வெண் நிலவின் குளிர்ந்த சூழல், தோட்டத்தில் கமழும் மகிழம் பூக்களின் வாசனை, இதமான தென்றலில் இவை அனைத்தும் கலந்து சுவாசிக்கும் பொழுது, எந்த ஒரு மனிதனினும் மனம் மயக்கிப்போவான்.
ஆனால் வருணால் இதை ரசிக்க முடியவில்லை. அவன் இயல்பிலேயே இயற்கையை ரசிப்பவன் தான், இன்று காலையில் நடந்த சம்பவம் அவன் மனதை மிகவும் பாதித்திருந்தது. வருண் தனது அறையில் குறுக்கு, நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்.
"என்ன ஒரு திமிரு? என்னை அத்தனை பேருக்கு முன்னாடி எவ்வளவு தைரியம் இருந்தா அவ அவ்வளவு மட்டமா பேசியிருப்பா? சென்னையில நான் ஒரு தடவ பேச மாட்டேனா, பழக மாட்டேனான்னு எத்தனை பொண்ணுங்க என் பின்னால சுத்தி சுத்தி வந்திருப்பாங்க? இருந்து, இருந்து ஒரு கிராமத்துப் பொண்ணு என்னை என்னவெல்லாம் பேசிட்டா, அவள...."
என கண்ணு மண்ணு தெரியாமல் கோபமாக திட்டி கொண்டிருந்தவன், 'முதல்ல அவ எங்க இருக்குறான்னு தேடி கண்டுபிடிக்கனும்" என்று நினைத்து கொண்டு இருந்த போதே மனம் தன்னிச்சையாக காலையில் லட்சுமி அம்மாவிடம் கொஞ்சி, கொண்டு இருந்தவளை நியாபகம் படுத்தியது. ஏனெனில் இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது, இடை வரை நிண்ட கருத்த கூந்தல். வருண் மனது அதை பற்றி சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம்....
வருணியின் வீட்டில் வித்தியா, "அக்கா, என்ன இன்னிக்கி கோயில்ல அந்த ஆளு மேல அப்படி கோபமாயிட்ட" என்று வினாவினாள்.
"பின்ன என்ன வித்தியா? நீயே பார்த்தல்ல. அவன் வந்தாதே தப்பான சைடுல, இதில என் புது டிரஸ்ல குங்குமத்தை வேற கொட்டிடானேடி. சரி ஓகே, அதுக்கு ஒரு சாரியாச்சும் கேட்டானா? வீட்டுக்கு வந்ததும் அம்மா என்ன திட்டு தீத்துட்டாங்க... எல்லா அவனால வந்தது" என்றாள் ஆற்றாமையோடு.
"அக்கா எல்லா ஓகே தான். ஆனா ஒரு சின்ன விசயம் சொல்ல வா" என்றாள்.
"என்னடி? என்ன சொல்ல போற" என்றாள் வருணி.
"ஒன்னும் பெரிய விசயம் இல்ல நீ காலையில திட்டினியே, அந்த எரும மாடு. அது வேற யாரும் இல்லக்கா நம்ம பெரிய்யாவோட மகன்" என்று வித்தியா வருணியின் மனதில் ஒரு அணுகுண்டையே போட்டு உடைத்தாள்.
அது அவளது செவிகளுக்குள் நுழைந்ததும் சர்வமும் அடங்கி போயிற்று வருணிக்கு, "அய்யோ, உனக்கு எப்படி இது தெரியும், யார் சொன்னங்க" என்று ஊசிப்பட்டாசாய் படபடத்தாள் வருணி.
"நீ சண்ட போட்டுட்டு போன கொஞ்ச நேரம் கழிச்சி, உங்க ஹெச்எம் அதுதான் அக்கா உன் ஸ்கூல, உன் பின்னாடியே சுத்துதே அந்த ஜொள்ளு வண்டி பாண்டியன், அந்தாளு தான் என்னை கூப்பிட்டு, 'தர்மகர்த்தா பையன் கிட்ட என்ன பேசுனாங்க உங்க அக்கா, அவன்கிட்ட பார்த்து பேச செல்லு அவள. அவன் ஒரு மாதிரியான ஆளு' ன்னு சொன்னாருக்கா" என்றாள்.
வருணிக்கு ஒன்றும் புரியவில்லை
'அப்பாவிடம் மாட்டி விட்டுவானோ?குங்குமம் துணியில் கொட்டியதர்க்கே அம்மா அந்த திட்டு திட்டுனங்க, இன்னும் அவன் செய்தான் என்றால் அவ்வளவு தான். நான் வேலைக்கு போகவே அம்மாட்ட கஷ்டப்பட்டு பர்மிஷன் வாங்கினேன், அதிலேயும் நிறைய ருல்ஸ் போட்டுத்தான் அலவ் பண்ணாங்க, இப்ப இது வேறயா! " என்று மனம் லேசாக கலங்கதான் செய்தது வருணிக்கு.
இருந்தாலும் ஒரு நம்பிக்கையில், "அப்படி அவனுக்கு நான் யார்னு தெரிஞ்சிருந்தா, இன்னிக்கி காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் நாம எல்லாரும் கோயில்ல தானே இருந்தோம். அப்போவே அப்பாகிட்ட அவன் என்னை பத்தி குறை சொல்லி மாட்டிவிட்டு இருக்கலாமே. இது வரைக்கும் அவன் எதுவும் சொல்லலைனா, நான் யார்னு அவனுக்கு தெரியாதுன்னுதான அர்த்தம். அது மட்டும் இல்லாமல் எவ்வளவு நாள் இந்த ஊர்ல இருக்க போகிறான்? அவங்க குடும்பம் வந்ததே இந்த திருவிழாவுக்காக தானே, அதுதான் முடிஞ்சிருச்சே... அப்புறம் என்ன? விடுடி பார்த்துக்கலாம்" என்று வித்தியாவுக்கு கூறுவது போல் தனக்கும் சமாதானம் கூறி கொண்டாள் வருணி.
ஆனால் விதி இவர்கள் வாழ்க்கையில் இனி நடக்கப்போவதை நினைத்தது எகத்தாளமாய் சிரித்து கொண்டிருந்தது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
No comments:
Post a Comment