந்து அபேஸ் பண்ணிடலாம்.. அந்த 8000 வெச்சு ஒரு மாச செலவுக்கான ஓட்டிடலாம்..

இப்போ மீதி இருக்கிற 10,000 வெச்சு நம்ம ப்ளான் போட்டா மாதிரி நம்ம satisfaction காக யூஸ் பண்ணிக்கலாம்.. டன்.. என அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே செல்போன் ஒலித்தது..


"ம் சொல்லு கீர்த்தி....  என்னது உன் லவ்வர் பெங்களூர்ல இருந்து சென்னைக்கு வந்துட்டாறா?..


" ஆமாம் டி என்னை சர்ப்ரைஸ் பண்றேனு சொல்லி  ஷாக் கொடுத்துட்டாரு.. நான் வேற போனை எடுக்கல இந்த இரண்டு நாளா... இரண்டு பேரும் லிவிங் டூகெதரா இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.. இன்னைக்கு ஈவினிங்கே நீ காலி பண்ண முடியுமா டி.. பிகாஸ் அவர் கூட வரும் போது அவங்க ப்ரெண்ட்ஸையும் கூட்டிட்டு வந்துட்டாரு.. அவங்களும் லிவ் இன் ரிலேஷன்ஷிப் தான்.. இங்கேயே தங்கப் போறாங்க.. இடம் வேறப் பத்தாது.. அதுக்கு தான்... சாரி டி இப்படி  கடைசி நேரத்துல சொல்றதுக்கு..."


"பரவாயில்லை டி.. நான் பார்த்துக்கிறேன்.. இப்போ பார்க்ல தான் இருக்கேன்.. இப்படியே கிளம்பி ரெண்ட்க்கு வீடு கிடைக்குமானு பார்க்குறேன்.. அப்புறமா பேசுறேன் .. பை டி.." என்றவள் போனை வைத்துவிட்டு தான் போட்ட கணக்கை எடுத்துப் பார்த்தாள்..


" போச்சு போச்சு எல்லாம் போச்சு.. இப்போ போய் வீடு தேடுனா கண்டிப்பா 5000 க்கு மேலே இருக்கும்.. அப்புறம் சாப்பாடு தனியா வாங்குறதுக்கே காசு செலவாகிடும்.  நான் போட்ட ப்ளான் வேஸ்ட்டா போச்சே..அப்போ அந்த 10,000 க்கு என்ன பண்ணுவேன்.. ஆமாம்  முதல்ல இப்போ எப்படி வீட்டை தேடுறது.. யாரு வீடு தருவா?" என வாய்விட்டு புலம்பிக் கொண்டு இருந்தாள்.. 


" நான் வீடு தரேன்" என ஒரு ஆண் மகனின் குரல் கேட்க இவள் பார்வையை உயர்த்தினாள்.. சரியாக அந்த நேரம் பார்த்து  மரத்தின் மேல் அமர்ந்து இருந்த ஒருவன் கீழே குதித்தான்..  அதில் பதறிப் போய் கீழே தடுமாறி விழப் போக அவள் இடுப்பை வளைத்து கீழே விழாமல் பிடித்தான்..


விழுந்தால் வலிக்கும் 

   என நினைத்து இருந்த

நான் இன்று இனிக்கும்

    என்பதையும் உணர்ந்தேன்

உன் காதலில் விழுந்ததால்..


அவன் கைவளைவுக்குள் வாகாக சிக்கியவள் அதில் சிக்கியபடியே அவனைப் பார்த்தாள்... படியாமல் அவன் நெற்றியில் புரண்டு இருந்த அவனது கேசமே சொன்னது இதற்கு சொந்தக்காரன்  யாருக்கும் அடங்க மாட்டான் என.. அழுத்தமான உதடுகளாய் இல்லாமல் சிரிப்பை சிறை செய்து வைத்து இருக்கும் உதடுகள்... இது வரை யாரையும் எடைபோட்டது இல்லை என தானாய் சொன்ன கண்கள்.. அறிவு மட்டும் இல்லை ஆளும் வளர்ந்து இருக்கிறேன் என கம்பீரமாய் வளர்ந்த உருவம்.. ஒரு கையில் கேமரா.. மற்றொரு கையில் நான்.. ம் பராவாயில்லை மொத்தத்தில் வசீகரிக்கும் ஆண்மகனாய் தான் இருந்தான்.. 


இவள் இரண்டு கண்களை உருட்டிப் பார்க்க அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.. நெற்றியில் விழுந்த அவளது முடியை விலக்கியவாறு " சொல்லுங்க மேடம்.. நான் வீடு கொடுத்த உங்களுக்கு ஓகே வா" என்றான் உதட்டில் சிரப்போடு, கண்களில் குறும்பு மின்ன..


முதல் முறை ஒரு ஆண் கரம் பட்ட சிலிர்ப்பில்  அதுவரை உறைந்து இருந்தவள் அவன் பேசியதும் தான் கரைந்து தன் நிலைக்கு வந்தாள்.. 


அவன் வீடு இருக்கிறது என சொல்லியதும் அப்போதைக்கு அவளைக் காக்கும் ரட்சகனாய் அவன் தோன்றினான்.. 


" உங்கள் வீடு காலியா இருக்கா?" என்று நம்பிக்கையோடு அவன் முகத்தைப் பார்த்துக் கேட்க அவனோ  " காலியாலாம் இல்லை.. ஏற்கெனவே நான் தங்கி இருக்கேன்.. நீயும் வந்தா வீட்டை ஷேர் பண்ணிக்கலாம்.. ஐ மீன் லிவின் ரிலேஷன்ஷிப்" என்று கூலாக முடித்தான்...


" வாட்???!!!"  என்று கோபத்தின் பிரதிபலிப்பாய் அவளது கை அவனை நோக்கி ஓங்கியது..

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.