This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 13 December 2018

Sambar sadam | Easy lunch box ideas

VICKEY'S RECIPES :)
மிகவும் சுவையான இந்த சாம்பார் சாதம் எங்க பேமிலில எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும்.வாரத்துல ஒரு தடவையாவது இந்த ரெசிபி எங்க வீட்டு மெனுல  கண்டிப்பா இருக்கும் . எங்க வீட்ல மட்டும் இல்ல தமிழ்நாடு எல்லா ஹோட்டலையும் இந்த லஞ்ச் மெனு இருக்கும் குறிப்பா சரவணா பவன்ல இது ரொம்ப பேமஸ் .கூடவே மொறு மொறுனு அப்பளம் பொரிச்சு வச்சு சாப்பிடுவோம் . நாங்க வீட்ல பிரெஷா மசாலா பொடி அரைச்சி சேர்ப்போம் . பொடி அரைக்க முடியாதவங்க ரெடிமேட் சாம்பார் பொடி கூட சேர்க்கலாம்.  சாம்பார் , ரைஸ் தனி தனியா வைக்கறதுக்கு பதிலா ரெண்டையும் சேர்த்து இந்த மாதிரி கலவை சாதம் போல செய்யலாம். இதே ரெசிபி கர்நாடக சைடுல பிஸிபேளாபாத் மாதிரி பண்ணுவாங்க அதுக்கு சில மசாலா பொருள் மட்டும் வேறுபடும் அவ்ளோ தான் .

தேவையான பொருட்கள்

மசாலா பொடி ( வறுத்து , அரைக்க )

எண்ணெய் -1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலை பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி விதை - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 / 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 / 4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
பெருங்காயம் - 1 / 4 டீஸ்பூன்

வேக வைக்க வேண்டிய பொருட்கள்

அரிசி - 3 / 4 கப்
துவரம் பருப்பு - 1 / 2 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 3
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
தண்ணீர் - 4 - 5 டம்ளர்
உப்பு தேவையான அளவு

வதக்க வேண்டிய பொருட்கள்

எண்ணெய் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1
பச்சை மிளகாய் -1
புளி சாறு - 1 ஸ்பூன்

தாளிக்க வேண்டிய பொருட்கள்

நெய் - 2 ஸ்பூன்
கடுகு - 1 / 4 ஸ்பூன்
கறிவேப்பில்லை
காய்ந்த மிளகாய் - 1
முந்திரி பருப்பு - 10

கொத்தமல்லித்தழை அலங்கரிக்க

செய்முறை


  • வறுத்து பொடிக்க வேண்டிய பொருட்களை மிதமான சூட்டில் ஒரு 2 நிமிடம் வதக்கவும் . ஆறிய பின் பொடித்து கொள்ளுங்கள். 

  • அரிசி , பருப்பை நன்றாக தண்ணீர் அலசி ஒரு 20 நிமிடம் ஊற வைகுங்கள் . பின் குக்கரில் அரிசி, பருப்பு , வெட்டிய காய்கறிகள் சேர்க்கவும் . நான் இங்க கேரட் , பீன்ஸ் சேர்த்துளேன் . (அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முருங்கைக்காய் , பட்டாணி சேர்த்து கொள்ளலாம்). கூடவே மஞ்சள் தூள் , உப்பு , தண்ணீர் எல்லாம் சேர்த்து ஒரு 3 முதல் ௫ விசில் வேக வைகுங்கள்.

  • அரிசி வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம் , பச்சை மிளகாய் ,தக்காளி சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும் . பின் புளிச்சாறு சேர்க்கவும் .
  • அடுத்து வெந்துள்ள அரிசி பருப்பு கலவையில் வதக்கிய வெங்காயம் ,தக்காளி , பொடித்து வைத்துள்ள மசாலா பொடி சேர்த்து கிளறவும் .

  • கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் தாளித்து அரிசி பருப்பு கலவையில் சேர்க்கவும் . கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

குழைவான சாம்பார் சாதம் ரெடி . கூடவே அப்பளம் சேர்த்து வச்சு லஞ்ச்கு

பேக் பண்ணி குடுங்க. 


குறிப்பு:

  • மசாலா பொடி அரைக்க முடியாதவங்க ரெடிமேட் சாம்பார் பொடி ஒரு 2 அல்லது 3 ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்.
  • அதே மாதிரி எல்லாம் தனி தனியா பண்றதுக்கு நேரம் இல்லாதவங்க குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் , தக்காளி வதக்கிட்டு காய்கறிகள் , அரிசி , பருப்பு சேர்த்து வேக வையுங்கள் . வெந்த பின் பொடி , புளிச்சாறு சேர்த்து பிரட்டுங்கள் .










No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.