This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday, 13 December 2018

Kitchen rules


VICKEY :)

"கிச்சன் ரூல்ஸ்" டைட்டில் பார்த்த உடனே ஏதோ ரூல்ஸ் எல்லாம் சொல்ல போறாங்க போல அப்டினு நினைச்சீங்கனா சத்தியமா சொல்றேன் அப்டிலாம் ஒன்னும் இல்லேங்க . ரீசெண்டா walmart  கடைல இந்த கார்பெட் பாத்தேன் . அதில் இருந்த வாசகம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு சரி உங்க எல்லார் கூடையும் இத ஷேர் பண்லாம்னு தான் இந்த போஸ்ட் போட்டேன்.

KITCHEN RULES


  • 'Cook with love' - அன்போடு சமைக்கணும்னு  சொல்றாங்க. நான் chef damu குக்கிங் ஷோ பாத்துருக்கேன் அதுல அவரும் இந்த quote அடிக்கடி சொல்வாரு . நிஜமா சொல்றேன் சமைக்கும்போது எந்த டென்ஷன் , சலிப்பும் இல்லாம ஒரு அன்போட நம்ம பேமிலி , ப்ரண்ட்ஸ்காக பன்றோம் நினைச்சுக்கிட்டாலே அந்த ரெசிபி டேஸ்ட் சூப்பரா இருக்கும்.
  • ' say please and thank you' - கஷ்டபட்டு சமைச்சவங்களுக்கு நீங்க தங்க வளையல், மோதிரம் எல்லாம் போடணும்னு அவசியம் இல்ல . atleast ஒரு thank you சொல்லுங்க . சமைச்சதுல எதாவது குறை அல்ல ஏதும் பிடிக்கலேன்னாலும் please அடுத்து தடவ இத கரெக்ட் பண்ணிக்கோன்னு சொல்லுங்க . நம்ம ஒரு விஷயத்தை convey பண்ற விதத்துல தான் எல்லாம் இருக்கு . 'என்ன சமையல் பண்ணிருக்க ' அப்டினு சொல்றதுக்கும் ' ப்ளீஸ்' சொல்ற விதத்துக்கும் எவ்ளோ வித்யாசம் இருக்கும் . சோ நெஸ்ட் டைம் ட்ரை பண்ணுங்க .
  • 'Bless the food ' - சாப்பிட்றதுக்கு முன்னாடி கடவுள் , விவசாயிக்கு முடிஞ்சா ஒரு நன்றி சொல்லுங்க. 
  • 'Enjoy the company' - தனியா நம்ம மட்டும் உட்காந்து சாப்பிட்றதுக்கும் , ப்ரண்ட்ஸ் மற்றும் பேமிலி ஓட சேர்ந்து உட்காந்து சாப்பிட்றதுக்கு உள்ள சந்தோசமே தனி தான் . ப்ரண்ட்ஸ் ஓட சாப்பாடு ஷேர் பண்ணி சாப்பிட்டு ஒருத்தர ஒருத்தர் கலாய்ச்சு சாப்பிடற enjoyment வேற லெவல் தான் . ப்ரண்ட்ஸ் மட்டும் இல்ல வீட்ல கிடைக்கிற டைம்ல  பேமிலி , பசங்க கூட உட்காந்து சாப்பிட்டு டைம் ஸ்பென்ட் பண்ணுங்க . லைப் ஜாலி தான் :)
  • 'Try a new recipe ' -லைப் ஒரு மாதிரி போய்ட்டு இருந்த கண்டிப்பா போர் அடிக்கும் . அதே மாதிரி சாப்பாடும் . ஒரே மாதிரி சாப்பாடு நம்ம வச்சுட்டே இருந்த வீட்ல எல்லாருக்கும் போர் அடிச்சுடும் . ஒரே ஸ்டைல் சிக்கன் கிரேவி அடிக்கடி நான் வைப்பேன் அந்த டேஸ்ட் நெறய சாப்டாச்சு சோ வேற ஸ்டைல்ல வைனு வீட்ல உள்ளவங்க சொன்னாங்க . அப்போ நினைச்சேன் எப்போவும் ஒரே மாதிரி வைக்க கூடாது . எப்போவும் புதுசு புதுசா ட்ரை பண்ணிட்டே இருக்கனும்.


'உன் சமையலறையில்' ஒரு படம் அதுல intro song நெறய பேர் பாத்துருப்பீங்க . "இந்த பொறப்பு தான் நல்ல ருசிச்சு சாப்பிட கிடைச்சது ......" இளையராஜா இசை + lyrics + சாப்பாடு visuals சூப்பரா இருக்கும் . நம்ம எல்லாரும் ஒவ்வொரு ஊருக்கு போன என்ன பண்ணுவோம் அந்த ஊர்ல எந்த சாப்பாடு , எந்த ஹோட்டல் பேமஸ்னு தேடி கண்டு பிடிச்சு சாப்பிடுவோம். 
 இருக்குறது ஒரு லைப் , சம்பாதிக்கிறது எதுக்கு நல்ல சாப்பிட்டு ஹெல்த்தியா இருக்குறதுக்கு தான் . சோ கிடைச்ச இந்த லைப்ல நல்ல ரசிச்சு ருசிச்சு புது புது ரெசிபியா சாப்பிடுங்க . ஹாப்பியா இருங்க :)


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.