Raagaa's recipes:
தமிழகத்திற்கு ஒரு நார்த்தங்காய் ஊறுகாயை போல, கேரளத்திற்கு விருப்பமான ஒன்று இஞ்சி புளி. பொதுவாய் ஓணத்தின் போது சமைக்கப்படும் பாரம்பரிய உணவுகளில் தனக்கென தனி இடம் பிடித்து கொண்டது இது. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று நாமும் சுவைத்து பார்க்க வேண்டாமா?
தேவையானவை:
இஞ்சி - 50 கிராம்,
பச்சை மிளகாய் - 10,
கெட்டியான புளிக் கரைசல் - 50 கிராம்,
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,
வெல்லம் - சிறிதளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியைத் தோல் சீவி, பொடியாக நறுக்கி, ஒன்றிரண்டாக இடிக்கவும். பச்சை மிளகாயையும் இடித்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து... நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, சுருள வதக்கவும்.
இதில் புளிக் கரைசல், உப்பு, மஞ்சள்தூள், வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.
இதை தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ளலாம். ஒரு வாரம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment